PAGEVIEWERS

சென்னை: தமிழக அரசு அறிவித்துள்ள இலவச காலணி வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த, பள்ளி மாணவ, மாணவியரின் கால் பாத அளவீடு எடுப்பது குறித்து, மாநில அளவில், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் படி, 81 லட்சம் மாணவ, மாணவியருக்கு, 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவியரின் சரியான கால் பாத அளவு மூலம், புதிய காலணிகள் தயாரிக்கப்படும். ஒன்று முதல், ஐந்தாம் வகுப்புக்கு முதல் பிரிவு எனவும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை
இரண்டாம் பிரிவு எனவும், ஒன்பது முதல் 10ம் வகுப்பு வரை, "அடல்ட்&' என்ற மூன்றாம் பிரிவாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
பள்ளி வகுப்பு ஆசிரியர்கள் மூலம், மாணவர்களின் கால் பாதத்தின் அளவு அளவீடு செய்ய கல்வி மாவட்டத்துக்கு இரண்டு ஆசிரியர்களுக்கு, சென்னை, கிண்டியில் உள்ள மத்திய காலணி பயிற்சி மையத்தில் ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. இத்தகவல் பெறப்பட்டு, தேவையான காலணிகள் எண்ணிக்கை பட்டியலிடப்படும்.

No comments:

Post a Comment