PAGEVIEWERS

திருவண்ணாமலையில் -TATA -சங்கத்தின் - ஊதிய வழக்கு குறித்த கருத்தரங்கம் ..


இடம் ;-  டவுன் ஹால் பள்ளி -பேருந்து நிலையம் அருகில் -   திருவண்ணாமலை                                 


தலைப்பு  ;- ஊதிய வழக்கின் தீர்ப்பும் அடுத்த கட்ட நடவடிக்கைகளும் .
புகைப்படங்கள் இதோ ...
 இந்த கூட்டத்தில் தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி ,தமிழ்நாடு ஆரம்மப்பள்ளி ஆசிரியர் 
கூட்டணி ,தொடக்க பள்ளி ஆசிரியர் மன்றம் ,தமிழக ஆசிரியர் கூட்டணிஆகிய சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்கள்  -TATA - சங்கம் ஊதிய பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுத்ததால்  இடைநிலை ஆசிரியர் என்ற நிலையில் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர் .
உங்கள் மாவட்டங்களில் இது போல் கருத்தரங்கம் நடத்திட உரிய நடவடிக்கை எடுங்கள் 














TET Excemption Proceeding

  23.08.2010க்கு முன்னர் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி முடிவுற்ற பணி நாடுநர்களுக்கு, 23.08.2010க்குப் பின்னர் பணி நியமனம் வழங்கப்பட்டு இருந்தாலும் அவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை என்று
அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவர்கள் சார்பில் தகுதிகாண் பருவத்தினை முடித்து ஆணை வழங்குவதில் காலதாமதம் ஏதும் இன்றி செயல்படவும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்ப்பட்டுள்ளனர்.

TATA ( தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ) சார்பாக ஆழ்ந்த வருத்தங்களையும் ,அவரது ஆன்மா சாந்தியடையவும் மாநில அமைப்பு சார்பாக இறைவனை பிராத்திக்கிறோம்

 பணி ஓய்வு பெற்ற பின்பும் அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை கட்டி காத்த பொதுச் செயலாளர் திரு.சு.ஈஸ்வரன் இயற்கை எய்தினார்

                                                 

தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் சேர நியமன ஆணை பெற்று இதுநாள் வரை பணியில் சேராதவர்களுக்கு அறிவிக்கை அளித்து 27.10.2014க்குள் பணியில் சேர வேண்டும் என்றும் இல்லையெனில் நியமன ஆணை இரத்து செய்யப்படும் என இயக்குனர் உத்தரவு

கிருஸ்ணகிரி யில் -TATA -சங்கத்தின் - ஊதிய வழக்கு குறித்த கருத்தரங்கம் ..


நாள் ;-19-10-2014   நேரம்  ; - மாலை  04 .00மணி


இடம் ;- அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி , மெயின்ரோடு - காவேரிபட்டினம்                                    

தலைப்பு  ;- ஊதிய வழக்கின் தீர்ப்பும் அடுத்த கட்ட நடவடிக்கைகளும் .

தலைமை ; - ந .கார்த்திகேயன்  ( மாநில தலைவர்  )

சிறப்புரை ;- செ .கிப்சன்  ( பொது செயலாளர்  ) 

ஆசிரியர்கள் அனைவரும் சங்கம் பாகுபாடு இல்லாமல் கலந்து கொள்ளுங்கள்   
ஊதிய பாதிப்பின் உண்மை நிலை அறிந்திட வாருங்கள் , வாருங்கள் 

உங்கள் அனைத்து சந்தேகங்களுக்கும் ஆதாரங்களுடன் தீர்வு வழங்கப்படும் 

ஊதிய வழக்குக்காக நாம் சேகரித்த அனைத்து ஆவணங்களும் உங்கள் பார்வைக்கு தரப்படும் .

தொடர்புக்கு மற்றும் மேலும் விபரங்களுக்கு ; 9843483738/

திருவண்ணாமலையில் -TATA -சங்கத்தின் - ஊதிய வழக்கு குறித்த கருத்தரங்கம் ..

நாள் ;-19-10-2014   நேரம்  ; - காலை 10 .00மணி


இடம் ;-  டவுன் ஹால் பள்ளி -பேருந்து நிலையம் அருகில் -   திருவண்ணாமலை                                 


தலைப்பு  ;- ஊதிய வழக்கின் தீர்ப்பும் அடுத்த கட்ட நடவடிக்கைகளும் .

