PAGEVIEWERS

அனைவருக்கும் கல்வி இயக்கம் - பயிற்சி - தன் சுத்தம் மற்றும் பள்ளி சுகாதாரம் - 25.08.2012 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான குருவளமைய பயிற்சி கையேடு மற்றும் கால அட்டவணை

 

பள்ளிக்கல்வி - 2012 - 13ஆம் கல்வியாண்டு முதல் ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகள் / உயர்நிலைப் பள்ளிகள் / மேல்நிலைப் பள்ளிகள் 320 பள்ளிகளின் பெயர் பட்டியலுக்கு ஒப்புதல் அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.

அரசாணை (நிலை) எண். 193 பள்ளிக்கல்வித்(இ1)துறை நாள். 26.07.2012 மற்றும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளின் பெயர்ப் பட்டியல் பதிவிறக்கம் செய்ய...
 

தொடக்கக்கல்வி - உதவி பெறுபவை - தொடக்க / நடுநிலைப்பள்ளிகளின் பள்ளி பாதுகாப்பு மற்றும் மாணவர் நலன் கருதி நிரந்திர / தற்காலிக அங்கீகார விவரங்கள் கோரி இயக்குனர் உத்தரவு.

தினமலர் சார்பில், வி.ஏ.ஓ., தேர்வுக்கான இலவச ஆலோசனை முகாம், நாளை(ஆக.,18) காலை 10 முதல் மதியம் ஒரு மணிவரை, மதுரை பசுமலை மன்னர் கல்லூரியில் நடக்க உள்ளது.
ஜூலை 9ல் வி.ஏ.ஓ., தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. மொத்தமுள்ள 1870 காலிப்பணியிடங்களுக்கு, இதுவரை பத்தரை லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஒரு பதவிக்கு 550 பேர் வரை
மதுரை: விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 2012 - 13க்கான உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி, பல்கலையில் பயிலும் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்க உதவித் தொகை வழங்கப்படுகிறது.
பள்ளி வீரர்களுக்கு ரூ.10ஆயிரம், கல்லூரி, பல்கலை வீரர்களுக்கு ரூ.13ஆயிரம் வழங்கப்படும். 1.7.2011 முதல் 30.6.12 வரையான காலத்தில், விளையாட்டுத் துறையில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் மட்டும் விண்ணப்பிக்கலாம். தேசிய பள்ளி விளையாட்டு குழுமம்,
சென்னை: தமிழக அரசு அறிவித்துள்ள இலவச காலணி வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த, பள்ளி மாணவ, மாணவியரின் கால் பாத அளவீடு எடுப்பது குறித்து, மாநில அளவில், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் படி, 81 லட்சம் மாணவ, மாணவியருக்கு, 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவியரின் சரியான கால் பாத அளவு மூலம், புதிய காலணிகள் தயாரிக்கப்படும். ஒன்று முதல், ஐந்தாம் வகுப்புக்கு முதல் பிரிவு எனவும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை

தேசிய நெடுஞ்சாலைகளில் மருத்துவ வசதிகள்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோதேசிய நெடுஞ்சாலைகளில் மருத்துவ வசதிகள்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்   புதுடில்லி : தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகள் ஏற்படும் போது, பாதிக்கப்படுவோருக்கு சரியான நேரத்திற்கு சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவ வசதிகள் இல்லாததற்காக, மத்திய அரசுக்கும், தேசிய 

மாநில நுகர்வோர் கோர்ட்டின் மதுரை கிளையில், வரும் 21ம் தேதி முதல், வழக்குகள் விசாரணை துவங்குகிறது.மாவட்ட நுகர்வோர் கோர்ட்டுகளின் தீர்ப்புகளுக்கு எதிரான மேல்முறையீட்டு 

தளவாய்புரம்: சொந்த செலவில், 20 ஆண்டுகளாக மரங்களை வளர்த்து வருகிறார், சேத்தூர் வெற்றிலை வியாபாரி தலைமலை.விருதுநகர், சேத்தூர் அருகே தேவதானத்தை சேர்ந்தவர் தலைமலை, 50. இவர், தினமும் சைக்கிளில் வெற்றிலை வியாபாரம் செய்கிறார்.

ஒரு நாள், வியாபாரத்தை முடித்து விட்டு வரும் போது, வெயிலின் கொடுமைக்கு மூதாட்டி இறந்ததை கண்டார். "மரம் இருந்தால்,

SCERT - CCE - கல்வி இணை செயல்பாடுகள் - பள்ளியில் செயல்படுத்தப்பட உள்ள காலை மாலை செயல்பாடுகள் முதன்மை கருத்தாளர் பயிற்சி - சார்பு.

