PAGEVIEWERS

SSA SPD ஆய்வு கூட்ட அறிக்கை: நாள் 18.10.2013- மேற்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன.

த.அ.உ.ச 2005 - பி.எஸ்.சி., பி.எட்., முடித்த பின் பி.ஏ., (ஆங்கிலம்) மூன்றாண்டுகள் படித்தவர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றபின் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியமர்த்தலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் பதில்.


தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை...





சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக நல்ல வெயில் அடித்து வந்தது. இந்நிலையில், சென்னை உள்பட தமிழகத்தில் பல பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. காலை நேரத்தில் பெய்த மழையால் தீபாவளி பட்டாசுகள் வெடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பின்னர், காலை 10 மணியளவில் வெயில் அடிக்க தொடங்கியது. இதனால், பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.
   
இந்நிலையில், சென்னை எழும்பூர், திருவல்லிகேணி, சென்ட்ரல், புரசைவாக்கம், கோயம்பேடு, வடபழனி, அண்ணா நகர், அமைந்தகரை சாந்தோம், பட்டினப்பாக்கம் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரை பலத்த மழை பெய்தது. அதன் பின்னர், காலை 7 மணி வரை சாரல் மழை அடித்து கொண்டிருந்தது. இதனால், பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், இலங்கை அருகே வங்க கடலில் குறைந்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்ய கூடும் என்றனர்
.

தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை -INCENTIVE மற்றும் INCREMENT பெறுவதற்கான-அரசாணை -OLD IS GOLD- G.O

EMIS - முறையில் பதியப்பட்ட  மாணவர்களின் விபரங்களில் மாணவனின் ஆதார் அடையாள அட்டையில் உள்ள EID/UID எண்ணினை பதிவு செய்தல் சார்பான  - பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் 


தமிழகத்தில் புதிதாக 356 சி.பி.எஸ்.இ. பள்ளிகள்

தமிழ்நாட்டில் மத்திய அரசு தனியார் கூட்டுமுயற்சியில் 356 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்கப்படுகின்றன. இதையடுத்து, அரசு பள்ளிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மாணவ, மாணவிகளுக்கு உயர்தரமான கல்வி கிடைத்திடும் வகையில் மத்திய மாதிரி பள்ளி (ராஷ்ட்ரிய ஆதர்ஷ் வித்யாலயா) என்ற திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.

‘யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை’ செவ்வக கட்டத்தில் ‘நோடா’ பட்டன்....




புதுடெல்லி : தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள், அதை பதிவு செய்வதற்காக, வாக்குப்பதிவு இயந்திரத்தில் செவ்வக வடிவ கட்டத்தில் ‘நோடா’ பட்டன் சேர்க்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலில் தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள், வாக்குப்பதிவு மூலம் அதை பதிவு செய்வதற்காக ‘யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை’ (நோடா) என்ற பட்டனை வாக்குப்பதிவு இயந்திரத்திலும், வாக்குச்சீட்டிலும் சேர்க்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த மாதமும், டிசம்பரிலும் நடக்க உள்ள 5 மாநில தேர்தலிலேயே இதை அமல்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக தனி சின்னத்தை அது அறிமுகம் செய்துள்ளது.

கொலைக்களமாகும் கல்வி கூடங்கள்





சென்னையில் தனியார் பள்ளி ஒன்றில் வகுப்பறையில் வைத்து ஆசிரியை உமா மகேஸ்வரி , 9ம் வகுப்பு மாணவர் ஒருவரால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை  உண்டாக்கியது. இந்த சோக சம்பவத்தின் சுவடுகள் கூட ஆறாத நிலையில், மீண்டும் ஓர் அதிர்ச்சி சம்பவமாக தூத்துக்குடி மாவட்டம் கீழ வல்லநாட்டில் இன்பேன்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி முதல்வராக இருந்த சுரேஷ் (49), மாணவர்கள் 3 பேரால்  வெட்டி கொலை செய்யப்பட்டார். 

01.01.2014 முதல் அகவிலைப்படி உயர்வு 100 சதவீததுக்கும் மேலாக உயருகிறது!

செப்டம்பர் - 2013 விலைவாசி குறியீட்டு எண் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதன்படி அகவிலைப்படி 95.59% ஆக உள்ளது. ஆகவே 01.01.2014 முதல் அகவிலைப்படி உயர்வு 10சதவீதத்துக்கும் மேலே உயர வாய்ப்பு உள்ளது. அதாவது 01.01.2014முதல் அகவிலைப்படி உயர்வு 100 சதவீததுக்கும் மேலாக உயரும் வாய்ப்பு அதிகம். மேலும் விவரங்களுக்கு

கல்வி அதிகாரிகள் தீவிர ஆய்வு ஓராசிரியர் பள்ளிகளை மூடுவதற்கு திட்டம்


              மத்திய அரசு கடந்த 2009ம் ஆண்டு கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தை கொண்டு வந்தது. இது பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதில் ஒரு அம்சமாக தரமான கல்வி வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
 
           அதற்காக ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதற்கிடையே பள்ளிக் கல்வியின் நிலை குறித்தும் மாணவர்களின் கற்றல் நிலை குறித்தும் பல்வேறு தனியார் அமைப்புகள் சர்வே நடத்தி வருகின்றன.
Photo Gallery


குரூப்–2 தேர்வு முறையில் மாற்றம் ஆற்றலை சோதிக்க கட்டுரைகள் அடங்கிய கேள்விகள் இடம் பெறும்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்–2 தேர்வில் வினாக்கள் முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. பட்டதாரிகளின் அறிவுத்திறனையும் ஆற்றலையும் சோதிக்க கட்டுரைகள் எழுதும் வகையில் வினாக்கள் கேட்கப்பட இருக்கிறது.

குரூப்–2 தேர்வு
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து துறைகளிலும் இளநிலை உதவியாளர், உதவியாளர், மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் எழுத்து தேர்வு நடத்தி வேலைக்கு ஆட்களை தேர்வு செய்துவருகிறது.

1.6.2009 -க்கு முன்னர் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று முடிந்ததால்,அரசாணை (நிதித்துறை) 340 நாள் 26.08.2010 ஐ பயன்படுத்தி 1.86 ஆல் பெருக்கிக் ஊதியம் நிர்ணயம் செய்து தருமாறு கூடுதல் உதவி தொடக்ககல்வி அலுவலருக்கு ஓர் ஆசிரியர் விண்ணப்பம்






தொடக்கக் கல்வி - நீதிமன்ற வழக்குகள் - உதவி பெறும் / ஊராட்சி ஒன்றிய / நகராட்சி மற்றும் அரசுப் பள்ளிகள் சார்பாக தொடரப்பட்டுள்ள வழக்குகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள 26.10.2013 அன்று சென்னையில் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது