PAGEVIEWERS

தமிழக முதல்வர் ஜெயலலிதா பொங்கல் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

உலகெங்கும் வாழும் தமிழர்கள் உள்ளம் மகிழ்ந்து கொண்டாடும் உழவர் திருநாளாம் பொங்கல் திருநாளில், அனைவருக்கும் எனது இதயம் கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மிகவும்  மகிழ்ச்சி அடைகிறேன்.
சாதி வேறுபாடுகளை மறந்து சகோதரத்துவத்துடன், பொங்கும் மகிழ்ச்சியை வெளிக்காட்டும் விதத்தில் கரும்பு, மஞ்சள், வாழை ஆகிய விளை பொருட்களை வைத்து, புதுப் பானையில் அரிசியிட்டு, “பொங்கலோ பொங்கல்” என்று மகிழ்ச்சிக் குரலிட்டு இறைவனை வணங்கி கொண்டாடும் பண்டிகை  பொங்கல் பண்டிகை ஆகும்.

 பிற பணி என்ற பெயரில், பள்ளிக்கூட பணிகளை கவனிக்காத, தலைமை ஆசிரியர்களுக்கு, ஆறு முக்கிய விதிமுறைகளை விதித்து, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி... பள்ளி வேலை நாட்களில் தலைமை ஆசிரியர்கள், பிற பணிக்காக வெளியூர் செல்ல, சி.இ.ஓ.,வின் முன்அனுமதியை பெற வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.
அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களில் சிலர்பள்ளி வேலை நாட்களில்பிற பணி என்ற பெயரில்,வெளியூர் செல்வதும்சொந்த பணிகளை கவனிப்பதாகவும்அரசின் கவனத்திற்கு புகார் சென்றதுஇதனால்,அலுவலக பணிகளுடன்மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படுவதை தவிர்க்கபள்ளிக் கல்வித்துறைபுதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.


 பத்தாண்டுகளுக்கு பிறகு, பயணிகள் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. பயணிகளை அதிகம் பாதிக்காத வகையில், உயர்த்தப்பட்டுள்ள கட்டணங்கள் மூலம், 6,600 கோடி ரூபாய் திரட்ட, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கூடுதலாக கிடைக்கும் தொகை மூலம், மிக மோசமான நிலையில் இருக்கும், ரயில் சேவைகள் ...