தலைமை ; - ந .கார்த்திகேயன்  ( மாநில தலைவர்  )

சிறப்புரை ;- செ .கிப்சன்  ( பொது செயலாளர்  ) 

ஆசிரியர்கள் அனைவரும் சங்கம் பாகுபாடு இல்லாமல் கலந்து கொள்ளுங்கள்   
ஊதிய பாதிப்பின் உண்மை நிலை அறிந்திட வாருங்கள் , வாருங்கள் 

உங்கள் அனைத்து சந்தேகங்களுக்கும் ஆதாரங்களுடன் தீர்வு வழங்கப்படும் 

ஊதிய வழக்குக்காக நாம் சேகரித்த அனைத்து ஆவணங்களும் உங்கள் பார்வைக்கு தரப்படும் .

தொடர்புக்கு மற்றும் மேலும் விபரங்களுக்கு ;- திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் திரு.R.செந்தமிழ் செல்வன்-9787180750 மாவட்ட பொருளாளர் திரு.A.சபரி ராஜ்-9597627704 மற்றும் செல்வகுமார் 9445152579.


13-10-2014 சென்னை பயணம் புகைப்படங்கள்








நமது  தீர்ப்பின் உண்மை ஆணை  33399/13



8

8 வாரம் என்பது 09-10-2014 ல் இருந்து என்பதாகும் தீர்ப்பு வழங்கப்பட்ட நாளில் இருந்து அல்ல ! அல்ல !



13-10-2014 மற்றும் 14-10-2014 ஆகிய நாள்களில் நமது சென்னை பயண தகவல்கள் ....

நமது சங்கத்தை சார்ந்த திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் திரு.R.செந்தமிழ் செல்வன் மாவட்ட பொருளாளர் திரு.A.சபரி ராஜ் ,அரியலூர் மாவட்டம் செந்துறை யை சார்ந்த திரு ,செங்குட்டுவன் மற்றும் உதய குமார் ஆகியோர் பொதுசெயலர் கிப்சன் தலைமையில் நிதித்துறை செயலர் மற்றும் நிதித்துறையில் ஊதிய பிரிவு கூடுதல் செயலாளர் திரு.மகாதேவன் ,இணை செயலாளர் திரு. ஸ்ரீதர்  அவர்கள் ஆகியோர்களையும் கல்வித்துறை செயலாளர் திருமதி .சபிதா அவர்களை சந்தித்து நமது தீர்ப்பு நகல் மற்றும் அதற்கான ஆதாரங்கள் 120 பக்கங்கள் கொண்ட ( book let manu ) புத்தக வடிவிலான மனு கொடுத்து உள்ளோம் .
கல்வித்துறை செயலாளர் திருமதி .சபிதா அவர்கள் விரைவில் உரிய முடிவு எடுப்பதாக தெரிவித்தார் ..
 நிதித்துறை இணை செயலாளர் திரு. ஸ்ரீதர்  அவர்கள் நாம் டிப்பமோ கல்வி தகுதியில் தான் பணி நியமனம் பெறுகிறோம் என்பதற்கான அரசு ஆணைகள் மற்றும்  RTI  ஆதரங்களை பார்த்தார்கள் .கடந்த 20 வருடங்களாக இடைநிலை ஆசிரியர்கள் டிப்பமோ கல்வி தகுதியில் தான் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் பெற்று வந்ததை ஆதாரத்துடன் தெரிவித்து அவர்களின் சந்தேகங்களை தெளிவு படுத்தினோம் .விரைவில் மாண்புமிகு  முதலமைச்சர் அவர்களிடம் கலத்தாய்வு செய்து முடிவு எடுப்பதாக தெரிவித்தார்கள் 

மேலும் வழக்கு குறித்த சந்திப்பு விபரங்களுக்கு

திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் திரு.R.செந்தமிழ் செல்வன்-9787180750 மாவட்ட பொருளாளர் திரு.A.சபரி ராஜ்-9597627704 ,அரியலூர் மாவட்டம் செந்துறை யை சார்ந்த திரு ,செங்குட்டுவன்-8940382627 TATA பொதுசெயலர் கிப்சன்-9443464081....

பள்ளிக்கல்வி - இரவு காவலர், துப்புரவாளர் பணி நியமனம் நிரப்பப்படாமல் உள்ள காலிப்பணியிடங்களை 15.11.2014க்குள் நிரப்பிட இயக்குனர் உத்தரவு...

