PAGEVIEWERS

இக்னோ நுழைவு தேர்வுகள் ஆக., 26 க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன என, மதுரை மண்டல இயக்குனர் சண்முகம் தெரிவித்துள்ளார். எம்.பி.ஏ., பி.எஸ்சி., நர்சிங், பி.எட்., மற்றும் எம்.எட்., நுழைவு படிப்புக்கான தேர்வுகள் ஆக.,19ல் நடப்பதாக இருந்தது. இவை ஆக., 26 க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. காலை 10 முதல் 1 மணி வரை எம்.பி.ஏ., பி.எஸ்சி., படிப்புக்கும், பிற்பகல் 2 முதல் 4 மணி வரை பி.எட்., எம்.எட்., படிப்புக்கும் தேர்வுகள் நடக்கும். நுழைவு தேர்வுக்கான அனுமதி சீட்டு ஆக., முதல் வாரத்தில் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று, மண்டல இயக்குனர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வு மத்திய அரசிடம் தமிழக அரசு அறிவுரைகள் பெற்று முடிவெடுக்கலாம் - மதுரை ஐகோர்ட் உத்தரவு

இடைநிலை ஆசிரியர்கள், தகுதித்தேர்வில் பங்கேற்க வேண்டும் என்ற ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கில், மத்திய அரசிடம் தமிழக அரசு அறிவுரைகள் பெற்று முடிவெடுக்கலாம் என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி ஜஸ்டின் பிரபாகர் தாக்கல் செய்த மனு: நான் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளேன். சுப்ரீம் கோர்ட் உத்தரவைத்தொடர்ந்து, மாநில பதிவு மூப்பு அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். மத்திய அரசு 2009 ல், இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வந்தது. அதன்படி, ஆசிரியர் பணிக்கு குறைந்தபட்ச தகுதியை தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.,) நிர்ணயித்தது.
இதன்படி, தமிழக பள்ளிக் கல்வித்துறை 2011 நவ.,15 ல் அரசாணை 181 வெளியிட்டது. அதில், ‘பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வு அடிப்படையில் நியமிக்கப்படுவர். இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில், மாநில பதிவு மூப்பு பின்பற்றப்படும்,’ என தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம், இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு, தகுதித் தேர்வு அவசியமில்லை.
ஆசிரியர் தேர்வு வாரியம் 2012 மார்ச் 7 ல், ‘அரசு உதவி பெறும் மற்றும் அரசு உதவி பெறாத பள்ளிகளில், 2010 ஆக.,23 க்கு பின், இடைநிலை அல்லது பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருந்தால், அவர்கள் தகுதித்தேர்வு எழுத வேண்டும்,’ என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது, ஏற்கனவே வெளியான அரசாணை 181 க்கு முரணானது. இடைநிலை ஆசிரியர் பணிக்கு, தகுதித்தேர்வு எழுத வேண்டும் என்ற தேர்வு வாரிய அறிவிப்பை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதேபோல், திருநெல்வேலி புதூரை சேர்ந்த ஜெயக்குமார் உட்பட சிலர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இம்மனுக்கள், ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது தனி நீதிபதி, “ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பிற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையால், இடைநிலை ஆசிரியர் தேர்வு நடைமுறைகள் பாதிக்கப்படும். தடை விலக்கிக் கொள்ளப்படுகிறது,” என்றார்.
மனுக்கள் நேற்று நீதிபதி கே.வெங்கட்ராமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி: கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் விதி 18 ன்படி, மத்திய அரசிடம் சில விதிவிலக்குகள் பெறலாம். ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு வெளியான பின், தகுதியுள்ள போதிய ஆசிரியர்கள் கிடைக்கவில்லை எனில், கட்டாயக் கல்விச் சட்டம் விதி 18 ன்படி, மத்திய அரசிடம் விலக்கு பெறுவது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம். இம்மனுக்கள் பைசல் செய்யப்படுகிறது, என்றார்.

