PAGEVIEWERS

,ஊதிய பிரச்சினை யில் உச்ச நீதிமன்றம் தடை குறித்து நமது மூத்த வழக்கறிஞர் அஜ்மல் கான் அவர்களிடம் அரசின் அபிடவிட் காட்டி விவாதம் செய்யப்பட்டது .அவர்கள் இதில் நாம் கண்டிப்பாக வெற்றி பெற பல்வேறு சாத்தியம் உள்ளன .மேலும் வழக்கை டெல்லி யில் தங்கியிருந்து வழக்கு நடத்தும் வழக்கறிஞர் அவர்களை வைத்து கொள்ளுங்கள் என்றார் .நாம் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் திரு .ந்ந்தகுமார அவர்கள் நடத்த உள்ளார் என்றோம் .நல்லது. என்றார்கள் .மேலும் விரைவாக தடையை நீக்கம் செய்து ஆணை பெற்று வாருங்கள் .அதை வைத்து உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இறுக்கும் வழக்கு எண் 5301/2015;தீர்ப்பு பெற முடியும். என்றார் கள் .எனவே இறுதி வெற்றி இடைநிலை ஆசிரியர்களுக்கே .
இதுவரை உச்ச நீதிமன்றம் வழக்குக்கு நன்கொடை ₹.12,350/-மட்டுமே வரப்பட்டது .நமது தேவை ₹2,50,000ஆகும் .இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சினையில் இது இறுதி யுத்தம் ஆகும் .நாம் தற்போது விட்டு விட்டால் நம் ஆயுள் இறுதி வரை பாதிப்பு தொடருந்து வரும் .உணர்ந்து போராட்டம் சட்ட போராட்டம் செய்து வெற்றி பெறுவோம் ......டாட்டா கிப்சன்

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் 4393 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் மற்றும் 1764 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் ஆக மொத்தம் 6157 பணியிடங்களுக்கு மே-2015 முதல் ஆகஸ்ட் 2015 வரை ஊதியம் பெற ஆணை வெளியீடு

ஆசிரிய பேரினம் கட்டாயம் அறிய வேண்டிய பதிவு உங்களுக்கு எளிமையாக்கவே இரு பகுதியாக்கி வெளியிடுகிறேன்.
களவு போகும் கல்வி துறை | தொடர் | 3
(பகுதி−2)

