PAGEVIEWERS

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான நடத்தை விதிகளில் சில
1. அரசு ஊழியர்கள் /ஆசிரியர்கள் வேறு எவ்வித தொழிலையும் முழு நேரமாகவோ பகுதி நேரமாகவோ செய்யக் கூடாது. 2. சமூக பணிகள், இலக்கியம், அற இயல்புடைய பணிகள், கலைப் பணிகள், அறிவியல் பணிகள் ஆகியவற்றில் அலுவலக/பள்ளி பணிக்கு ஊறு நேராமல் ஈடுபடலாம்.
3. மத்திய /மாநில அரசுகளின் கொள்கைகள், நடைமுறைகள், உறவுகள் குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சனம் கூடாது.
4. அரசியல் கட்சிகள் எதிலும் உறுப்பினராக சேரக் கூடாது.தேர்தல் தொடர்பான வேலைகளில் ஒரு குறிப்பிட்ட கட்சியின் சார்பாக ஈடுபடக்கூடாது.
5. ஜாதி, மத சார்பான அமைப்புகளில் சேரவோ, அதன் நடவடிக்கையில் பங்களிப்பு செய்யவோ கூடாது.
6. அரசின் நடவடிக்கை குறித்து தனிப்பட்ட முறையில் பேட்டி, கட்டுரை முதலான வடிவில் விமர்சனம் கூடாது.
7. தனது பணிகள் சார்ந்த நன்மைகளுக்கு அரசியல் தலைவர்களைப் பயன்படுத்தக்கூடாது. மேலதிகாரிகளுக்கு அவர்கள் மூலம் நிர்பந்தம்செய்யக்கூடாது.
8. உயர் அலுவலர்களின் எழுத்து வாயிலான ஆணையை மறுப்பின்றி நிறைவேற்ற வேண்டும்.
9. அசையும் /அசையா சொத்துக்களை வாங்கவும் விற்கவும் துறைத் தலைவர் அனுமதி பெற வேண்டும்.
10. கிரிமினல் குற்றங்களில் ஈடுபடக் கூடாது. துறை அனுமதி இல்லாமல் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளக் கூடாது..

No comments:

Post a Comment