PAGEVIEWERS

இன்று இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணைக்கு 

வருவதற்கு முன்பே ஒத்தி வைக்கப்பட்டது.

இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் வரிசை எண்33-ல் விசாரணைக்கு வர இருந்தது .இன்று நீதி மன்றத்தில் தலைமை நீதிபதி முறைப்படி பதவியேற்றார்.அதன் காரணமாக பிற்பகல் 12.30மணியளவில் தான் நீதிமன்றம்
தொடங்கியது.மேலும் இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே ஒரு வருட வழக்கறிஞர் வழக்கை ஒத்திவைக்குமாறு கேட்டு கொண்டதால் இன்று வழக்கு     விசாரணைக்கே வரவில்லை.எனவே வருகிற 30.10.2013-புதன்கிழமை இவ்வழக்கை  நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

W.P.Nos.21525, 22423 of 2013 and batch cases – Filed challenging the orders issued in G.O.Ms.No.242, Finance (Pay Cell) department, dated 22—7-2013 based on the recommendations of the Pay Grievance Redressal Cell – Admission of pay bills for the month of October,2013 - Instructions issued – Regarding.



மீண்டும் சிறகடித்து பறக்குது கோ-ஆப்டெக்ஸ், சாதித்து காட்டும் சகாயம்.. குஷியில் நெசவாளர்கள்

இந்திய அரசின்   RTE  சட்டப்படி D.T.Ed +BA / 

B.SC படித்தால் 

1 to 8 வரை ஆசிரியராக பணியாற்றலாம்  ...








    










தொடக்கக் கல்வி - தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் பொழுது நிர்வாக காரணமாக மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் பொது மாறுதலில் முன்னுரிமை வழங்கிய பின்னர் பொது மாறுதல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலந்தாய்வு நடத்த உத்தரவு



நான்கு மாவட்ட கலெக்டர்களை மாற்றியும், புதிதாக இருவரை கலெக்டர்களாக நியமித்தம் தமிழக அரசு உத்தவிட்டுள்ளது. இதன்படி, கோவை மாவட்ட கலெக்டராக இருந்த கருணாகரன், திருநெல்வேலிக்கு மாற்றப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட கலெக்டராக இருந்த அர்ச்சனா பட்நாயக், கோவை மாவட்ட கலெக்டராகவும், வேலூர் கலெக்டராக இருந்த சங்கர், நீலகிரி மாவட்ட கலெக்டராகவும், தஞ்சாவூர் மாவட்ட கலெக்டராக இருந்த பாஸ்கர், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராகவும், நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வகையில், மதுரை மாநகராட்சி கமிஷனராக இருந்த நந்தகோபால், வேலூர் மாவட்ட கலெக்டராகவும், தமிழ்நாடு குடிநீர், வடிகால் வாரியம் இணை மேலாண்மை இயக்குனர் சுப்பையன், தஞ்சாவூர் மாவட்ட கலெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 
சிறுமிகள் திருமணத்தை தடுக்க தலைமையாசிரியர்களுக்கு 

அறிவுறுத்தல்கள் 

13 முதல் 18 வயது வரையான மாணவிகள், பள்ளியில் திடீரென மாற்று சான்றிதழ் கேட்டால், சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள், மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு தகவல் தரவேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

திருச்சி மாவட்டத்தில்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நடைபெறும் குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்து ஆலோசிக்க, மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ தலைமையில் நடந்த கூட்டத்தில் இவ்வாறு முடிவு செய்யப்பட்டது.

13 முதல் 18 வயது வரையிலான மாணவிகள், திடீரென தகுந்த காரணமின்றி மாற்று சான்றிதழ் கேட்டால், தலைமையாசிரியர்கள் உடனடியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட சமூக நல அலுவலர், முதன்மை கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், 3 நாட்களுக்கு மேல் தகுந்த காரணங்களின்றி அந்த வயதுடைய மாணவிகள் விடுப்பு எடுத்தாலும், தலைமையாசிரியர்கள் தகுந்த இடங்களில் தகவல் தெரிவிக்க வேண்டும்.

தொடக்கக் கல்வி - ஆசிரியர்கள் முன் அனுமதி பெற வேண்டிய நிலையில், முன் அனுமதி பெறாமல் பட்டப்படிப்பு மேற்கொண்டால் அதற்கு விதிகளின்ப்படி தக்க ஒழுங்கு நடவடிக்கை தான் எடுக்க வேண்டுமே தவிர ஊக்க ஊதிய உயர்வினை இரத்து செய்ய கூடாது என இயக்குநர் உத்தரவு



ஆசிரியருக்கு வழங்கிய தேர்வு நிலை அந்தஸ்தை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு வழங்கப்பட்ட தேர்வு நிலை ஆசிரியர் அந்தஸ்தை ரத்து செய்த உதவி தொடக்க கல்வி அதிகாரியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. 

சுரேஷ்பாபு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: பொள்ளாச்சி அருகே உள்ள நல்லம்பள்ளியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 1989-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தேன்.

