PAGEVIEWERS

பள்ளிக்கல்வி - 2012-13ஆம் கல்வியாண்டில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒப்பளிப்பு செய்யப்பட்ட 1591 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 29.10.2015 முதல் 28.10.2016 வரை ஓராண்டுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி ஆணை வெளியீடு


அகஇ - இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடத்திலும், ஆசிரியர்களிடத்திலும் மற்றும் பொது மக்களிடத்திலும் மற்றும் தனி திறன்களை மேம்படுத்தவும் பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட முறையே 100, 150க்கு அதிகமாக உள்ள மாணவர்கள் எண்ணிக்கை தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.5000/-ம், நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.6000/-ம் ஒதுக்கீடு செய்து இயக்குனர் உத்தரவு



CPS- திட்டம் -ஊராச்சி ஒன்றிய பள்ளி -தனியார் பள்ளி - TO  - அரசு பள்ளி -பணி  மாறுதல் பெற்றால் - ஏற்கனேவே  நடப்பில் உள்ள பழைய CPS எண்ணை புதிய இடத்தில் பயன் படுத்தலாம் ...

 CPS- திட்டத்தில் பணி புரிகிற  அரசு உழியர்கள் வேறு துறையில் பணி நியமனம் பெற்றால் அல்லது  ஆசிரியர்கள் அலகு விட்டு அலகு பணி மாறுதல் பெற்றால் ஓர் இடத்தில்  CPS-கணக்கில் செலுத்திய தொகையை புதிய இடத்தில் அதே கணக்கு தொடரலாம் ..இதற்கு முன்பு -ஊராச்சி ஒன்றிய பள்ளி -தனியார் பள்ளி யில் பணி செய்யும் பட்டதாரி ஆசிரியர் அரசு உயர் நிலை ,மேல் நிலை பள்ளிக்கு பணி மாறுதல் பெற்றால் ஊராச்சி ஒன்றிய பள்ளியில்  பணி செய்யும் போது  CPS-கணக்கில் செலுத்திய தொகையை மாற்றம் செய்ய முடியாது என இருந்தது .இதற்காக டாட்டா சங்கம் சார்பில் நிதி துறைக்கும் அரசு தகவல் தொகுப்பு மையத்திற்கும் பல முறை கடிதங்கள் எழுதப்பட்டது .அதன் விளைவாக தற்போது அரசு கடிதம் மூலம் தெளிவுரை வழங்கப்பட்டு உள்ளது ....டாட்டா சங்க கோரிக்கை வெற்றி ..இதற்கு துணை நின்ற டாட்டா புதுகோட்டை -பள்ளி கல்வி துறை -மாவட்ட செயலாளர் திரு.யோவேல் அவர்களுக்கும் நன்றிகள் .











தொடக்க நடுநிலைப்பள்ளிகளுக்கு இரண்டாம் பருவத்தேர்வு ஜன -11 அன்றே தொடங்க இயக்குனர் உத்தரவு...

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி, சி மற்றும் டி பிரிவு அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட மாநில அரசு ஊழியர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா, போனஸ் அறிவி்ததுள்ளார்.

"ஏ" மற்றும் "பி" பிரிவு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிறப்பு மிகை ஊதியம் - ரூ.1000/-


"சி" மற்றும் "டி" பிரிவு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிகை ஊதியம் - ரூ.3000/-

ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500/- வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இதனால் தமிழக அரசுக்கு கூடுதலாக ரூ.326.85 கோடி செலவாகும் என அரசு அறிவித்துள்ளது.


 
Tamil Nadu PR [Press Note No : 004 ] Statement of the Honble Chief Minister on the Bonus payable to Government Staff



ஓய்வூதியம் , பணிக்கொடை., கம்முடேஷன் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க அரசாணை வெளியீடு.

