PAGEVIEWERS


தமிழக அரசுத்துறைகளில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில், இந்த ஆண்டு மட்டும், 1.27 லட்சம் பேர் ஓய்வு பெறுகின்றனர். இதில், 52 ஆயிரம் ஆசிரியர்களும் அடங்குவர். இதனால் அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிரடியாக அதிகரிக்கிறது.

தமிழகத்தில் மொத்தம், 142 அரசுத் துறைகள் உள்ளன. கடந்த, 1996ம் ஆண்டு, ஜனவரி, 1ம் தேதி எடுக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கான கணக்கெடுப்பின்படி, 6 லட்சம் ஆசிரியர்கள், 3 லட்சம் அரசு ஊழியர்கள், 1 லட்சம் சீருடை பணியாளர்கள் மற்றும் 2 லட்சம் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளர்கள் என, மொத்தம் 12 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

பொதுப்பணிகள் - இணைக்கல்வித் தகுதி நிர்ணயம் - SSLC + ITI + DEGREE, SSLC + 3YR DIPLOMA + 2YR DEGREE(LATERAL ENTRY), SSLC + OLD SSLC + DTED + DEGREE, SSLC + 3YR DIPLOMA + DEGREE (OPEN) படித்தவர்கள் ஆகியோர் - பத்தாம் வகுப்பு, Plus 2 வகுப்பிற்கு பின் 3 ஆண்டு பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு இணையாக கருதி பொதுப் பணிகளில் வேலைவாய்ப்பு / பதவி உயர்விற்கு அங்கீகரித்து - ஆணைகள் வெளியீடு.




குஜராத்தில் 4வது முறையாக முதல்வராகிறார்மோடி சட்டசபை தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி இலவச வாக்குறுதி இல்லாமல் சாதித்தார்குஜராத் சட்டசபை தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றுள்ளது; நான்காவது முறையாக முதல்வராகிறார், நரேந்திர மோடி. "இலவசமாக, அந்தப் பொருள் தருகிறோம்; இந்தப் பொருள் தருகிறோம்' என்ற, ...

புதிய காப்பீடுத் திட்டத்தில் தமிழக அரசின் அரசாணைப் படி மாவட்ட வாரியாக நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய அலுவலர் மற்றும் தொலைபேசி எண்கள்

LIST OF THE NODAL OFFICERS OF THE UIIC LTD. SITUATED IN THE DISTRICT HEADQUARTERS AND TOLL FREE HELPLINE NUMBER
*Annexure-IV LIST OF THE NODAL OFFICERS OF THE UIIC LTD. SITUATED IN THE DISTRICT HEADQUARTERS AND TOLL FREE HELPLINE NUMBER
*Chief Nodal Officer
Dr.S.Valaguru
Regional Manager
94428 84340
Nodal Officer
K.Ramakrishnan
Assistant Manager
94444 18897

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணியமர்த்தப் பட்ட இடைநிலை ஆசிரியர்கள் நியமன ஆணை பெற்ற 7 நாட்களுக்குள் நியமன செய்யப்பட்ட பள்ளியில் சேர வேண்டும் எனவும், 30 நாட்களுக்குள் பணியில் சேர வில்லை எனில் தேர்வுப் பட்டியிலிருந்து எவ்வித முன்னறிவிப்பின்றி நீக்கப்படும் என TRB உத்தரவு.


ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு: அரசு இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்கவும், ஆசிரியர் நியமனங்கள் இறுதி தீர்ப்பிற்கு உட்பட்டது எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு.

பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் தேர்வை, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் வழிமுறைப்படி நடத்தக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவுக்குப் பதிலளிக்கும் படி, அரசுக்கு, "முதல் பெஞ்ச்" உத்தரவிட்டது. "மனு மீதான, இறுதி உத்தரவைப் பொறுத்து, நியமனங்கள் அமையும்" எனவும் உத்தரவிட்டது.

சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் எம்.பழனிமுத்து என்பவர், தாக்கல் செய்த மனு: ஆசிரியர் தகுதி தேர்வில், மூன்று லட்சத்து, 73 ஆயிரத்து, 696 பேர், கலந்து கொண்டனர். பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில், 8,808 பேர், தேர்ச்சி பெற்றனர்.

தேர்வு முடிவை, ஜாதி வாரியாகவும், பாட வாரியாகவும், வெளியிட தவறி விட்டனர். இதில், உள்நோக்கம் உள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மாற்று திறனாளிகளுக்கு, உண்மையை மறைத்துள்ளனர்.

கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதம், ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில், ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், தகுதி மதிப்பெண்ணில், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்று திறனாளிகளுக்கு, ஐந்து சதவீதம் தளர்த்தப்பட்டது. அதன்படி, ஆந்திராவில், 10 சதவீதம், ராஜஸ்தானில், ஐந்து சதவீதம், தளர்த்தப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், தகுதி மதிப்பெண் தளர்வு பற்றி, எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலின் வழிமுறைகளை பின்பற்றாமல், தேர்வு நடத்துவது, முடிவை வெளியிடுவது, தவறானது.