தமிழ்நாடு அமைச்சுப்பணி - பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் உதவியாளர் பணியிலிருந்து இருக்கைப்பணி கண்காணிப்பாளர் பதவியுயர்வு வழங்க 15.3.2014 நாளின்படி முன்னுரிமைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அமைச்சுப்பணி - பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் உதவியாளர் பணியிலிருந்து இருக்கைப்பணி கண்காணிப்பாளர் பதவியுயர்வு வழங்க 15.3.2014 நாளின்படி முன்னுரிமைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இனி சான்றிதழ்களில் Gazetted officers ரிடம் கையொப்பம் பெற தேவை இல்லை,சான்றிதழ்களில் சுய கையொப்பமே போதுமானது-தமிழக அரசு உத்தரவு

அரசு பள்ளிகளில் கல்வித்தரம் : மத்திய குழுவினர் நேரில் ஆய்வு

மத்திய அரசு சார்பில், பல்வேறு கல்வி வளர்ச்சிப் பணிகள், தமிழக அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளி படிப்பை பாதியில் விட்ட மாணவர்களுக்கு, பயிற்சி அளித்து, பின், முறையான பள்ளிகளில் சேர்ப்பது, தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி உட்பட, பல திட்டங்கள், மத்திய அரசு நிதியில் செயல்படுத்தப்படுகின்றன. இதை, மூவர் குழு, ஆய்வு செய்து வருகிறது.

ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி – 1-7-2014ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் –ஆணைகள் – வெளியிடப்படுகின்றன.

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கின்

கருத்தரங்கம் -மாதிரி -நோட்டீஸ் -
 அன்பு நண்பர்களே இந்த நோட்டீஸ்-ல்  இடம் /நாள்  குறிப்பிட வில்லை ,அதில் நீங்கள் நிரப்பி தகவலை எங்களுக்கு தெரிவித்தல் நாங்கள் வந்து கலந்து கொள்ளுகிறோம் /பணி நாள்கள் என்றாலும் பரவாயில்லை /இடைநிலை ஆசிரியர் உரிமைக்காய் எங்கள் விடுப்பை இலக்க தயாராக உள்ளோம் /உண்மையை அனைவரும்  அறிந்திட வேண்டும் என்பதே எங்கள் எண்ணம் ...



தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான - அகவிலைப்படி

பதவி உயர்வு குறித்து -தொடக்க கல்வி இணை இயக்குனர் -பதில்


இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கின் தீர்ப்பில் 16.9.2013 என்று குறிப்பிட்டுள்ள கடிதம் இதோ உங்கள் பார்வைக்கு .இதில் உள்ளவற்றை அரசு ஆதாரத்துடன் மறுத்தால் மட்டுமே ஊதிய மாற்றம் தடைபடும் .நாம் ஊதிய குழு கூறிய காரணங்களை பல்வேறு அரசு ஆணை மற்றும் RTI கடிதங்கள் மற்றும் தேசிய கல்வி கொள்கை 1986//1992 .மற்றும் தமிழக ஆட்சி மொழி சட்டம் மற்றும் 1988 முதல் டிப்ளமா தகுதியில் பணி நியமனம் பெற்று வருவதற்கான ஆதாரங்கள் மற்றும் சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி திரு.ராமனுஜம் அவர்களின் அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் நமது தீர்ப்பு நகல் நீதிமன்றம் முலம் நிதி துறைக்கு கிடைத்ததில் இருந்து 8 வார காலத்தின் ஊதிய மாற்றம் குறித்த அரசு ஆணை வெளியிடாவிட்டால் 
நிதிதுறை செயலாளர் மற்றும் கல்வி துறை செயலாளர் ஆகியோர் மீது நமது சங்கம் சார்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும் டிசம்பர் மாதம் தாக்கல் செய்யப்படும் .வழக்கின் ஆதரங்களை அறிந்திட தங்கள் வட்டாரங்களில் ஒருங்கிணைப்பு ஏற்படுத்திடுவீர் .நாங்கள் தங்கள் அழைப்புக்கு காத்திருக்கிறோம்

தொடர்புக்கு ;S.C. கிப்சன் .TATA- ( தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் )
பொதுசெயலாளர் .9443464081