CLICK HERE- TO DOWNLOAD G.O NO113 DT-18.09.2015-EF DEPARTMENT

பள்ளிகளில் கழிப்பறை சுத்தம் செய்தல் - அரசாணைப்படி உள்ளாட்சி அமைப்புகளுடன் இனைந்து துப்புரவு தொழிலாளர்களை நியமிக்க இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்

முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்று ஊக்க ஊதியம் கோரும் ஆசிரியர்களின் பட்டியலில் விடுபட்ட ஆசிரியர்களின் விபரம் கோருதல் சார்பான தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நாள் : 28. 12. 2015

இன்றைய செய்திகள்
28:12:2015. 🍁🍁🍁🍁

🍁 மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடங்களில் (மாவட்டத்தில்)பணி புரியும் அரசு ஊழியர்களை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது
🍁 கோயில்களுக்கு ஜனவரி 1-ம் தேதி முதல் ஜீன்ஸ், லெகிங்ஸ், டிரவுசர் அணிந்துவர தடை: உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அறநிலையத் துறை சுற்றறிக்கை
🍁 இந்திய அரசின் விவசாயதிற்கான மொபைல் ஆப்'
🍁 நெட்' தகுதி தேர்வு தெடங்கியது
🍁 TAMIL UNIVERSITY DISTANCE EDUCATION B.Ed., FIRST YEAR RESULTS-DECEMBER 2015 Published...
🍁 ஆதார் எண் கொடுத்தால்தான் சம்பளம்: கருவூலம் எச்சரிக்கையால் அரசு ஊழியர்கள் தவிப்பு
🍁 தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்து கொள்வதற்கான வழிமுறைகள்
🍁 எட்டு ஆண்டாக முடங்கிய ஆசிரியர் பயிற்சி படிப்பு
🍁. திண்டுக்கல் மாவட்டத்தில் முதன் முறையாக அய்யலூரை சேர்ந்த ஓர் ஆசிரியைக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வழங்க சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை உத்தரவு-நகல்
🍁' திங்கள், வெள்ளியில் 9 விடுமுறை நாட்கள்'
🍁 கழிப்பறைகளை சுத்தம் செய்யஆட்கள் நியமிக்க உத்தரவு
🍁 தொழிற்சாலை கள் மிகவும் குறைவாக இருப்பதால் தமிழகத்தில் வேலை வாய்ப்பைவிட படித்தவர்கள் அதிகம்'
🍁. நெட்' தேர்வு அறைக்குள் பேனா 'வாட்ச்' கொண்டு செல்ல தடை: யு.ஜி.சி., கட்டுப்பாடு'
🍁. இன்ஸ்பயர்' விருதுக்கான உதவித்தொகை6,293 பேருக்கு ரூ.3.15 கோடி ஒதுக்கீடு
🍁 15 ஆயிரம் மெட்ரிக் பள்ளிகளின் கதி என்ன?
🍁 இனிமேல் செல்போன் டேட்டாவை காலி செய்ய காலக்கெடு கிடையாது; ஏர்டெல் அதிரடி
🍁. பசங்க 2 - அனைத்து பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும் திரையிட வேண்டிய படம்
🍁 7,000 பேராசிரியர்களுக்குகல்வி ஊதியம் பாக்கி.
🍁 மின் பயன்பாட்டை கணக்கிட நவீன மீட்டர்
🍁 புதுடில்லி: மாணவர்கள் மட்டம் போடுவதை தடுக்க 'எலக்ட்ரானிக் ஐ.டி., கார்டு' அறிமுகம்
🍁 இந்திய ரயில்வேயில் 18252 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடங்களில் (மாவட்டத்தில்) பணி புரியும் அரசு ஊழியர்களை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது


7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த கூடாது - தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் போர்க் கொடி

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்தக் கூடாது என்ற தமிழக அரசின் கோரிக்கையால், ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான ஏழாவது ஊதியக் குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் ஏற்கனவே தாக்கல் செய்துவிட்டது. 
 
இதனை ஏற்று ஊதியக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்காக சிறப்பு பிரிவு ஒன்றையும் மத்திய நிதி அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது.
ஏழாவது ஊதியக் குழு அறிக்கையின் படி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு சுமார் 25 சதவீதம் அளவிற்கு வருவாய் உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களை தொடர்ந்து பல மாநில அரசுகளும் அதன் அடிப்படையில் தங்களது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கும் நிலை உள்ளது.
 