- மு. நியாஸ் அகமது.
நண்பர்களே.... உங்கள் வீட்டில் பக்கத்து வீட்டுகாரர் வந்து உட்கார்ந்துக் கொண்டு, நீங்கள் இதை தான் சமைக்க வேண்டும், இப்படி தான் தூங்க வேண்டும், இந்த நேரத்தில் தான் புணர வேண்டும் என்று அதிகாரம் செலுத்தினால்... நீங்கள் கோபப்படுவீர்களா... இல்லை, அவர் சொல்வதை சிரமேற்கொண்டு நிறைவேற்றுவீர்களா....? சொரணை உள்ள அனைவருக்கும் கோபம் வரும், ஆதிக்கம் செலுத்துபவரை கழுத்தைப் பிடித்து வீட்டிற்கு வெளியே தள்ளுவோம்.
ஆனால், நீங்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த அரசே... உங்கள் பக்கது வீட்டுகாரருக்கு சாதகமாக நடந்து கொண்டால்...? இந்த ஒப்பந்தம் நிறைவேறினால் அது தான் நடக்கும் நண்பர்களே...
அதாவது, வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் இங்கே செயல்பட வரும் போது என்னென்ன விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் உலக வர்த்தக கழகத்தால் இறுதிசெய்யப் படும். அவ்வாறு இறுதி செய்யப்பட்ட ஒப்பந்த விதிமுறைகளுக்கு எதிராக உள்நாட்டு சட்டங்கள் இருக்க கூடாது. இதனை கண்காணிக்க ‘வணிக கொள்கை மேற்பார்வை பொறியமைவு’ (Trade Policy Review Mechanism) நிறுவப்படும் . இதன் பிரதிதிகள், ஆண்டுக்கொரு முறை மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கல்வி தொடர்பான சட்ட திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வார்கள்.
இது இழிவில்லையா...? உங்கள் வீட்டில் என்ன சமைக்க வேண்டும் என்று பக்கத்து வீட்டுகாரன் ஆணையிட்டாலே வரும் கோபம் , ஒரு அமைப்பு உங்கள் தேசத்தின் கல்வி கொள்கைகளில் ஆதிக்கம் செலுத்தினால் ஏன் வரமாட்டேன் என்கிறது.
உங்கள் தந்தை உங்கள் குடும்ப சொத்தை விற்பனை செய்கிறார் என்றால் உங்களிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று எதிர் பார்ப்பீர்கள்...? அந்த சொத்து பத்திரத்தை காண வேண்டும் என்பது உங்கள் நியாயமான எதிர்பார்ப்பு. ஆனால். இந்த திருநாடு உங்களிடம் எந்த அனுமதியும் பெறாமல், உயர் கல்வியை விற்பனை செய்ய போகிறது. புதிதாக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டுமென்றால், அதன் மாதிரியை இணையத்தில் இந்திய மொழிகளில் வெளியிட வேண்டும். ஆனால், இது நாள் வரை இந்திய அரசு இந்திய மொழிகளுக்கு முக்கியதுவம் கொடுத்து, தமிழிலோ, தெலுங்கிலோ, மலையாளத்திலோ வெளியிட்டதில்லை. இந்தியில் மட்டுமே வெளியிடும். இம்முறை, இந்தியில் கூட வெளியிடாமல், ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிட்டுள்ளது.
தம் குடிகளுக்கு இந்த ஒப்பந்தம் குறித்து எதுவும் தெரிய கூடாது என்று நினைப்பதிலிருந்தே, நம் அரசுகளின் அயோக்கியதனம் பட்டவர்த்தனமாக தெரிகிறது.
ஆப்பிரிக்க நாட்டில் உள்ள கல்வியிலாளர்கள் எல்லாம் ஒன்றிணைந்து GATS ஒப்பந்தம் குறித்து ஆய்வு செய்து, இந்த GATSன் நிபந்தனைகளுக்கு ஒத்துக் கொள்ள கூடாது. ஆப்பிரிக்க அரசு அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட கூடாது என பரிந்தளித்துள்ளார்கள். இந்திய பொது புத்தி நம்மை விட கீழானவர்களாக நினைக்கும் ஆப்பிரிக்காவே, இந்த விஷயத்தில் விழிப்பாக உள்ளது. நாம் என்ன செய்ய போகிறோம் நண்பர்களே...?
கென்யா நாட்டு நைரோபியில், வரும் திசம்பர் 15 -18 வரை WTO - GATS மாநாடு நடக்கிறது. அதற்குள் உயர்கல்வியை வணிகமயமாக்கும் ஒப்பந்தத்திற்கு இந்தியா அளித்துள்ள வாக்குறுதிகளை திரும்ப பெறவில்லை என்றால், இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ள ஆபத்துகள் எல்லாம் நிஜமாகும்.
நம் குழந்தைகளின் நல் எதிர்காலத்திற்காக, இந்தியா அரசிற்கு அழுத்தம் தந்து, வாக்குறுதிகளை திரும்ப பெற வைப்போம்.
(முற்றும்)
-----பதவி உயர்வு லாபமா? ------
இன்றைய சூழ்நிலையில் பதவி உயர்வு லாபமா? அல்லது தேர்வு நிலை /சிறப்பு நிலை லாபமா?
ஓர் கணணோட்டம்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியம் இவ்வ்ண்டு ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் வழக்கமாக பதவி உயர்வு என்றாலே போட்டி போட்டுக் கொண்டு செல்வர். ஒன்றிய முன்னுரிமை யில் தங்களது பெயர் மற்றும் வரிசை
யை எதிர் பார்த்து காத்துக் கொண்டு இருப்பர். ஆனால் நேற்று 11பேர் பதவி உயர்வு வேண்டாம் என்று கூறி 3 ஆண்டு பணித் துறப்பு செய்து விட்டனர்.
காரணம் இவர்கள் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் சிறப்பு
நிலை பெற்று 6% கூடுதலாக ஊதியம் பெறுவது தான். இன்றைய நிலை களில் பதவி உயர்வு சென்றால் 3% மட்டுமே கூடுதலாக ஊதியம் கிடைக்கும். மேலும் தற்போது பெறும் சிறப்பு ப்படி ₹500 ரத்தாகி விடும். விலையில்லா பொருட்கள் பெற்று வழங்குவது உள்ளிட்ட தலைமை ஆசிரியர் பணிச்சுமையும் கூடுதலான வேலை.
மேலோட்டமாக இவ்வாறு முடிவு எடுப்பதற்கு முன் கீழ் கண்ட அம்சங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