பி.ஏ., நடைமுறை ஆங்கிலம் (Functional English) மற்றும் ஆங்கில இலக்கியம் சமமானதே: ஐகோர்ட்

பி.ஏ., நடைமுறை ஆங்கிலம் மற்றும் ஆங்கில இலக்கிய பாடங்களை வேறுபடுத்தி பார்க்கக்கூடாது எனவும், நடைமுறை ஆங்கிலம் படித்தவர்களுக்கு பட்டதாரி உதவி ஆசிரியர் பணி வழங்க வேண்டும் எனவும், மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

திருநெல்வேலி பகுதியை சேர்ந்தவர்கள் செல்லத்தாய், அனுராதா. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில், 2004 ல் செல்லத்தாயும், 2005 ல் அனுராதாவும் பி.ஏ.,நடைமுறை ஆங்கிலம் (Functional English) தேர்ச்சி பெற்றனர். வேறு பல்கலையில் 2010 ல் பி.எட்.,தேர்ச்சி பெற்றனர். 2009-10 ல், பட்டதாரி உதவி ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்கு இருவரின் பெயர்களும், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரைக்கப்பட்டது.
சான்றிதழ் சரிபார்ப்புக்குச் சென்றனர். பணி நியமனம் வழங்கவில்லை. தேர்வுசெய்து படித்திருந்தனர். இதனால் அவர்களுக்கு பணிவாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், இது பி.ஏ. ஆங்கில இலக்கியப் பாடத்திற்கு சமமானது என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதனால், தங்களுக்கு பணி நியமனம் வழங்க உத்தரவிடக்கோரி, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு, நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன் விசாரணைக்கு வந்தது.
அரசு வக்கீல், "அரசு உத்தரவுப்படி பி.ஏ.,நடைமுறை ஆங்கிலத்தை, பி.ஏ., ஆங்கில இலக்கியத்திற்கு சமம் என, பல்கலை கூறவில்லை,&'&' என்றார். மனுதாரர் வக்கீல், "கோவை அவினாசிலிங்கம் பல்கலையில் பி.ஏ.,நடைமுறை ஆங்கிலத்தை அரசு அங்கீகரித்து, பணி நியமனம் வழங்கியுள்ளது,&'&' என்றார்.
நீதிபதி: நிகர்நிலை பல்கலையில் பி.ஏ.,நடைமுறை ஆங்கிலத்தை, பி.ஏ., ஆங்கில இலக்கியத்திற்கு சமமாக கருதும் அரசு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பாடத்தை மட்டும் ஏன் வேறுபடுத்தி பார்க்க வேண்டும். இது தவறு. மனுதாரர்கள் இருவருக்கும் பணி நியமன உத்தரவு வழங்க வேண்டும், என்றார்.
  1. 2012-13பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் மற்றும் மாறுதல் குறித்த இயக்குநர் செயல்முறைகள் 
  2. பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் மற்றும் மாறுதல் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள உபரிபணிடங்கள் அளித்தல்
  3. அரசாணை எண் 172 பள்ளிக்கல்வித்துறை
  4. அரசாணை எண் 270 பள்ளிக்கல்வித்துறை
  5. அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளுக்கான 2012-13 விலை இல்லா நோட்டு புத்தகங்கள் வழங்குதல் அனுமதி மற்றும் பருவ வாரியான வழங்குதல் விவரம் அரசாணை வெளியீடு.

தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில், 2008, 2009, 2010 ஆண்டுகளில் பதிவு மூப்பை புதுப்பிக்கத் தவறியவர்கள், வரும் மூன்று மாதங்களுக்குள் தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று, அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடக்கக்கல்வி - 2012 - 2013ஆம் கல்வியாண்டு முதல் ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் 1-5 மற்றும் 6ஆம் வகுப்புகளில் தலா இரண்டு ஆங்கில வழி இணை பிரிவுகள் துவங்குதல் - தமிழக அரசின் ஆணை மற்றும் பள்ளிகள் பட்டியல் வெளியீடு.