வரும் 1-ம் தேதி முதல் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழகம், மேற்கு வங்கம், பஞ்சாப், உத்திரப்பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்கள் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்தாமல், தள்ளிவைக்குமாறு மத்திய அரசிடம் அறிவுறுத்தியுள்ளன. இது தொடர்பாக பிரதமர் அலுவலகம், கேபினட் செயலகம் உள்ளிட்டவைகளுக்கு மேற்கண்ட 5 மரிநலங்களும் கடிதம் அனுப்பியுள்ளன. மாநிலங்களின் நிதி நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் தங்களது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு உடனடியாக அளிக்க முடியாது என அந்த மாநிலங்கள் தெரிவித்துள்ளன. எனவே கூடுமானவரை ஏழாவது ஊதிய கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவதை தவிர்க்குமாறு இந்த மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இதனால் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அரசு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளருக்கு ஊர்திப்படி அனுமதிக்கும் அதிகாரம் மாவட்ட அளவிலான சார்பு அலுவலருக்கு ஒப்படைத்தல் சார்பான அரசாணை 316-நாள் : 22. 12. 2015

எலெக்க்ஷன் நெருங்குகிறது...ஆசிரியர்கள் பாடு அதிலும் ஆசிரியர் தம்பதியர் நிலை பரிதாபம்!. கணவரையும் மனைவியையும் எதிரெதிர் திசைகளில் ட்யூட்டி போட்டு அவர்கள் பிள்ளைகளை அலைக்கழிக்க வைக்கும் அவலம் தவிர்க்கப்படுமா இம்முறையாவது? தம்பதியர்க்கு ஒரே பூத் அல்லது அருகருகில் உள்ள பூத்களில் ட்யூட்டி போட்டால் கொஞ்சம் வசதியாக இருக்கும்..மனது வைக்குமா தேர்தல் ஆணையம்?

c.kipson . 235.NORTH STREET .PARAPPADI-627110.
 NELLAI -Dist
CELL-9443464081
இடைநிலை ஆசிரியர்களின் இடர் களைய திருவண்ணாமலை மாவட்ட டாடா அன்புடன் அழைக்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்( TATA)
திருவண்ணாமலை மாவட்ட செயற்குழு மற்றும்
இடைநிலை ஆசிரியர்களின் டாடா உச்ச நீதிமன்ற
ஊதிய வழக்கின் நிலை -விளக்கக் கூட்டம்.


வரும் ஜனவரி மாதம் 10 ம் தேதி பிற்பகல் 1.00 மணி நடைபெறவுள்ளது.


நம் பொதுசெயலாளர் திரு.S.C.கிப்சன்,அவர்கள்
வருகை தர உள்ளார்.


இடைநிலை ஆசிரியர்களின்
இடர் களைய ஒன்றிணைவோம்.
தோள் கொடுப்போம்.
அனைவரும் வருக,வருக,


இடம்,நாள் விரைவில்,


இவண்:


க.அரசு, மாவட்ட தலைவர்.
ரா.செந்தமிழ்செல்வன், மாவட்ட செயலாளர்
ப.கணபதி மாவட்ட பொருளாளர்
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்
திருவண்ணாமலை மாவட்டம் (கிளை)
டாட்டா சங்கம் -அறிவிப்பு -சிறுபான்மை பள்ளி -T.E.T. Exam .- தேர்ச்சி பெறாததால்  -ஊதியம் - பெறமுடிய வில்லை என்றால்- ஊதியம் பெற -மதுரை உயர் நீதிமன்ற கிளை- உடனடியாக ஊதியம் வழங்கிட தீர்ப்பு வழங்கி உள்ளது .-இது பாதிப்பில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் ....


டாட்டா கிப்சன் .பொது செயலாளர் ..தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ..9443464081//9840876481.

G.O Ms : 151 - ஊரக வளர்ச்சித் துறை - பள்ளிக் கழிப்பறை சுத்தம் செய்தல்- உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ளும் - தெளிவுரை அரசாணை வெளியீடு.............

CPS- புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள மற்றும் 6-வது ஊதிய குழு பாதிப்பில் உள்ள ஆசிரியர்களே -குறிப்பாக இடைநிலை ஆசிரியர்களே தயவு செய்து இந்த கட்டுரையை படிக்கவேண்டாம்


சிறுகணல்
1.       ரூ. 5200 + 2800 பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கும்,
2.       1.86 பெருக்கத்துடன் ரூ.2800/- பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கும்,
3.       CPS வேண்டாம்; OPS வாழ்வூதியம் மட்டுமே எங்களுக்கு உயிர்நாடியாய் வேண்டுமென்று உறுதியாய் நிற்கும் அனைத்துவகை சுமார் 55 ஆயிரம்
ஆசிரியர்களுக்கும்,
                                                - “இயக்கங்கள் கடந்து, கூட்டு நடவடிக்கைக் குழுக்கள் கடந்து, முகம் & முகவரி கடந்து; ஏன் அனைத்து மாச்சரியங்களும் கடந்து” – மிகவும் ஆக்கப்பூர்வமாக பாதிக்கப்பட்ட நீங்கள் மட்டும் ஓர் அணியில் இணைந்து நின்று வெற்றிவாகை சூடிட மனதார வாழ்த்தி வணங்குகிறேன்.
                                    உங்களுடைய வலியும், வேதனையும், சகல சௌகரிய ஓய்வூதியத் தலைவர்களுக்கோ (அல்லது) உங்கள் பிரதானமாய் முன்னிறுத்தி உங்களை வைத்துப் போராடி உங்களுக்கு ரூ.750/- ம், தங்களுக்கு ரூ.1100/- முதல் ரூ.1300/- (அதாவது GP ரூ.5400/- மற்றும் ரூ.5700/-) பெற்றுக் கொண்ட தலைவர்களுக்கோ ஒருவேலை புரிந்தாலும்கூட,
·         அவர்களின் ஈகோ மட்டும், ஒருநாளும் அவர்களை விட்டுப் போகப்போவதும் இல்லை.
·         அனைவரும் ஒரு குடையின்கீழ் நின்று பிரச்சனை தீரும்வரை, தொடர்ந்து போராடி வெல்லப்போவதும் இல்லை. இந்தப் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு அரசா காரணம்?
·         உங்கள் வலியும், வேதனையும் நீங்கப் போவதும் இல்லை.
·         இதனால் அவர்களுக்கு ஒரு கஷ்டமும் இல்லை, நஷ்டமும் இல்லை. மாறாக இலாபமே !
·         இந்த நிதர்சனத்தை நீங்கள் அறிவார்த்தமாய் உணரச் செய்யவே இம்மடல் என்று எண்ண வேண்டாம். அதையும் தாண்டி சரியான வழிகாட்டும் செயலேயாகும் !

“பாதிக்கப்பட்ட மூன்று பிரிவு ஆசிரியர்களையும் பார்த்து நான் மிகவும் வெளிப்படையாக சிலவற்றைக் கேட்டாக வேண்டும்.”

1.     மாநில அரசின் அனைத்து வகை ஊதிய விகித நிலையினருக்கும் (ஏன் இன்னும் சிலருக்கு உயர்த்திக்கூட வழங்கிய நிலையில்) மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய விகிதம் வழங்கிவிட்டு உங்களுக்கு மட்டும் வழங்காதது;
                                      i.        சமூக நீதிக்கு எதிரானது
                                     ii.        நியாயமற்ற செயல்
- என்று உண்மையிலேயே நீங்கள் நம்புகிறீர்களா?

2.  அப்படியானால், செய் அல்லது செத்துமடி என்னும் தத்துவத்தின் அடிப்படையில் நான் எனக்கெதிரான இந்த அநீதியைக் களையாமல் ஓயமாட்டேன் என்று மிகவும் வாய்மையாய் உறுதியேற்கிறீர்களா?

3. பாராளுமன்றமும், சட்டமன்றமும் தங்களுக்கு OPS வைத்துக் கொண்டு எங்களுக்கு CPS-ஐ கொடுக்காமல் இரத்து செய்வது,
                                      i.        தவறு
                                     ii.        அநீதி
                                    iii.        எந்த விதியின் கீழும் நியாயப்படுத்த முடியாது.
                                    iv.        OPS என்பது எனது வாழ்வுரிமை,
                                     v.        அது கொடுபடா ஊதியம்,அதை அடையாமல் நான் ஓயமாட்டேன்
-       என்று உறுதியாய் சபதம் ஏற்கிறீர்களா?