TET வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரனை தேதி மீண்டும் மாற்றம்.
ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய கோரியும் 5% மதிப்பெண் தளர்வு சலுகை அளிக்கப்பட்டு உள்ளதையும் எதிர்த்து லாவண்யா மற்றும் பலர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு விசாரனை இந்த மாதம் இறுதியில் வரவுள்ளதாக இருந்தது இவை தற்போது மீண்டும் மாற்றம் செய்யப்பட்டு அடுத்த மாதம் செப்டம்பர் 1 ம் தேதி விசாரனைக்கு வரவுள்ளது.

Listed on. 19.1.2015
Ld. Registrar's Court No. 2
Item No. 89
Tata சங்கம் சார்பாக மாநில அளவில் பதவி உயர்வு வழங்கிட 2010,2012 ஆகிய வருடங்களில்3 வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .நிதி இன்மையால் வழக்கு முடியாமல் நிலுவையில் உள்ளது .விரும்பும் நபர்கள் இந்த வழக்கை எடுத்து நடத்தலாம்.......டாட்டா கிப்சன்

வழிதவறி செல்லும் திருநெல்வேலி சி .எஸ். ஐ .கிறித்தவ கல்வி நிறுவனம் கடந்த 3 மாதமாக ஊதியம் இல்லாமல் தவிக்கும் T.D.T.A. பள்ளி ஆசிரியர்கள்


திருநெல்வேலி மாவட்டத்தில் சி.எஸ்.ஐ. கிறித்தவ பேராயத்தின் கட்டுப்பாட்டில் பல்வேறு பள்ளிகள் செயல்டு வருகிறது. இதில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரிந்துவரும் ஆசிரியர்களுக்கு நிர்வாக பிரச்சினை காரணமாக கடந்த 3 மாதமாக ஊதியம் வழங்க வில்லை .இதனால் ஆசிரியர்கள் பெறிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கு காரணம் கிறித்தவ அரசியல் ஆகும் .முந்தைய காலத்தில் நீண்டகால தொலைநோக்கு திட்டத்தால் உருவான நிறுவனம் இன்று பல்வேறு விமர்சனங்கள் ஏற்பட காரணமாக கிறித்தவ நிறுவன செயல்பாடு உள்ளன. மேலும் இந்த பள்ளிகள் தொப்பி யில் கூல் வாங்கி குடித்து கிறித்தவ மிஷனரி மூலம் உருவானவை ஆகும் .ஏழைகள் வாழ்வு உயர உருவான நிறுவனம் இன்று பணம். படைத்தவர் மட்டுமே பணியில் சேர முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது .
இந்த நிறுவனம் உருவான நோக்கத்தை விட்டு விலகி செல்கிறது எனவே இந்த கல்விநிறுவனம் அரசுடைமை ஆக்கப்பட வேண்டும் .ஆசிரியர் கிறித்தவ சிறுபான்மை மாணவர்கள் நலன் கருதி தமிழக அரசு இந்த முடிவை விரைவாக எடுக்க வேண்டும்.
இந்த நிறுவனங்களில் பணிபுரிந்தவர்கள் பாதிக்க பட்டு இருந்தால் டாட்டா சங்கத்தை தொடர்பு கொள்ளவும் .இந்த நிறுவன அரசுடைமை யாக சட்டத்தில் இடமும் உண்டு .

