PAGEVIEWERS

இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சணை யில் உச்ச நீதிமன்றத்தில் அரசு பெற்று இருக்கும் தடை நீக்க படாமல் ஊதிய மாற்றம் ஏற்படுமா ?



இது குறித்து நமது மூத்த வழக்கறிஞர் திரு .அஜ்மல் கான் அவர்களை சந்தித்து தமிழக அரசு நமக்கு அனுப்பி உள்ள கடிதம் குறித்தும் அதில் அரசு தடை பெற்று உள்ளதாக கூரியுல்ல தகவல் பற்றியும் விவாதித்தோம்.

தற்போது அரசு தடை பெற்று இருப்பதால் நாம் உச்ச நீதிமன்றம் சென்று தடை நீக்க பட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வழக்கு எண் ;504/2012 .வழக்கு நடத்தியவர்களால் தான் திரு.கிருஷ்ணன் .இ .ஆ.ப. அவர்கள் தலைமையில் நீதிமன்ற உத்தரவு படிதான் ஊதிய குறை தீர்க்கும்  பிரிவு  அமைக்கப்பட்டது.(ஆதாரம் அ .ஆ.எண் ;123/நிதி /2012 .நாள் .10.04.2012.) 

 இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சணை யில் ஊதிய குறை தீர் பிரிவு தலைவர் .திரு.கிருஷ்ணன் .இ .ஆ.ப. அவர்கள் அறிக்கையில்தான் நம்மை மிகவும் இழிவு செய்து உள்ளார்கள் .அ .ஆ.எண் ;123/நிதி /2012 .நாள் .10.04.2012. இது  ரிட் அப்பில் எண் ;504,505,514,515 ,516 ./2012 வழக்குகளின் இடைகால ஆணை படி தான் அமைக்கப்பட்டது ஆகும் .இந்த உண்மை எத்தனை பேருக்கு தெரியும் என தெரியவில்லை . மேற்படி வழக்கிலும் நமது மூத்த வழக்கறிஞர் திரு .அஜ்மல் கான் அவர்கள் வாதாடி உள்ளார்கள் .மேற்படி வழக்கை 20 துறையை  சார்ந்த 72 பணி இடங்களில் பணி செய்யும் 252 வழக்குகள் கூட்டாக நடத்தப்பட்டு அதன் தீர்ப்பு 27.02.2014 அன்று 2 நீதிபதிகளால் வழங்கப்பட்டு உள்ளது .
மேற்படி தீர்ப்பில் திரு.ராஜீவ் ரஞ்சன் .இ .ஆ.ப. அவர்களின்  ஒரு நபர் குழு அறிக்கையும் திரு.கிருஷ்ணன் .இ .ஆ.ப. அவர்கள் தலைமையிலான  ஊதிய குறை தீர்க்கும்  பிரிவு  அறிக்கையும் சென்னை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்ய பட்டு உள்ளது. எனவே நாமும் மேற்படி அறிக்கையை ரத்து செய்து ஊதியம் 9300+4200 வேண்டும் என்றுதான் போராடுகிறோம்.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் செல்லாமல் ஊதியம் மாற்றம் பெற முடியாது.பள்ளிகள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடு பட்டாலும் ஊதிய மாற்றம் என்ற கோரிக்கையை மட்டும் வெல்ல முடியாது என்ற உண்மைய உணர்ந்து கொள்ளுங்கள் .உச்ச நீதிமன்றம் சென்றால் கண்டிப்பாக ஊதியம் 9300+4200 என்று 01.01.2006 முதல் மாற்றம் கிடைக்கும்.அது மட்டும் அல்லாது 2800 தர ஊதியத்தில் உள்ள அனைவருக்கும் கண்டிப்பாக ஊதிய உயர்வு 8000 முதல் 12,000 வரை கண்டிப்பாக கிடைக்கும்.

மனம் தளர வேண்டாம் இது நமது ஊதிய மாற்றத்திற்கான கடைசி போராட்டம்.இதில் வெல்வது நமது ஆசிரியர் சமுகம்மே .தமிழக அரசு அல்ல .
 இவன் 
டாட்டா கிப்சன் .பொது செயலாளர் ,தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்.

No comments:

Post a Comment