அதன் பிறகு, 1997-ஆம் ஆண்டு கோவை, சிங்காநல்லூரில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியில் அரசு வேலை கிடைத்ததும் அங்கு பணியில் சேர்ந்தேன். பிறகு, 10 ஆண்டுகள் ஆசிரியர்களாக பணியாற்றியவர்களுக்கு வழங்கக்கூடிய தேர்வு நிலை ஆசிரியர் அந்தஸ்து 1999-ஆம் ஆண்டு எனக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், அரசு தணிக்கை துறை ஆட்சேபனை தெரிவித்ததாகக் கூறி, எனக்கு வழங்கப்பட்ட தேர்வு நிலை அந்தஸ்தை, பொள்ளாச்சி உதவி தொடக்க கல்வி அதிகாரி 2006-ஆம் ஆண்டு ரத்து செய்து உத்தரவிட்டார். அதனால், எனக்கு வழங்கப்பட்ட அந்தஸ்தை ரத்து செய்த தொடக்க கல்வி அதிகாரியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.  

பகுதி நேர ஆசிரியர்களுக்கு விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்து சம்பளத்தை முழுமையாக பிரதி மாதம் 5ம் தேதிக்குள் வழங்கவும், மேலும் சில விதிமுறைகளை வழங்கி திட்ட இயக்குநர் உத்தரவு

எனது அருமை இஸ்லாம் நண்பர்களுக்கு ஈத் முபாரக் வாழ்த்துக்கள் .


ன் இனிய அப்பாவி இடைநிலை ஆசிரிய தோழனே! உன் உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக உன்னிடமிருந்து பறிக்கப்படுவதை உணர்ந்தாயா? உன் தரநிலை தர ஊதியத்தால் தரம் கெட்டு போனதை அறிந்தாயா? அறிந்தும் உன்னிடம் எவ்வித சலனமோ, சஞ்சலமோ இருப்பதாக தெரியவில்லை. உன்னால் உனக்கான சரியான இயக்கத்தைக்கூட தெரிவு செய்ய இயலாமல் சிதறிக் கிடக்கிறாய். போராட்ட களத்தில் உன் பங்களிப்பு என்பது சொல்லும் அளவிற்கில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. ஏன் இந்த தயக்கம். நாம் ஏன் செல்ல வேண்டும்? நமக்காக யாராவது போராடுவார்கள் என்ற அசட்டையா? இல்லை அச்சமா? புரியவில்லை. இந்த நாட்டின் தலைவிதியை நிரணயிக்கப்போகும் மாணவர் சமுதாயம் உன் கையில். உன்னுடைய பிரதிபலிப்பு உன் மாணவர் சமுதாயத்திற்கும் தொடரும் என்பது உனக்கு பரியாததா?. உன் உரிமைகளைக் கூட கேட்க திராணியற்று ஊமையாய் உருக்குலைந்து இருக்கும் உன்னால் எப்படி உன் மாணவர் சமுதாயத்திற்கு உரிமையை பெற கற்றுக்கொடுக்க போகிறாய்?. போராட்டக் களத்தில் மற்றவர்கள் போராடிப் பெறும் உரிமைகளை எவ்வித கூச்சமும் இன்றி எப்படி உன்னால் அனுபவிக்க இயலுகிறது. மீண்டும் பகத்சிங் பிறந்தா உன்னை காப்பற்ற முடியும்?. இல்லை சேகுவரா தோன்ற வேண்டுமா?. உனக்கான பகத்சிங், சே யார் என்று அடையாளம் கண்டுக்கொள். இன்று தவறவிட்டால் இழந்த உரிமைகளை உன்னால் இனிமேல் பெற இயலாது. பல கட்ட போராட்டங்கள் தனித்தும், இணைந்தும் அரங்கேற்றியாகிவிட்டது. அரசோ, அதிகாரிகளோ அசையவில்லை. 30000க்கும் குறைவாக உள்ள பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு பாதிப்பு நீக்க முன்வர அரசு தயங்க காரணம் யோசித்தாயா? தொடக்கக்கல்வித் துறையில் உள்ள சங்கங்களின் போராட்டங்களை பார்த்தாலே பயம் கொள்ளும் அரசாங்கம் அமைதி காப்பதன் அர்த்தம் புரிந்தாயா? போராட்ட களத்தில் உன் பங்களிப்பு குறைந்ததன் விளைவே என்பதை நீ அறிவாயா?. அளவு மாற்றம் குணம் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை என்றாவது நினைத்ததுண்டா?. போராட்டம் யாருக்கோ என்று வெளியில் நின்று வேடிக்கை பாரப்பது எவ்வளவு கேவலம் என்பது இனிமேலாவது உணர்ந்து கொள். இயக்கங்கள் அறிவிக்கும் போராட்டத்தில் எழுச்சியுடன் கலந்து கொள்ள தயாராகு. மற்றவர்களையும் தயார் படுத்து. இடைநிலை ஆசிரியர்களில் இளைஞர்கள் பலம் அதிகமாகிவிட்டது. உன் பலத்தை பலவீனமாக்க சில சுயநலமிக்க தலைவர்கள் திட்டமிட்டு காய் நகர்த்துகிறார்கள். அதில் சிக்கி சின்னாபின்னமாகி விடாதே. சிந்தித்து செயல்படு. சிந்தணை செய்யாதவன் ஜெயித்ததாக வரலாறு இல்லை. உனக்காக போராட கூட்டு நடவடிக்கைக்கு 

TATA  KIPSON.9443464081.

உணர்வாயா? மற்றவர்க்கும் உணர்த்துவாயா?
உண்மையை உரக்கச் சொல்லுவோம்!!!

உரிமையைப் போராடிப் பெறுவோம்!!!
Dinakaran  news  in  nellai