உங்கள் பிரச்சினை தீர தொடர்பு கொள்ளவும்
 ... டாட்டா கிப்சன் .
9443464081

நீதிமன்ற தடை உத்தரவின் காரணமாக "சிறப்பாசிரியர்கள்" வேலைவாய்ப்பு அலுவலகம் மூப்பின் படி நியமிக்க இயலாது - TRB அறிவிப்பு

Click here for Trb Notification 

TRB: போட்டித்தேர்வு மூலம் அரசு பள்ளிகளில் 1,400 சிறப்பாசிரியர்கள் நியமனம்:அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.
      அரசு பள்ளிகளில் ஏறத்தாழ 1,400 சிறப்பாசிரியர்கள் (தையல், ஓவி யம்,
உடற்கல்வி) போட்டித்தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்புவிரைவில் வெளியாகிறது.பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளிலும், மாநக ராட்சிப் பள்ளிகளிலும் தையல், ஓவியம், இசை, உடற்க

தூங்குங்க! மக்களே தூங்குங்க!


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்!
தொகையை நடுவணரசிடம் செலுத்தாத தமிழக அரசு.
தகவலறியும் உரிமைச்சட்டத்தால் அம்பலம்!

1.1.2004 முதல் அரசுப்பணியில் சேரும் அனைவருக்கும் புதிய பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம்
கட்டாயம். இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழகம் அறிமுகப்படுத்தியது.2006 ஜூன்1 முதல் 10சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டது.
இந்தியாவில்உள்ள
29 மாநிலங்களில் தமிழகம் தவிற பிற மாநிலங்கள் 33ஆயிரத்து 121 கோடி யை ஓய்வூதிய ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் அளித்துள்ளன.

பிற மாநிலங்களில் 13ஆயிரத்து 488பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7ஆயிரம் பேருக்கு ஓய்வூதிய நிதிகொடுக்கப்பட்டுள்ளது.இதில் 533பேர் இறந்தவர்.
ஆனால் தமிழகத்தில் 5000 கோடி பிடித்தம் செய்தும் , இதுவரை ஆணையத்திடம் செலுத்தவில்லை. பணம் என்ன ஆயிற்று என்ற தகவலும் இல்லை.

திட்டம் தொடங்கி
12 ஆண்டுகள் ஆகியும் பணம் செலுத்தப்படாதது
வெளிப்பட்டுள்ளது.தகவல் திரட்டியவர் திண்டுக்கல் பிரடெரிக் ஏங்கல்ஸ். (நன்றி:விடுதலை 26.7.15 நாளிதழ்)
திட்டத்தால் பாதிக்கப்பட்ட ஆசிரிய மக்களே!
தூங்குங்க! நல்லா தூங்குங்க!
விழித்திருந்தால் விருந்தினர் மாளிகை இருந்த இடம் தெரியாது செய்திருக்க வேண்டாமோ!
-இவன் டாட்டா .

ஊதிய முரண்பாட்டைக் குறிப்பிட்டு நேரடிக் கோரிக்கை வேண்டும்


ஆட்சி மாறினால்
கிடைக்குமாம்

மாறாவிட்டால்
மாறியும்
கேட்காவிட்டால்
கிடைக்காவிட்டால்

உறுதியாகச்
சொல்கிறேன்
2800-4200 ஐக்
கேட்க மனமில்லை
எங்கே
கிடைக்கப்போகிறது

கோரிக்கைகளை
மாற்றுங்கள்

போராட்டக்களத்தை
மாற்றுங்கள்



அதைவிட முக்கியமான செயல் அரசு உச்ச நீதிமன்றத்தில் பெற்று இருக்கும் தடையை நீக்கம் செய்திட பண பலம் படைத்த பெரிய சங்கம் என்று கூறும் தலைமை யை நிற்பந்திப்போம். டாடா கிப்சன் அவர்களால் கடந்த 4 வருட சட்ட போராட்டம் காரணமாக கிடைத்த 3400 பக்கம் கொண்ட ஆவணங்களை இடைநிலை ஆசிரியர் நலன் கருதி பெரிய சங்கங்களுக்கு  வழங்க தயார் .பெரிய சங்கம் அதை வைத்து அரசுக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்திட தயாரா ?.
டாட்டா சட்ட போராட்டம் கண்டிப்பாக மாபெரும் வெற்றி பெறும் .அன்று இடைநிலை ஆசிரியர் அனைவரும் டாட்டா வில் இருப்பார்கள் .

