குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி
நாளான நேற்றுடன், ஏழு லட்சம் பேர் விண்ணப்பித்தனர். நகராட்சி கமிஷனர்,
தலைமைச் செயலகத்தில் உதவிப்பிரிவு அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு,
குரூப்-2 நிலையில், 3,631 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, கடந்த
மாதம் 13ம் தேதி டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது.
பட்டதாரிகள்,
இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து வந்தனர். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க,
நேற்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு நிலவரப்படி
விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை ஏழு லட்சத்தை தாண்டிவிட்டதாக, தேர்வாணையச்
செயலர் உதயசந்திரன் தெரிவித்தார். தேர்வுக் கட்டணத்தை, 17ம் தேதி வரை
செலுத்தலாம்.
வி.ஏ.ஓ., தேர்வு:வி.ஏ.ஓ., தேர்வுக்கு,
ஒவ்வொரு நாளும் 75 ஆயிரம் பேர் வரை விண்ணப்பிப்பதாக, செயலர் தெரிவித்தார்.
இதே நிலையில் சென்றால், 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பிப்பர் என
எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வளவு பேருக்கும், எத்தனை தேர்வு மையங்களைப்
பார்ப்பது, தேர்வை எப்படி நடத்தி முடிப்பது என, இப்போதே தேர்வாணையம்
தீவிரமாக யோசித்து வருகிறது