4.காலத்தே, அறவழி போராடி, குறைந்தபட்சம் முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்கள் தேர்தல் அறிக்கையில்,
                          i.   மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, மாநில அரசு ஊழியர்களுக்கு உள்ள ஊதிய முரண்பாட்டைச் சரிசெய்வோம்,
                                                   ii.        CPS – ஐ இரத்து செய்து, OPS-ஐ அமல்படுத்துவோம்- என்ற வாக்குறுதி இடம்பெறவில்லையெனில் நாம் ஆட்சி அமைப்பது கடினம்.- என்ற நிலையை ஏற்படுத்தாமல் விடமாட்டேன் என்று உறுதி கொண்ட நெஞ்சினராய் இருக்கிறீர்களா? அப்படியானால், இந்த வாய்மை வழிகாட்டி சொல்வதை மனதில் போட்டு வீருநடை போடத் தவறாதீர்கள். ஆம், முதலில் “Rescue Equality Justice” – என்ற சமூக வலைதளக் குழுவை உருவாக்குங்கள்.
2.     அதில் பாதிக்கப்பட்ட மேற்சொன்ன மூன்று பிரிவினர் சுமார் 55000 பேரை மட்டும் ஒன்றிணையுங்கள். நான் உட்பட, பாதிக்கப்படாத எவரையும் கட்டாயம் உள்ளே சேர்க்காது விலக்கி வையுங்கள்.வேண்டுமானால், வெளியில் இருந்து வழிகாட்ட மட்டும் சொல்லுங்கள்.
5. அரையாண்டு விடுமுறை அல்லது பொங்கல் விடுமுறையைப் போராட்ட நாளாகத் தேர்ந்தெடுங்கள். முற்றுகை, மறியல், வேலைநிறுத்தம் என்று யாருக்கும் இடையூறு செய்யாது அரசு உள்ளிட்ட அனைவரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஓரிடத்தில் 55000 பேரையும் தொடர்ச்சியாகப் பல நாட்கள் கூட்டுவது மட்டுமே இலக்காக இருக்கட்டும்.

7.     இடம், சென்னைக் கடற்கரையை மக்கள் கடற்கரையாக மாற்றுவதாகவோ அல்லது  திண்டுக்கல் மலைக் கோட்டையை மக்கள் கோட்டையாக மாற்றுவதாகவோ அல்லது சிறை நிரப்புவதற்குப் பதிலாக ஸ்டேடியத்தை நிரப்புவதாகவோ இருக்கட்டும்.

8.     அங்கே, வாயில் கருப்புத்துணி கட்டியபடி பதாகைகளை ஏந்தி ஒரு மவுனப் புரட்சியை மட்டும் நிகழ்த்துவதாக அமையட்டும்.

9.     அரசு உட்பட, யார் யாரெல்லாம் இந்தக் வேள்வியின் நியாயத்தை உணர்கிறார்களோ அவர்கள் யாவரும் வாழ்த்துரை வாருங்கள் என்று பொது அழைப்பு மட்டும் விடுங்கள்.
10.   
                      i.        இப்போராட்டத்தால், மாணவர்கிளின் கல்வி பாதிக்கப் போவதில்லை.
                     ii.        அரசு எந்திரம் முடங்கப் போவது இல்லை.
                    iii.        பொதுமக்களுக்கு இடையூறு இல்லை.
ஆகவே, இப்போராட்டம் அனைவராலும் நிச்சயம் பாராட்டப்படும் ! நிச்சயம் வெற்றிபெறும் !!
Ø  செய்வீர்களா ? அல்லது
Ø  அறுப்பவன் பின்னால் செல்லும் ஆடுபோல் இருப்பீர்களா ? அல்லது
Ø  “Satisfied with what you have” என்று வசனம் பேசப் போகிறீர்களா ?
சிந்திப்பீர் ! செயல்படுவீர் !!
                        - இவ்வாறு எழுதுவது விரக்தியின் விளிம்பிநின்று என எண்ண வேண்டாம். நம்பிக்கை ஒளிக்கீற்றிநின்றேயாம் !!
நன்றி !

தொடக்கக் கல்வி - தொடக்க / நடு நிலைப் பள்ளிகளுக்கு 11.01.2015 முதல் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு இரண்டாம் பருவத் தேர்வு நடத்த இயக்குனர் உத்தரவு

 இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய பிரச்சணை -ஊதிய வழக்கு -உச்ச நீதிமன்றம் -அனைத்து ஊதிய பிரச்சனை சார்பான வழக்குடன் இணைத்து விசாரிப்பதாக -நீதிபதி .-அருண் மிஸ்ரா -ஆணை ..
supreme court க்கான பட முடிவு

தமிழ் நாட்டில்  6 வதுஊதிய குழு ஊதியம்  1.-6-2009 முதல் நடைமுறை படுத்த பட்டது .அப்போது இடைநிலை ஆசிரியர் பெற்று வந்த ஊதியம் ரூ.8370 /-ஆகும்  ஆனால் 6 வது ஊதிய குழு 5200 + 2800 = 8000 என நிர்ணயம் செய்ததது .அதாவது பெற்று வந்ததை விட குறைவாக ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது.