நமக்கு
கிடைக்கும் 9300+4200

எனக்கும் கிடைக்கும்
ஆடுவோமே
பள்ளு பாடுவோமே
4200 g p
பெற்றுவிட்டோம் என்று.

_
ஆசிரியர்களுக்காக..............

டாட்டா கிப்சன் .9443464081.
கலை அவர்களே டாட்டா கள போராட்டம் தவறானது என்று எங்கும் கூறவில்லை ..காலம் கடந்த போராட்டம்.................?  ....??? மனித சக்தியை விரையம். செய்வதை விட அரசு உச்ச நீதிமன்றத்தில் 2010 லேயே ஆசிரியர் அனைவருக்கும் மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்கிவிட்டதாக பொய் சொல்லி தடைஆனண பெற்று உள்ளதை   நீக்கம் செய்திட பலம் படைத்த தங்கள் சங்கத்தை நிற்பந்தியுங்கள்.

அரசியல் ஆக்கப்படுகிறதா ஆசிரியர்கள் .....பிரச்சனை ..........


மேற்கண்ட தலைப்பில் தந்தி தொலைக்காட்சி ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது.
கூடவே தமிழக நிதிநிலை பற்றியும் விவாதிக்கப்பட்டது.

இதில் சிறப்பு என்னவென்றால் ஆளும் கட்சி ஆதரவு சட்ட மன்ற உறுப்பினர் திரு.மாஃபா பாண்டியரஜன் பேசியபோது ஆசியர்கள் போராட்டம் கோரிக்கைகள் நியாயமில்லை என்று சொல்லமாட்டேன் என்றும் ஆனால் அவர்கள் போராடும் முறை சரியில்லை என்று கூறினார்
ஆனால் சரியான முறையைக் கூற மறந்துவிட்டார்.

தி.மு.க சார்பில் பேசிய திரு. ஜெயராஜ்
அவர்கள் எங்கள் ஆட்சியில் 750ரூ.கொடுத்தோம் என்றார்.ஆனால் இப்பிரச்சனை எங்கள் ஆட்சியிலேயே தொடங்கியது எனக் கூற மறந்துவிட்டார்.

CPS பிரச்சனைப் பற்றி பேசியபோது அது அரசின் கொள்கை முடிவு என்றார்கள். ஆனால் அதை தமிழக அரசு மாற்ற முடியும் என்றார் தி.மு.க சார்பானவர்
அதை நீங்கள் ஏன் மாற்றவில்லை? அதை மத்திய அரசு கொண்டுவந்த போது ஏன் எதிர்க்கவில்லை என்ற கேள்வி வந்தவுடன் அவர் டெஸ்மா எஷ்மாவிற்குச் சென்றுவிட்டார்.

ஒரே பணி ஆனால் மாறுபட்ட ஊதியம் என்ற கருத்தைப் பதிவு செய்யவே கடைசியாகப் போராடி நேரம் பெற்றார் தலைமையாசிரியர்கள் சங்க பொருப்பாளர் திரு.நடராஜன் அவர்கள்.
ஆனால் நெறியாளர் அதற்கு வேறொரு கேள்வியான இராணுவ வீரருக்கும் காவல்துறைக்குமான ஊதிய முரண்பாட்டைக் கேட்பார்களே அதுவும் ஒரே பணிதானே என்றார்.அதற்கு ஆசிரியர் சங்க நிர்வாகி முன்பெல்லாம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் இப்பொழுது எடுத்துக் கொண்டுவிட்டார்கள் புதிதாகக் கேட்கவில்லை என்று பதில் சொல்ல விடவில்லை நெறியாளர்.
பொருளாதார நிபுணர் ஒருவர் பேசியது சற்று ஆறுதல் தந்தது என்னவெனில் கல்விக்கு வழங்கப்படும் நிதி செலவு இல்லை, மூலதனம் என்றார். ஆனால் இக்கருத்து கோரிக்கைகளை நிறைவேற்றினால் 2500கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என்று தொடக்கத்திலே பேசிய பாண்டியராஜனுக்கு கேட்காமல் போய்விட்டது.
மொத்தத்தில் ஆசிரியர்கள் போராட்டங்களை எதிர்க்கட்சிகள் ஆதரிப்பது அதுவும் தேர்தல் நேர போராட்டங்களை ஆதரிப்பது இயல்பானதுதான் எனினும் இன்றைய விவாதத் தலைப்பை கடன் சுமையோடு சேர்த்து விவாதித்தது சரிதானா? என்பதும் அரசியல் ஆக்கப்படுவது யாரால் என்பதை மனச்சாட்சி உள்ளோரும்,ஆசியர்கள் கோரிக்கைகளின் நியாயங்களை உணர்ந்தவர்களுமே முடிவு செய்யட்டும்.
T.A.T.A Kumbakonam
Training of primary and upper primary school teachers in teaching English
(Developing reading, writing skills in english)