 

சென்னை தொடக்கக் கல்வி இயக்கக கூட்ட அரங்கில் நடைபெற்ற அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களின் கூட்ட நடவடிக்கைக் குறிப்பு

 

தொடக்கக்கல்வி - பயிற்சி - RTE சட்டம் 2009 - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள், நடுநிலைப் பள்ளி, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான RTE சட்டம் பயிற்சி மாவட்ட அளவில் 03.09.2012 அன்று வழங்க தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு.

எல்லாருக்கும் நன்மை செய்யுங்க!


* அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலை வாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்.
* இறைவனுக்காக நீங்கள் உழைப்பது வீண் போகாது என்பதை அறிந்து, இறைவனின் பணியை இன்னும் அதிகமாக எப்போதும் செய்யுங்கள்.
* நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே! சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர், எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன்.
* வைகறையில் விழித்தெழுந்து நள்ளிரவில் ஓய்வெடுக்கும் வரை மானிடர் தம் உணவுக்காக வருந்தி உழைப்பது வீணே.
* நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய். நீ நெருங்கிக் கொண்டிருக்கும் பாதாளத்தில் எவரும் செயல் புரிவதுமில்லை, சிந்தனை செய்வதுமில்லை.
* உங்களுள் ஒருவருக்கொருவர் மட்டுமின்றி, எல்லாருக்கும், எப்பொழுதும், நன்மை செய்யவே நாடுங்கள்.
* நம்பிக்கை இல்லாத தீய உள்ளம், கடவுளை விட்டு விலகும். இத்தகைய தீய உள்ளம் உங்கள் எவருக்கும் இராதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தனது புதிய தானியங்கி தரையுளவி ஒன்றை செவ்வாய்க் கோளில் தரையிறக்கியுள்ளது.

ஓவியரின் கைவண்ணத்தில் கியூரியோசிட்டி தரையிறங்குவதைக் காட்டும் படம்
செவ்வாயில் இருந்து கியூரியோசிட்டி அனுப்பிய முதலாவது படம்
கியூரியோசிட்டி (Curiosity) என அழைக்கப்படும் ஒரு தொன் எடையுள்ள இந்தத் தரையுளவி செவ்வாயின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் உள்ள பள்ளம் ஒன்றில் ஜிஎம்டி நேரம் இன்று காலை 05:32 மணிக்கு தரையிறங்கியது. இத்தளவுளவி குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு செவ்வாயில் தங்கி அங்கு முன்னர் வாழ்ந்திருக்கக்கூடிய உயிரினங்கள் பற்றி ஆராயத் திட்டமிடப்பட்டுள்ளது.

தரையுளவி செவ்வாயில் தரையிறங்கிய சமிக்கை நாசாவின் ஒடிசி செயற்கைக் கோள் வழியாக பூமியை எட்டியதை அடுத்து கலிபோர்னியாவின் பசடேனா நகரில் உள்ள ஜெட் உந்துகை ஆய்வுகூடத்தில் பெரும் கரகோசத்துடன் வரவேற்கப்பட்டது. கியூரியோசிட்டி செவ்வாயில் தரையிறங்கிய முதலாவது படிமங்கள் ஏற்கனவே பூமிக்குக் கிடைத்துள்ளது.

பூமியில் இருந்து 570 மில்லியன் கிமீ தூரப் பயணத்தை
கேப் கேனவரல் ஏவுதளத்தில் இருந்து 2011 நவம்பர் 26 ஆம் நாள் ஆரம்பித்த செவ்வாய் அறிவியல் ஆய்வுகூடத் திட்டம் செவ்வாயின் சுற்றுவட்டத்துள் 20,000 கிமீ/மணி வேகத்தில் நுழைந்தது. பின்னர் இத்திட்டத்தின் தாய்க்கலத்தில் இருந்து கியூரியோசிட்டி தரையுளவி 0.6 மீ/செக் மெதுவான வேகத்தில் பாரசூட் மூலம் செவ்வாயில் தரையிறங்கியது.

கியூரியோசிட்டி செவ்வாயில் தரையிறங்கும் நாசாவின் நான்காவது தரையுளவி ஆகும். ஆனாலும் இது ஏனைய திட்டங்களிளை விட மிகப் பெரியதாகும். 1997 ஆம் ஆண்டில் தரையிறங்கிய முதலாவது தரையுளவி நிறியை விட 4 மடங்கு பாரமான பரிசோதனைக் கருவியை கியூரியோசிட்டி கொண்டு சென்றுள்ளது.

தரையுளவி தரையிறங்கிய பள்ளத்தில் உள்ள 5 கிமீ உயர மலை ஒன்றை கியூரியோசிட்டி ஆராயும். மலையில் ஏறும் போது பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் திரவ நீரில் உருவாகிய பாறைகளையும், நுண்ணுயிரிகள் வாழ்ந்த சூழ்நிலைகளையும் அது ஆராயும்.

