PAGEVIEWERS

list of Associations/Individuals/Writ Petitioners called for personal hearing by the Pay Grievance Redressal Cell

Date : 09.07.2012 to 11.07.2012
Venue : Conference Hall of the State Council for Higher Education, Lady Wellington
College Campus, Kamarajar Salai,Chennai- 600 005

                                                படிவங்கள்   






  • HBA application for collector office(3set) Click Here 










தேவையை விட அதிகம் உள்ள பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியருக்கு பணியிட மாறுதல் மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு


     தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையில், பள்ளிகளின் தேவையை விட கூடுதலாக பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை, தேவை உள்ள பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்யும் கலந்தாய்வு, 13ம் தேதி முதல் நடக்கிறது.

        இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, 30 மாணவருக்கு, ஒரு ஆசிரியர் என்ற வீதத்திலும்; 6, 7, 8 ஆகிய வகுப்புகளில், 35 மாணவருக்கு, ஒரு ஆசிரியர் என்ற வீதத்திலும் இருக்க வேண்டும். ஆகையால், கூடுதலாக உள்ள பட்டதாரி ஆசிரியர் மற்றும் பற்றாக்குறை உள்ள பள்ளிகள் குறித்து, விவரம் சேகரிக்கப் பட்டது. 
        அதன் அடிப்படையில், தேவையுள்ள பள்ளிகளுக்கு ஆசிரியர்களை மாற்றுவதற்காக, கலந்தாய்வு நடத்தப்படுகிறது. பள்ளிக்கல்வி இயக்கத்தின்கீழ் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியருக்கு, 13ம் தேதி துவங்கி, 30ம் தேதி வரையும்; தொடக்கக் கல்வித் துறையின்கீழ் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியருக்கு, 21ம் தேதி துவங்கி, 31ம் தேதி வரையும், பணி நிரவல் (கூடுதல் ஆசிரியர் பணியிட மாற்றம்) மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடக்கிறது.
 

அனைத்து தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளின் காலிப் பணியிடம்/ கூடதல் தேவையுள்ள பணியிடம் / உபரி பணியிடம் ஆகியவற்றை 01.07.2012 நிலவரப்படி தொடக்கக்கல்வி அலுவலர் கோரியுள்ளார் மேலும் உபரி பணியிடம் உள்ள பள்ளியின் இளையவரையே (Junior Most) குறிப்பிட ஆணை

 

Elementary Dept General Transfer/ Deployment Counselling Schedule

RTI சட்டப்படி குறிப்பிட்ட பள்ளியில் இடம் கோர முடியாது : சென்னை உயர் நீதிமன்றம்அறிவிப்பு ;-

மாணவ சேர்க்கைக்கு இடம் வழங்கும் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், தாங்கள் குறிப்பிட்ட பள்ளியில் சேர்க்கை கோர முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.குறிப்பிட்ட பள்ளியில்தான் சேர்க்கை வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,
அனைவருக்கும் இலவசக் கல்வி என்ற சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் 25% ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கல்வி அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆனால், தாங்கள் குறிப்பிட்டு ஒரு பள்ளியில் சேர்க்கை பெற வழிமுறை இல்லை என்றும், அனைவருக்கும் இலவசக் கல்வி என்ற சட்டம் அமலாக்கப்படுவதை கண்காணிக்க அமைப்பு இல்லை என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

துறைத் தேர்வு - புத்தகங்கள் பதிவிறக்கம் செய்க

 Departmental Test- Books To Download
List of Books
Constitution Of India
Fundamendal Rules of Tamilnadu
Tamil Nadu State and Subordinate Rules
Travelling Allowance Rules-2005  (Annexure I)
Tamil Nadu Budget Manual - Volume I (Pages 1-96 97-218)
Tamil Nadu Pension Rules, 1978 (Pages 1-80,  81-150, 151-270, 271-340 )
Tamil Nadu Treasury Code - Volume I (Pages 1-76,  77-150, 151-220, 221-296, 297-380, 381-423 )
Tamil Nadu Treasury Code - Volume II (Pages 1-102,  103-300, 301-357 )
Tamil Nadu Account Code- Volume I (Pages 1-88 89-152)
Tamil Nadu Account Code- Volume II (Pages 1-86 87-175)
Tamil Nadu Account Code- Volume III (Pages 1-88,  89-188, 189-288, 289-388, 389-511)
Tamil Nadu Financial Code - Volume I (Pages 1-100,  101-190, 191-290, 291-400, 401-520, 521-641 )
Tamil Nadu Financial Code - Volume II (Pages 1-180,  181-340, 341-490, 491-600 )
அரசுப் பணியாளர் காப்பீட்டுத் திட்டத்தில் மேலும் 61 மருத்துவச் சிகிச்சைகளை சேர்த்தும், வீடு கட்டும் திட்டத்திற்கான, முன்பண உச்ச வரம்பை உயர்த்தியும், முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசின் செய்திக்குறிப்பு:
தற்போது அதிகரித்து வரும் கட்டுமானப் பொருட்களின் விலையேற்றத்தை கருத்தில் கொண்டு, கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் அரசு ஊழியர்களுக்காக வழங்கப்படும், வீடு கட்டும் முன்பணக் கடன் உச்ச வரம்பு, 15 லட்சத்தில் இருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட் டது. அகில இந்திய பணி அலுவலர்களுக்கான வீடு கட்டும் முன்பண உச்சவரம்பு 25 லட்சத்தில் இருந்து 40 லட்சம் ரூபாயாக உயர்த்தி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அரசுப் பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மேம்படுத்தி, வரும் நான்கு ஆண்டுகளுக்கு, அதாவது இன்று முதல் வரும் 2016ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி வரை நீட்டித்து, மத்திய அரசின் பொதுத் துறை
நிறுவனமான, "யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்" நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தவும் உத்தரவிட்டார். இதை மேம்படுத்த, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், ஏற்கனவே ஒப்பளிக்கப்பட்ட 52 மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகளுடன், கூடுதலாக 61 மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 113 மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு இத்திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.

மேலும், ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச மருத்துவக் காப்பீட்டு நிதியானது இரண்டு லட்சத்தில் இருந்து நான்கு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அளவிற்குட்பட்டு எத்தனை முறை வேண்டுமானாலும், அரசு ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ், அரசு பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் உள்ளிட்ட 13 லட்சத்து 50 ஆயிரம் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பயன் பெறுவர்.

1.1.2009 பின் இடைநிலை ஆசிரியராக நியம்மனம் செய்யப்பட்டவர் உச்ச நீதி மன்றம் தீர்ப்பு படி மாவட்ட மாறுதல் கோர தகுதியற்றவர் .எனவே நமது TATA 
இயக்கம் மாறுதல் வழங்க வேண்டும் என டெல்லி  உச்ச நீதி மன்றத்தில் ஏற்கனவே தொடர்ந்துள்ழது ..இந்த நிலையில் தற்ப்போது நடை பெற உள்ள 
மாறுதலை  டெல்லி வழக்கு முடியும் வரை நிறுத்தி வைக்க வேண்டும் என 
சென்னை உயர் நீதி மன்றத்தில் 21.06.2012 வழக்கு தொடர்ந்து விசாரணை நடந்தது .அதில் உச்ச நீதி மன்றத்தை அணுகுங்கள் கூறிவிட்டார் ..மீண்டும் நமது வழக்கை விரைந்து முடிக்க இயக்கத்தில் பணம் இல்லை ..எனவே 2009 
நியமன ஆசிரியர்களே உங்கள் பங்கு தொகை ரூ 2000/= பொது செயலாளர் முகவரிக்கு அனுப்புங்கள் ...நன்றி S.C..KIPSON..235,NORTH STREET ,PARAPPADI..627110,,,NANGUNERI  ,,T.K.   NELLAI  .DIST..      CELL  ;9443464081,,9840876481,,




      CASE COPY  DOWNLOAD HERE 


       OUR CASE SUPREME  COURT ORDER
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்பதவியுயர்வு கலந்தாய்வு ஜூலை 30இல் நடைபெறுகிறது. பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் ஜூலை 13-ந் தேதி தொடங்குகிறது
பணிநிரவல் கவுன்சிலிங்
1. ஜுலை 13 மற்றும் 14-ந் தேதி (வெள்ளி, சனி) - மாவட்டத்திற்குள் பணிநிரவல் (அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும்)

2. 16 மற்றும் 17-ந் தேதி (திங்கள், செவ்வாய்) - மாவட்டம் விட்டு மாவட்டம் பணிநிரவல்


இடமாறுதல் கவுன்சிலிங்

3. 23-ந் தேதி (திங்கள்) - இடமாறுதல் கவுன்சிலிங் (அதே மாவட்டம்- அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்களும்)

4. 24-ந் தேதி (செவ்வாய்) - இடமாறுதல் கவுன்சிலிங் (வெவ்வேறு மாவட்டம்-அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்களும்)


5. 27-ந் தேதி (வெள்ளி) - ஆசிரியர் பயிற்றுனர் பட்டதாரி ஆசிரியராக பணிமாறுதல்


இடைநிலை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்


6. 30-ந் தேதி (திங்கள்) - பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) - ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்கள்

மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பதவி உயர்வு மற்றும் பணி மாற்றம் விவரம்


மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் 14.6.2012 அன்று தலைமைச் செயலகத்தில், 2011-2012ஆம் கல்வியாண்டில் தமிழைமொழிப் பாடமாகக் கொண்டு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்தினார்கள்.


மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் 14.6.2012 அன்று  தலைமைச் செயலகத்தில், 2011-2012ஆம் கல்வியாண்டில் தமிழைமொழிப் பாடமாகக் கொண்டு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்தினார்கள்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அரசு, மாணவ சமுதாயத்தின் நலனிற்காகவும், அவர்கள் கல்வியில் சிறந்து விளங்கிட ஊக்குவிக்கும் வகையிலும், கட்டணமில்லா கல்வி, சத்துணவு, பேருந்து பயணஅட்டை, மிதிவண்டிகள், மடிக்கணினிகள், சீருடைகள், பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பை, கணித உபகரணப் பெட்டி, வண்ணப் பென்சில்கள், புவியியல் வரைபட புத்தகம், காலணிகள், ஆன்-லைன் மூலம் வேலைவாய்ப்பு பதிவு வசதி, கல்வி பயிலுதலில் இடைநிற்றலைக் குறைக்க ஊக்கத் தொகைகள் ஆகிய எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
2011-2012ஆம் கல்வியாண்டில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு மாநில அளவில் முதல் இடம் பெற்ற மாணவி எஸ். சுஷ்மிதா-க்கு 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு, இரண்டாம் இடங்களைப் பெற்ற மாணவி டி. கார்த்திகா, மாணவர்கள் பி. அசோக் குமார், சி. மணிகண்டன் ஆகிய மூன்று மாணவ, மாணவிகளுக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு, மூன்றாம் இடங்களைப் பெற்ற பி. மகேஸ்வரி, எஸ். பிரபா சங்கரி ஆகிய இரண்டு மாணவிகளுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு என 6 மாணவ மாணவிகளுக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசினை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கி வாழ்த்தினார்கள்.
மேலும், 10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்

          SSA    ---SSA  ----SSA -----SSA----SSA


"சர்வ சிக்ஷா அபியான் - எஸ்.எஸ்.ஏ., - எனும் திட்ட அலுவலர்கள், வேறு பணிக்கு மாத்திக்கிட்டு போயிடலா மான்னு யோசிக்கிறாங்க பா...'' என, கடைசி தகவலைக் கூறினார் அன்வர்பாய்.

""ஏன் வே... இந்த திட்டம் தான், நாடு முழுக்க, "ஓஹோ'ன்னு, கொடி கட்டிப் பறக்குதே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.

""திட்டம் நல்லது தான்... அதுல இருக்கற கருத்தாளர்களுக்கு, இப்ப, புதுப் பணி ஒண்ணு போட்டிருக்காங்க... நம் மாநிலத்துல முப்பருவ கல்வி முறை சம்பந்தமா, ஆசிரியர்களுக்கு இவங்க தான் பயிற்சி கொடுக்கறாங்க... இதுக்கான ஏற்பாட்டை, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தான் செய்யுது... இதுக்கு, எஸ்.சி.இ.ஆர்.டி.,ன்னு பேரு...""ஆனா, பயிற்சி நடக்குற இடங்கள்ல, குடிநீர், சாப்பாடு, நாற்காலின்னு எந்த அடிப்படை வசதியுமே இல்லியாம்... ஆசிரியர்கள் பசிக்குதுன்னு கேட்டா, கருத்தாளர்கள், சொந்த பணத்தைச் செலவு செய்ய வேண்டி இருக்கு... ரெண்டு திட்ட அதிகாரிகளும் கண்டுக்கறதே இல்லியாம்... அதனால தான், இந்தப் பணியே வேண்டாம், வேறு வேலைக்குப் போயிறலாம்ங்கற மனநிலைல, இந்த கருத்தாளர்கள் இருக்காங்க பா...''
 என, மூச்சு விடாமல் கூறி முடித்து எழுந்தார் அன்வர்பாய்; பெஞ்ச் கலைந்தது.

 நன்றி:

டீ கடை பெஞ்சு
டி.இ.டி., தேர்வுக்கான விண்ணப்பத்தில், மொழிப்பாடத்தை அதிகமானோர் குறிப்பிடாததால், தேர்வு மையத்தில் தேர்வு செய்ய, டி.ஆர்.பி., அனுமதி வழங்கியுள்ளது.