Primary: 4 days
I II III
17.08.15. 18.08.15. 19.08.15
24.08.15. 25.08.15. 26.08.15
31.08.15. 01.09.15. 02.09.15
07.09.15. 08.09.15. 09.09.15

Upper primary:2 days
I II III
14.09.15. 15.09.15. 16.09.15
21.09.15. 22.09.15. 23.09.15

என்சிடிஇ புதிய விதிமுறை எதிரொலி: தொலைதூரக்கல்வி பி.எட். சேர்க்கையில் விரைவில் மாற்றம்



தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் புதிய விதிமுறை காரணமாக, தொலைதூரக்கல்வி பி.எட். மாணவர் சேர்க்கையில் விரைவில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. அதன்படி, இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் மட்டுமே இனி தொலைதூரக்கல்வி பி.எட். படிப்பில் சேர முடியும்.

என்சிடிஇ எனப்படும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அமைப்பு, ஆசிரியர் கல்வி பயிற்சியில் பல் வேறு மாற்றங்களை கொண்டுவந் துள்ளது. பிஎட், எம்எட் படிப்புக் காலத்தை ஓராண்டிலிருந்து 2 ஆண்டுகளாக உயர்த்தியுள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து 2015-16-ம் கல்வி ஆண்டு முதல் பிஎட் படிப்பு காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, பிஎட் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை சென்னை லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் என்சிடிஇ-யின் புதிய விதிமுறை காரணமாக, தொலைதூரக்கல்வி பிஎட் மாணவர் சேர்க்கையில் விரைவில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. தமிழ்நாட்டில் மதுரை காமராஜர், திருச்சி பாரதிதாசன், நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார். கோவை பாரதியார் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களும், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகமும் தொலைதூரக்கல்வியில் பி.எட். படிப்பை வழங்கி வருகின்றன. அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 2 ஆண்டு ஆசிரியர் பணி அனுபவத் துடன் பணியில் இருக்கின்ற பட்டதாரிகள் இதில் சேரலாம். பல்கலைக்கழகத்துக்கு ஏற்ப நுழைவுத்தேர்வு அல்லது பட்டப் படிப்பில் பெற்ற மதிப்பெண் மற்றும் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
என்சிடிஇ-யின் புதிய விதிமுறை யின்படி, தொலைதூரக்கல்வியில் பிஎட் படிப்பில் சேர இடைநிலை ஆசிரியர் பயிற்சி (ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்பு) அவ சியம். அத்துடன் பட்டப் படிப்பும் முடித்திருக்க வேண்டும். என்சிடிஇ- யின் இந்த புதிய விதிமுறை யின்படிதான் அடுத்த ஆண்டு தொலைதூரக்கல்வி பி.எட். படிப் பில் மாணவர்களைச் சேர்க்க முடிவுசெய்திருப்பதாக தமிழ்நாடு திறந்தநிலைப் பல்லைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியை சந்திரகாந்தா ஜெயபாலன் ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.
2014-15ம் நிதியாண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் பிடித்தங்களில் விடுபட்ட தொகையினை (CPS MISSING CREDITS) விரைவில் ஏற்றிட கோரப்பட்டுள்ளது
குறிப்பு:
1. தங்கள் பள்ளி / அலுவலகங்களின் USER ID, PASS WORD மூலம் உள்ளே சென்று MISSING CREDITS என்ற தலைப்பில் 4வதாக உள்ள 2014-15 MC ல் செல்ல வேண்டும்.
2. அதில் SELECT TOKEN NO என்பதை கிளிக் செய்தால் அதில் விடுபட்ட தொகைக்கான டோக்கன் எண்கள் வரும்.
3. அதில் ஒரு டோக்கனை செலக்ட் செய்தால் அதன் விபரங்கள் வரும். அதில் வலது ஓரத்தில் ADD NEW TRANS DETAILS என்பதை கிளிக் செய்து குறிப்பிட்ட டோக்கனில் உள்ளவர்களின் விபரங்கள் ஒவ்வொன்றாக ஏற்ற வேண்டும்.