ஆரம்பத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே இத்தரையுளவி இயங்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் தற்போது இது பத்து அல்லது அதற்கு மேலான ஆண்டுகளுக்கும் இயங்கக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த மெகா ஊழலை மிஞ்சும் வகையில், தற்போது மேலும் பல ஊழல்கள் நடந்திருப்பது, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகத்தின் அறிக்கை மூலம், வெளிச்சத்துக்கு வந்துள்ளது

சட்டப் படிப்பில் சேர்வது எப்படி?-

சமூகத்தில் ஒரு சக்தி வாய்ந்த படிப்பாக திகழும் சட்டப் படிப்பிற்கான சேர்க்கை நடைமுறைகளை மாணவர்கள் தெளிவாக அறிந்துகொண்டால் நன்மை பயக்கும்.
படிப்புகள்
சட்ட இளநிலைப் படிப்பு(LL.B) என்பது இன்னும் பிரபலமாக இருக்கும் ஒரு படிப்பு. ஒருங்கிணைந்த B.A. LL.B, B.Sc. LL.B, BBA. LL.B and B.Com. LL.B படிப்புகளும் பிரபலமானவை. மேலும், சட்ட முதுநிலைப் படிப்பையும்(LL.M) மாணவர்கள் மேற்கொள்ள முடியும்.

"பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களை எக்காரணம் கொண்டும் வேருடன்  வெட்டக்கூடாது. மேலும், வகுப்பு நேரங்களில் ஆசிரியர்கள் மொபைல் போன்  உபயோகிக்கக் கூடாது; மொபைல் போன் பயன்படுத்தும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,&'&' என முதன்மை கல்வி  அலுவலர் ஆனந்தி எச்சரித்து உள்ளார்.

அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு நலத்திட்ட உதவி வழங்குவது தொடர்பாக, திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம்,
கள்ளக்குறிச்சி: சுகாதாரம் இல்லாத அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சம்பத் எச்சரித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கோட்டத்திற்குட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் சுகாதார நிலையை மேம்படுத்துவதற்கான
சென்னை: டி.என்.பி.எஸ்.சி சார்பில் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தர்மபுரியைச் சேர்ந்த சின்னச்சாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்துள்ளது. சின்னசாமி தாக்கல் செய்த மனுவில், தனது வினாத் தாளில் 200க்கு 195 கேள்விகள் மட்டுமே இருந்ததாகவும், இதனால் தனது அரசு வேலை உரிமை பறிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.  இதனையடுத்து வழக்கு தொடர்பாக விளக்கம் கேட்டு டி.என்.பி.எஸ்.சிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சாதாரண போலீஸ்காரராக பணிபுரிந்து வந்த ஜேப்பியார், இன்று, 10 பொறியியல் கல்லூரிகளுக்கும், ஒரு பல்கலைக்கழகத்திற்கும், ஆறு தொழிற்சாலைகளுக்கும் சொந்தமானவர் என்ற செய்தியை படித்த போது, வியப்படையாதவர்கள் யாரும் இருக்க முடியாது. காவல் துறையில் தொடர்ந்து இவர் பணி புரிந்திருந்தால், இந்த அளவுக்கு சொத்து சேர்க்க முடியாது. இவ்வளவு சொத்து சேர்வதற்கு மூல காரணம் அரசியல். அரசியலில் இவர் ஈடுபட்டதால் தான், இவ்வளவு சொத்து.
மேலூர்: மதுரை மாவட்டம், மேலூர் அருகே, சமணர் படுகைகள், கல்வெட்டுக்கள் நிறைந்த மலைகளையும், குவாரி உரிமையாளர்கள் விட்டு வைக்காதது, அதிகாரிகள் ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆப்கானிஸ்தானில், பாமியான் புத்தரை சிதைத்த தலிபான் செயல் போல, இங்கே கொடுமை நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

மேலூர் அருகே, கீழவளவு பகுதியில் உள்ள, மூன்று மலைகளும், அரிட்டாபட்டியில் உள்ள ஏழு மலைகளும் மற்றும் திருவாதவூர்
TATA சங்கக்கோரிக்கை விரைவில் வெற்றி   சத்துணவுத் திட்டத்தில், பல வகை உணவுகளைச் சேர்ப்பது குறித்த அறிவிப்பு, அண்ணாதுரை பிறந்த தினத்தன்று வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
  சத்துணவில், இனி, பெப்பர் முட்டை, கறிவேப்பிலை சாதம் போன்றவை வினியோகிக்க வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.

தமிழகத்தில், பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, தேவையான அளவில் சத்தான உணவு அளிப்பதன் மூலம், அவர்கள் உடல் தரத்தை உயர்த்தி, கல்வி கற்பதை ஊக்குவித்து, கல்வி விகிதாச்சாரத்தை உயர்த்துவதுடன்,