PAGEVIEWERS

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கின் (  WP.NO.33399/13 ) தீர்ப்பு .நாள் 12.09.2014 ன் படி தீர்ப்பு நகல் வழங்கப்பட்ட நாளில் இருந்து ( 09.10.2014  ) 8 வார காலத்திற்குள் தமிழக அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியரின் ஊதியம் 9300 + 4200 என டிப்ளமோ கல்வி தகுதி அடிப்படையில் மாற்றி அமைத்திட வேண்டும் ஆனால் அரசு தரப்பில் இருந்து டாட்டா பொது செயலாளர் கிப்சன் அவர்களின் முகவரிக்கு ஆணை வரப் படாததாலும் 01.12.2014 சென்னை சென்று மாநில அமைப்பு சார்பாக நடைபெற்ற சந்திப்பின் அடிப்படையில் அரசு காலதாமதத்தை தடுக்கும் வகையில் முக்கியமானவர்களின் ஆலோசனை படியும் நமது மூத்த வழக்கறிஞர் அவர்களின் ஆலோசனை படியும் நேற்று  ( 04.12.14 ) இரவு 8.00 மணிக்கு  டாட்டா பொது செயலாளர் கிப்சன் ,மற்றும் மாநில செய்தி தொடர்பாளர் கார்கில் ராஜந்திரன் அவர்களும் வழக்கறிஞர் அலுவலகம் சென்று '' நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திட ஏதுவாக நமது மூத்த வழக்கறிஞர் அவர்களின்மூலம்
 திரு.சண்முகம் இ .ஆ.ப./,திரு.கிருஷ்ணன்  இ .ஆ.ப.,/,திருமதி .சபிதா இ .ஆ.ப.ஆகியோருக்கு நோட்டிஸ் இன்று  ( 05.12.14 ) அனுப்பப்பட்டு உள்ளது .இந்த  நோட்டிஸ்க்கான கால கெடு 2 வாரம் ஆகும் .அதற்குள் நமக்கு ஊதிய மாற்றம்  தமிழக அரசால் அறிவிக்கப்பட வில்லை என்றால் தான் வரும் ஜனவரிமாதம்  2015 ல்  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திடமுடியும் . மேற்படி சங்க பணியை முடித்து வீட்டிற்கு மறுநாள் அதிகாலை 4.45 மணிக்கு அதிக குளிரில் 15 கி.மீ தூரம் இரு சக்கர வாகனத்தில் வந்து சேர்ந்தேன் 

  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திட அவசர நிதி தேவை ரூ 60,000/-

ஏற்கனவே உள்ள பற்று      --------------ரூ  1,35,000
தற்போதைய தேவை                                 ரூ.30,000
மொத்த தேவை                                            ரூ .1,65,000

ஏற்கனவே வழக்கறிஞருக்கு வழங்க வேண்டிய பாக்கி ரூ.  30,000
அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திட                                      ரூ.30,000
அவசர நிதி தேவை                                                                           ரூ 60,000/-

12.09.2014 தீர்ப்புக்கு பின் வழக்கு நிதி வழங்கியவர்கள் 
------------------------------------------------------------------------------------------
1.அவினாசி ஒன்றியம் பணி ஒய்வு பெற்ற மூத்த ஆசிரியர் நடராஜன் அவரது மகள் கவிதா உடல்கல்வி ஆசிரியராக பணி செய்வதை முன்னிட்டு வழங்கியது                                                                                                                           ரூ. 5000
2. திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த tet ஆசிரியர்கள்                                               ரூ.5000
3.திருக் கோவிலூர் டாட்டா கிளை சார்பாக                                                           ரூ.5000
4.ஊத்தங்கரை சாமுவேல் ஆசிரியர் மூலமக                                                       ரூ.5000
5..ஊத்தங்கரைவெங்கடேசன் -அனுமன் தீர்த்தம்                                                 ரூ.2000
6.நீலகிரி -குன்னூர் சிலம்பரசன் ஆசிரியர்                                                              ரூ.2000
7.தளி ஒன்றியம் தினகரன் ஆசிரியர்                                                                          ரூ.1000
8.G.K. செல்வராஜ்  பென்னாகரம்  ஆசிரியர்                                                             ரூ.1000
9.ஆசிரியர் குரல் அருணாசலம்   த .ஆசிரியர்                                                      ரூ. 1000
10.பெயர் தெரியாதவர் மூலம்                                                                                     ரூ.1000
11. வேலூர் மாவட்டம் சம்பத் ஆசிரியர்                                                                  ரூ.500
                                                                                                                                  ----------------------

மொத்தவரவு                                                                                                         ரூ.          28,500   


அவசர நிதி தேவையை சந்தியுங்கள்    



C.KIPSON

SBI-AMBAI-NELLAI DIST, (

Tirunelveli

Branch :
Ambasamundram

IFSC Code :
SBIN0000804 (5th character is zero)

MICR Code :

Branch Code :
000804.