ஜூலை 12ம் தேதி, டி.இ.டி., தேர்வு நடக்கிறது. காலையில், முதல் தாள் தேர்வும் (இடைநிலை ஆசிரியருக்கானது); பிற்பகலில், இரண்டாம் தாள் தேர்வும் (பட்டதாரி ஆசிரியருக்கானது) நடக்கிறது. தேர்வர்களுக்கு, 18ம் தேதியில் இருந்து, 22ம் தேதிக்குள், "ஹால் டிக்கெட்' அனுப்பி வைக்கப்படும் என, துறை வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

அனுமதி: இதுகுறித்து, அவர்கள் மேலும் கூறியதாவது: விண்ணப்பித்த தேர்வர்களில் பலர், மொழிப்பாடம் எது என்பதை குறிப்பிடவில்லை. தமிழ், கன்னடம், மலையாளம், உருது, தெலுங்கு ஆகிய மொழிப் பாடங்கள் உள்ளன. இதில், எதையுமே குறிப்பிடாத தேர்வர்கள், தேர்வு அறைக்குச் சென்றதும், தங்களது மொழிப்பாடத்தை தேர்வு செய்து, அதைப் பற்றி, தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும். ஓ.எம்.ஆர்., ஷீட்டில் (விடைத்தாள்) உள்ள விவரங்களை தவறில்லாமல், சரியாகக் குறிப்பிட்டால் போதும்.

ஐந்து மொழிகளில்... : இதற்கு வசதியாக, ஒரே கேள்வித்தாளில், ஐந்து மொழிகளில் அச்சிடப்பட்ட கேள்விகள் இருக்கும். இதில், தேர்வர்கள் தேர்வு செய்யும் மொழிக்கு தகுந்தபடி, சம்பந்தப்பட்ட மொழி கேள்வித்தாளைப் பார்த்து, விடை அளிக்கலாம். 6.5 லட்சம் பேர், டி.இ.டி., தேர்வை எழுதுவர். ஆங்கில மொழிப் பாடங்களை தேர்வு செய்த தேர்வர்களுக்கு, ஆங்கிலத்தில் கேள்வித்தாள் இருக்கும்.

இவ்வாறு டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

பள்ளிக்கல்வி - அனைவருக்கும் கல்வி திட்டம் - மலைப் பிரதேசம் மற்றும் தொலைத்தூர குடியிருப்புகளில் உள்ள மாணவ / மாணவிகள் கல்வி கற்க ஏதுவாக போக்குவரத்து வசதியினை ஏற்படுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

அரசாணை எண். 172, பள்ளிக்கல்வித் (சி2) துறை நாள். 04.06.2012
தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.13979 / ஜே 2 / 2012, நாள்.   .6.2012

இடைநிலை ஆசிரியர் பயிற்சிபடிக்க ஆள் இல்லை  குறைகிறது மவுசு: நாளை தரவரிசைப் பட்டியல் வெளியிடு 

ஆசிரியர் பயிற்சிக்கான தரவரிசை பட்டியல், நாளை வெளியிடப்படுகிறது. மிகக் குறைந்த அளவில் விண்ணப்பங்கள் வந்திருப்பதன் காரணமாக, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, மூன்று இடங்களுக்குப் பதிலாக, ஒரே ஒரு இடத்தில் நடக்கிறது.
சென்னை: ஆசிரியர் பயிற்சிக்கான தரவரிசை பட்டியல், நாளை வெளியிடப்படுகிறது. மிகக் குறைந்த அளவில் விண்ணப்பங்கள் வந்திருப்பதன் காரணமாக, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, மூன்று இடங்களுக்குப் பதிலாக, ஒரே ஒரு இடத்தில் நடக்கிறது.இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சிக்கு, 4,100 விண்ணப்பங்கள் விற்பனையானது. 3,864 பேர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பினர்.

அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில், 2,970 இடங்களும்; அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1,758 இடங்களும் உள்ளன. இதனால், விண்ணப்பித்த அனைவருக்கும், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலேயே இடம் கிடைக்கும். விண்ணப்பித்த மாணவர்களின், தரவரிசை பட்டியலை, நாளை இணையதளத்தில் வெளியிட, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது, தரவரிசை வெளியிட்ட பிறகு நம்முடைய இணையதளத்திலும் காணலாம்.
வழக்கமாக, திருச்சி நகரில், மூன்று இடங்களில் கலந்தாய்வு நடக்கும். எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு, குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே விண்ணப்பித்து இருப்பதால், திருச்சி பிராட்டியூர் மேற்கில் உள்ள ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரியில் மட்டும், கலந்தாய்வு நடக்கிறது.
ஜூலை 5ம் தேதி துவங்கும் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, 10ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான அழைப்புக் கடிதங்களை, 2, 3 ஆகிய தேதிகளில், விண்ணப்பங்களை ஒப்படைத்த மையங்களுக்குச் சென்று பெற்றுக் கொள்ளலாம்; அதற்கு முன்னதாகவே இணையதளத்திலும், "ஹால் டிக்கெட்&' வெளியிடப்படும்.
விண்ணப்பித்த மாணவர்களில், 5 சதவீதம் பேர் வரை, வராமல் போகலாம் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.