தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை...
சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக நல்ல வெயில் அடித்து வந்தது. இந்நிலையில், சென்னை உள்பட தமிழகத்தில் பல பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. காலை நேரத்தில் பெய்த மழையால் தீபாவளி பட்டாசுகள் வெடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பின்னர், காலை 10 மணியளவில் வெயில் அடிக்க தொடங்கியது. இதனால், பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.
இந்நிலையில், சென்னை எழும்பூர், திருவல்லிகேணி, சென்ட்ரல், புரசைவாக்கம், கோயம்பேடு, வடபழனி, அண்ணா நகர், அமைந்தகரை சாந்தோம், பட்டினப்பாக்கம் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரை பலத்த மழை பெய்தது. அதன் பின்னர், காலை 7 மணி வரை சாரல் மழை அடித்து கொண்டிருந்தது. இதனால், பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், இலங்கை அருகே வங்க கடலில் குறைந்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்ய கூடும் என்றனர்
.
No comments:
Post a Comment