  இந்த பிரச்சணை யை போக்க தற்காலிக தீர்வாக பழைய ஊதியம்  4500 ஐ  1.86 ஆல் பெருக்கி 11170 என நிர்ணயம் 31.5.2009 க்கு முன்னர் பணி நியமனம் பெற்றவர்களுக்கு மட்டும் வழங்க பட்டது.ஆனால் மத்திய அரசில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 1.1.2006 முதல் 6 வது ஊதிய குழுவில்  9300 + 4200 = 13,500 என நிர்ணயம் செய்யப்பட்டது .

6 வது ஊதிய குழுவில் ஏற்பட்ட ஊதிய பிரச்சனையை தீர்க்க 2009 அக்டோபரில் திரு.ராஜீவ் ரஞ்சன் .அவர்கள் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது,.இந்த குழு இடைநிலை ஆசிரியர்கள் கிராம புறத்தில் பணி செய்கிறார்கள் .,,எண்ணிக்கை அதிகமாக உள்ளார்கள் ( 116129பேர் )  நிதி 630 கோடி வேண்டும் என்பதால் ஊதிய உயர்வு வழங்க முடியாது என காரணம் கூறி  மறுத்து விட்டது .

 2012ல்  நீதிமன்ற தீர்ப்பு படி திரு.கிருஸ்ணன்  .அவர்கள் தலைமையில் ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அமைக்கப்பட்டது ,இந்த 3 நபர் குழு தனது அறிக்கையில் இடைநிலை ஆசிரியர்கள் கல்வி தகுதி S.S.L.C. யுடன் ஆசிரியர் பயிற்சி சான்று மட்டுமே ,மத்திய அரசு ஆசிரியர் +2 வுடன் 2 வருட டிப்பமோ பயிற்சி முடித்து உள்ளார்கள் .மத்திய அரசு ஆசிரியர்கள் இந்தி ,ஆங்கிலம் கற்பிக்கிறார்கள் ,அவர்களுக்கு கணினி அறிவு உள்ளது பணி நியமனம் தேசிய அளவில் ஆனது .இந்த தகுதிகள் தமிழக இடைநிலை ஆசிரியர்களிடம் இல்லை ,பணி நியமனம் ஒன்றிய அளவில் ஆனது ,மத்திய அரசில் 1017 ஆசிரியர்கள் மட்டுமே .,தமிழ் நாட்டில் 1,16,129 பேர் உள்ளார்கள்


 .என இரண்டு ஊதிய குழு அறிக்கையும் பொய் காரணங்களை கூறி  20 ஆண்டுகள் + 2 வுடன் ,இரண்டு வருட டிப்ளமோ கல்வி தகுதி அடிப்படியில் பெற்று வந்த ஊதிய உரிமையை மறுத்து உள்ளது. மேலும் தமிழ் நாட்டில் ஊதிய பிரச்சனை உள்ள இடைநிலை ஆசிரியர்கள் 72,000 பேர் மட்டுமே..அரசு கூறும் 1,16,129 பேரில் 39,000 துவக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளார்கள் மேலும் தேர்வு நிலை / சிறப்பு நிலை ஊதியம் பெற்றவர்களும் உள்ளார்கள் இவர்களை கழிக்காமல் அனைவரும் இடைநிலை ஆசிரியர்கள் என கூறுவது பொய்யானவை ஆகும் .தமிழ் நாட்டிலும் மத்திய அரசிலும் 1986 தேசிய கல்விபடி தான் கல்வி தகுதி பின்பற்றப்படுகிறது .ஊதியமும் அதன் அடிப்படையில் 1988 ல் நிதிபதி ராமானுஜம் அவர்களின் 5 ம் ஊதிய குழு அறிக்கை படி பெற்று வந்த ஊதிய உரிமையை 6 வது பறித்து உள்ளது .எனவே 6 வது ஊதிய குழு அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் .1988 ம் ஆண்டின் அறிக்கை படி தகுதி திறமை பணிதன்மை அனைத்தும் தற்போது உயர்ந்து உள்ளது குறைய வில்லை .உண்மை நிலையை அடிப்படையாக கொண்டு தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கும் 1.1.2006 முதல் ஊதியம் 9300 + 4200  = 13,500  என நிர்ணயம் செய்ய வேண்டும் என 16.9.2013 ல் நிதி துறை செயலாளர்   அவர்களுக்கு மனு கொடுத்தோம் .அதன்மீது எந்த நடவடிக்கையும் அரசு எடுக்காததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு 33399/2013 தாக்கல்எங்கள் சங்கம் சார்பாக தாக்கல் செய்யப்பட்டது .அதில் 2014 அக்டோபரில் 8 வார காலத்தில் உண்மை நிலை அடிப்படையில் ஊதியம் மாற்றம் குறித்து அரசு அறிவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது .

ஆனால் தமிழக அரசு கடித எண் 60473/2014 ன் ஊதிய மாற்றம் செய்திட முடியாது என தவறான ஊதிய குழு அறிக்கையில் உள்ள தையே திரும்பவும் கூரியது .நாங்கள் கொடுத்த மனுவை பரிசிலனை செய்ய வில்லை .ஆதாரங்களை திருப்பி கூட பார்க்க வில்லை .ஏற்கனவே 27.2.2014 அன்று சென்னை உச்ச நீதிமன்றத்தால்   வேறு ஒரு வழக்கில்  வழங்கப்பட்ட தீர்ப்பில்6 வது ஊதிய குழு அறிக்கை தவறானது என்று ரத்து செய்யப்பட்டு உள்ளது.அதை எல்லாம்  கருத்தில் கொள்ளாமல் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட அறிக்கையில் உள்ளதை மீண்டும் எங்கள் ஊதிய வழக்குக்கு பதிலாய் தந்தது தமிழக அரசு.

தமிழக அரசின் நிதி துறை கடிதம் 60473/2014 ஐ ரத்து செய்து உண்மை நிலை மற்றும் நிதிபதி ராமானுசம் அறிக்கை படி மத்திய அரசு ஆசிரியர்கள் மற்றும் தமிழக அரசில் பிற துறையில் உள்ள டிப்பமோ கல்வி தகுதி உடையவர்களுக்கு வழங்கப்படுவது போல் ஊதியம் 9300 + 4200  என மாற்றம் செய்திட உயர் நீதிமன்ற தீர்ப்புபடி   ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் 6 வது ஊதிய குழு முரண்பாட்டை தீர்க்க ஆணையம் அமைக்க வேண்டும் .அந்த ஆணையம் உண்மை நிலையை அடிப்படையாய் கொண்டு இடைநிலை ஆசிரியருக்கு ஊதியம்  9300 + 4200 என 1.1.2006 முதல் மாற்றம் செய்தட வேண்டும் என மீண்டும் உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது .அதில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு தமிழக அரசு 
ஊதிய பிரச்சனையில் முடிவு எடுக்க நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க முடியாது ,மேலும் உச்ச நீதிமன்றம் தடை ஆணை வழங்கி உள்ளது .என கடிதம் அனுப்பியது .

தமிழக அரசின் 6 வது ஊதிய குழு அறிக்கை ரத்து செய்யப்பட வேண்டும் .ஊதியம் 1.1.2006 முதல் 9300  +  4200  என மாற்றம் செய்யப்பட வேண்டும் 31.5.2009 க்கு முன்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு 11170 ஊதியம் எனவும் 1.6.2009 பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு 8000 ஊதியம் எனவும்உள்ளதை மாற்றி 1.1.2006 முதல் இடைநிலை ஆசிரியருக்கு ஊதியம் 9300 + 4200 என மாற்றம் செய்திட வேண்டும் என இந்திய உச்ச நீதிமன்றத்தில் எங்கள் சங்கம் சார்பாக 09.09.2015  ல்
SPECIAL LEAVE TO APPEAL (CIVIL) No. 9109 OF 2015 ல் I.A.NO.5/2015 தாக்கல் செய்யப்பட்டு உள்ளது .இந்த வழக்கின் விசாரணை 09.12.2015 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா அவர்கள் முன்பாக விசாரணைக்கு வந்தது .இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றது எனவும் இந்த வழக்கு ஏற்கனவே 6 வது ஊதிய குழு பிரச்சனை சார்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குடன் சேர்த்து விசாரணை செய்யப்படும்  என ஆணை வழங்கி உள்ளார்கள் .இந்த செய்தியை தாங்கள் வெளியிடுமாறு வேண்டுகிறேன் .....டாட்டா கிப்சன் .பொது செயலாளர் ..தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ..9443464081//9840876481.