PAGEVIEWERS

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கின் தீர்ப்பில் 16.9.2013 என்று குறிப்பிட்டுள்ள கடிதம் இதோ உங்கள் பார்வைக்கு .இதில் உள்ளவற்றை அரசு ஆதாரத்துடன் மறுத்தால் மட்டுமே ஊதிய மாற்றம் தடைபடும் .நாம் ஊதிய குழு கூறிய காரணங்களை பல்வேறு அரசு ஆணை மற்றும் RTI கடிதங்கள் மற்றும் தேசிய கல்வி கொள்கை 1986//1992 .மற்றும் தமிழக ஆட்சி மொழி சட்டம் மற்றும் 1988 முதல் டிப்ளமா தகுதியில் பணி நியமனம் பெற்று வருவதற்கான ஆதாரங்கள் மற்றும் சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி திரு.ராமனுஜம் அவர்களின் அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் நமது தீர்ப்பு நகல் நீதிமன்றம் முலம் நிதி துறைக்கு கிடைத்ததில் இருந்து 8 வார காலத்தின் ஊதிய மாற்றம் குறித்த அரசு ஆணை வெளியிடாவிட்டால் 
நிதிதுறை செயலாளர் மற்றும் கல்வி துறை செயலாளர் ஆகியோர் மீது நமது சங்கம் சார்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும் டிசம்பர் மாதம் தாக்கல் செய்யப்படும் .வழக்கின் ஆதரங்களை அறிந்திட தங்கள் வட்டாரங்களில் ஒருங்கிணைப்பு ஏற்படுத்திடுவீர் .நாங்கள் தங்கள் அழைப்புக்கு காத்திருக்கிறோம்

தொடர்புக்கு ;S.C. கிப்சன் .TATA- ( தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் )
பொதுசெயலாளர் .9443464081












No comments:

Post a Comment