PAGEVIEWERS

Flash News:7ஆவது ஊதியக்குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.இனி மத்திய அரசு ஊழியர்களின் ஆரம்ப ஊதியம் ரூ.18,000.
தில்லி:மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

7வது ஊதியக் குழு பரிந்துரைகள் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதியை கணக்கிட்டு அமல்படுத்தப்படுகிறது.ஊதியக் குழு அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பான அறிக்கையை மத்திய அமைச்சரவை செயலர் பி.கே. சின்ஹா தலைமையிலான செயலர் குழு இறுதி செய்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் நிதி அமைச்சகம் அமைச்சரவைக் குறிப்பைத் தயார் செய்தது.

இதையடுத்து, ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு இன்று புது தில்லியில்நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.7-ஆவது ஊதியக் குழுவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதன் அடிப்படையில், அதன் பரிந்துரைகள் சென்ற ஜனவரி 1-ஆம் தேதியை கணக்கிட்டு அமல்படுத்தப்படும். இதனால், 50 லட்சம் மத்திய அரசு பணியாளர்களும், 58 லட்சம் ஓய்வூதியர்களும் பயன்பெறுவர்.7வது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்துவதால், மத்தியஅரசுக்கு ஆண்டுக்கு ரூ.1.02 லட்சம் கோடி கூடுதலாக செலவாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 0.7 சதவீதம்.7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, மத்திய அரசு பணியாளர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 14.27 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணியில் சேரும் அறிமுக நிலை பணியாளருக்கான மாத ஊதியம் தற்போதைய ரூ.7,000-லிருந்து, ரூ.18,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும், அமைச்சரவை செயலரின் அதிகபட்ச மாத ஊதியம் தற்போதைய ரூ.90,000-லிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆனால் தமிழகத்தில் 6 வது ஊதியகுழு தவறுகளை சரி செய்திட இந்திய உச்ச நீதிமன்றத்தில் 158 வழக்குகள் நிலுவையில் உள்ளதால் தமிழ்நாட்டில் தற்போது 7 வது ஊதிய குழு அமைக்க சாத்தியம் இல்லை. டாடா சங்க ஊதிய வழக்குபடி 6 ஊதிய குழு முறன்பாட்டை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் மீண்டும் குழு அமைத்து சரி செய்த பின் தான் 7வது ஊதிய குழு ஊதியம் நிர்னயம் செய்ய முடியும். எனவே இடைநிலை ஆசிரியர்கள் அனைவருக்கும் 1.1.2006 முதல் 9300+4200 ஊதியமாக நிர்ணயம் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் தான் இடைநிலை ஆசிரியருக்கு ஊதியம் நிர்னயம் செய்யப்படும்....டாடா கிப்ஸன்

No comments:

Post a Comment