CLICK HERE TO GO THE CPS SITE.....
http://218.248.44.123/auto_cps/index.php/login

இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களின் CPS தொகை மற்றும் மாநில அரசு ஊழியர் எண்ணிக்கை RTI -இல் வெளியீடு .தமிழக அரசு PFRDA விடம்-ஒரு ரூபாய் கூட வழங்காத நிலை-RTI NEWS





அன்பார்ந்த ஆசிரியர் பெருமக்களுக்கு டாட்டா வின் வணக்கங்கள் ........


தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர்களுக்கு 2010 ல் திரு .ராஜிவ் ரஞ்சன் அவர்கள் அறிக்கை படியும் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை படியும் ஊதியம் மத்திய அரசுக்கு இணையாக வழங்கிவிட்டது என பொய்யான தகவல்கள் கூறி ஊதிய பிரச்சினை க்கு தடை ஆணை பெற்று விட்டது .
டாட்டா சங்கம் 2010 புதிதாக துவங்கியது முதல் ஆசிரியர்களுக்கு ஆக போராட்டம் செய்து வருகிறது .இடைநிலை ஆசிரியர் களுக்கு ஊதியம் மறுக்கப்பட்ட காரணம் டாட்டா சங்கம் முலமாக வெளி உலகுக்கு தெரிய வந்தது .RTI சட்டத்தை சரியான காரியங்களை செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தி பல்வேறு ஆவணங்கள் அரசுக்கு எதிராக சேகரித்து இதுவரை 1989 முதல் மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் பெற்று காரணம் எல்லாம் வரலாறு ஆவணங்கள் 4300 சேகரித்து சட்ட போராட்டம் உயர் நீதிமன்றத்தில் நடத்தி வந்தது .தற்போது தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடி தடை பெற்று உள்ளதால் நாமும் உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது .நாம் உச்ச நீதிமன்றம் செல்லாவிட்டால் வருங்காலத்தில் ஊதியம் மிகவும் பாதிக்கப்படும் .இதை அறியாமல் நாம் சங்கத்தின் பெயரால் சண்டை போடுகிறோம் .இப்போது நமக்கு தேவை ஊதிய முரண்பாடு தீர்க்க படுதல் ஆகும் .
டாட்டா அனைத்து சங்கங்கள் நடத்தும் கள போராட்டம் வெற்றி பெற தனது பங்களிப்பு வழங்கும் .அதுபோல சங்க பாகுபாடு இல்லாமல் அனைவரும் சட்ட போராட்டம் வெற்றி பெற நிதியுதவி வழங்க வேண்டுகிறேன் .தற்போது காலம் கடந்து கொண்டே செல்கிறது வழக்கு தாக்கல் செய்திட வழக்கறிஞர் அவர்களுக்கு ரூபாய்.2,50,000வழங்க வேண்டியது உள்ளது .ஆனால் இதுவரை நிதியுதவி ரூபாய் 12,500 மட்டுமே கிடைத்துள்ளன .இன்னமும் தேவை அதிகம் .இடைநிலை ஆசிரியரே இழந்து உள் ள உரிமை மீட்க ஊதியம் 9300+4200 என மாற்றம் செய்திட தங்கள் பங்களிப்பு வழங்கிடுங்கள் .
இந்த பாதிப்பு நீங்காவிட்டால் அரசு அடுத்த ஊதிய குழு வில் இடைநிலை ஆசிரியர் களுக்கு ஊதியம் தற்போது பெறுவதில் இருந்து 20,000 உயர்த்தி வழங்குமாறு ? சிந்தனை செய்வீர் இழந்த உரிமை மீட்டிடுவோம்.

டாட்டா கிப்சன் .