அரசாணை(நிலை) எண். 180 பள்ளிக்கல்வித்(இ1)துறை நாள். 17.07.2012 தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்.31992 / கே2 /

தேசிய திறனாய்வு தேர்வு, பள்ளி பொதுத் தேர்வு, ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வு, எட்டாம் வகுப்பு நேரடி தனித்தேர்வு, பத்தாம் வகுப்பு உடனடித் தேர்வு, தனித்தேர்வு உட்பட அனைத்து வகை தேர்வுகளுக்கும், இனி இணையதளம் மூலம் தான் விண்ணப்பம் - தேர்வு துறையில் வருகிறது சீர்திருத்தம்

அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ஒரு லட்ச ரூபாய்க்கு மிகாமலும், குடும்பத்தில் எவரும் பட்டதாரி இல்லை என்ற சான்றிதழும் தர வேண்டும். அவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு 6 முதல் 8ம் வகுப்பு வரை ரூ.200ம், 9 மற்றும் 10ம் வகுப்பு வரை ரூ.250 ம், 11 மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கு ரூ.500ம் உதவித்தொகை வழங்கப்படும். இலவச கல்வி பெறுபவர்களுக்கு அனைத்து கட்டணங்களும் விலக்கு அளிக்கப்படும். மருத்துவம், பொறியியல், சட்டம், வேளாண்மை, கால்நடை, மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு பெற்றோர் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிடமிருந்து பெறலாம். புதுப்பித்தல் உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை வரும் ஜூலை 31க்குள்ளும், புதிய உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை ஆக.,31க்குள்ளும் தர வேண்டும். கல்வி உதவித்தொகை இணையதளம் மூலம் வழங்கப்படும். கூடுதல் விபரங்களை மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலரிடம் தெரிந்து கொள்ளலாம்.
Honble Chief Minister flagged off the newly purchased modern Police Patrol vehicles
Press Release

டிசம்பரில் மீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு



வரும் டிசம்பரில் மீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

  சிறந்த முறையில் தேர்வுக்குத் தயாரானவர்கள் மட்டுமே தகுதித் தேர்வில் வெற்றி பெற முடியும். எனவே, தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெறாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குவதற்காக ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பரில் நடத்தப்படுகிறது.


மத்திய அரசு ஆசிரியர்களு க்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இடை நிலை ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் தொடக்க பள்ளிகளில் ஒரு லட்சத்து 36 ஆயிரம் ஆசிரியர்களும், நடுநிலை பள்ளிகளில் 75 ஆயிரம் ஆசிரியர்கள் என்று மொத்தம் 2 லட்சத்து 11 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 44 ஆயிரத்து 905 பேர் ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர்களாக உள்ளனர். 9969 பேர் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள். சுமார் 65 ஆயிரம் பேர் பட்டதாரி ஆசிரியர்கள். இதர 91 ஆயிரத்து 36 பேர் இடைநிலை ஆசிரியர்களாக உள்ளனர். இவர்களில் சாதாரண நிலையில் 30 ஆயிரம் பேரும், சிறப்பு நிலையில் 21 ஆயிரத்து 36 பேரும் உள்ளனர்.

TET - உயர் நீதிமன்றத்தில் வழக்கு

ஆசிரியர் தகுதித் தேர்வு சட்ட விரோதமானது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டம், போளூரைச் சேர்ந்த க. ரங்கநாதன் மனு தாக்கல் செய்திருந்தார்.
       இந்த மனு மீது நீதிபதி என். பால் வசந்தகுமார் புதன்கிழமை விசாரணை நடத்தினார். அப்போது, இந்த மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் நான்கு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார். மனு விவரம்: நான் கடந்த 2004-ம் ஆண்டு ஆசிரியர் பயிற்சிக்கான பட்டயப் படிப்பை முடித்துள்ளேன்.

    அதே ஆண்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கிறேன். விரைவில் ஆசிரியராக நியமிக்கப்படுவேன் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்கான அறிவிக்கையை கடந்த 2011-ம் ஆண்டு ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் வெளியிட்டது. 

    இதன்படி ஆசிரியர் நியமனத்துக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்று மாநில தொடக்கக் கல்வித் துறையும், மாநில ஆசிரியர் தேர்வு வாரியமும் கூறியுள்ளன. ஏற்கெனவே ஆசிரியர் பயிற்சி முடித்து, பயிற்சிக்குப் பின் தேர்வு எழுதி, அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றதன் மூலம் ஆசிரியர் பணி நியமனத்துக்கான தகுதியை நான் பெற்றுள்ள நிலையில், மீண்டும் ஒரு தகுதித் தேர்வு எழுதச் சொல்வது சட்ட விரோதம் என்று அந்த மனுவில் ரங்கநாதன் கூறியுள்ளார்.