A/NO ; 30486085987

235.NORTH STREET

PARAPPADI 627110

NELLAI - DIST

E-mail ; kipson76@yahoo.in

அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் விடுமுறை நாட்களில் நடைபெறும் குறுவளமைய பயிற்சியில் கலந்துகொள்ளும் நாட்களுக்கு ஈடுசெய்யும் விடுப்புகளாக அனுமதித்து அரசு ஆணை வெளியீடு

தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி - 01.01.2015ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த முதுகலை பாட ஆசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குனர் (மேல்நிலைக் கல்வி) / அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயார் சார்பான விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

GPF/TPF ACCOUNT STATEMENT FOR THE YEAR 2013-2014...

இயக்குனர்கள் மாற்றம்... பள்ளிக்கல்வித் துறை இயக்குனராக இருந்த திரு.வி.சி.இராமேஸ்வர முருகன் அவர்கள் SCERT இயக்குனராக மாற்றம், திரு.த.கண்ணப்பன் அவர்கள் பள்ளிக்கல்வித் துறை இயக்குனராக நியமனம்.


ஆசிரியர்களின் பி.காம்.,எம்.காம்., மற்றும் பி.எட்., பட்டம் பெற்றமைக்கு ஊக்க ஊதியம் அனுமதித்து ஆணை வெளியீடு...


அகஇ - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு குறுவளமைய அளவில் ஒரு நாள் பயிற்சி "எளிய உடற்பயிற்சி / உள்ளரங்கு மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள்" என்ற தலைப்பில் 13.12.2014 நடைபெறவுள்ளது.

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலராக கே.ஞானதேசிகன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பில், பொதுத்துறை சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
அதிமுக ஆட்சியமைத்து மூன்றரை ஆண்டு காலத்தில் பொறுப்பேற்கும் 5வது தலைமை செயலாளர் ஞானதேசிகன் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தோஷ செய்தி மிக விரைவில் - 01.12.2014 அன்று சென்னை சந்திப்பு விபரம்

நமது சங்கத்தின் சார்பாக 1.12.14 திங்கள் அன்று பொது செயலாளர் கிப்சன் அவர்கள் தலைமையில் தருமபுரி மாவட்ட தலைவர் மூர்த்தி / கிருஷ்ணகிரி மாவட்டம் வெங்கடேஷ் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் செந்தமிழ் செல்வன் , மாநில துணை தலைவர் சபரிராஜ் ,மண்டல தலைவர்செங்கம் நந்தகுமார் , ,மண்டல  செயலாளர் சம்பத் மாநில செயலாளர் அரியலூர் செங்குட்டுவன் ,செந்துறை உதயகுமார் ஆகியோர் கலை 10.00 மணி அளவில் நிதித்துறை செயலாளர் அவர்களை சந்திக்க சென்றோம் .நிதித்துறை செயலாளர்அவர்கள் இன்றுதான் 45 நாள் பயிற்சிக்கு சென்றவர் மீண்டும்  பணி ஏற்று உள்ளார்கள் /தங்களது வழக்கு குறித்து ஊதிய பிரிவு துணை செயலாளர் அவர்களிடம்தான் கோப்புகள் உள்ளது .அவரை சந்தித்து விபரம் அறிந்து கொள்ளுங்கள் என தனது நேர்முக உதவியாளர் மூலம் தெரிவித்தார் .

                                   நாங்கள்  ஊதிய பிரிவு துணை செயலாளர் அவர்களை  சந்தித்தோம் . அவர்கள் உங்கள் கோப்புகள் ஆயத்த நிலையில் உள்ளது .நிதித்துறை செயலாளர் 45 நாள் பயிற்சிக்கு சென்றவர்  இன்றுதான் பணி ஏற்று உள்ளார்கள் .அவர்களும் மாண்பு மிகு முதலமைச்சர் அவர்களும் கோப்புகளை பார்த்து ஒப்புதல் வழங்கிய பின் ஆணை பிறப்பிக்கப்பட்டு அதன் நகல் தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்கள் .நல்ல செய்தி வரும்  என்றார்கள். மேலும் பல்வேறு ஆதரங்களை நீங்கள் RTI மூலம் பெற்று இணைத்து உள்ளீர்கள் என பாராட்டு தெரிவித்தார்கள்,

                               கல்வித்துறை செயலாளர் அவர்கள் தங்கள் ஊதிய வழக்கு சார்பாக துணை செயலாளர்திரு ,வேதரத்தினம் அவர்களிடம் பேசுங்கள் என்றார்கள் அவர்கள் சார்பு  செயலாளர் திரு ,சேகர் அவர்களை அழைத்து எங்களிடம் பேச செய்தார்கள் ,நமது  ஊதிய வழக்குமீது அரசின் நடவடிக்கை குறித்து கேட்டோம் .உங்களது மனு ஆய்வு செய்யப்பட்டு கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பாகவே நிதித்துறைக்கு அனுப்பப் பட்டு விட்டது என்று தெரிவித்தார்கள் .
                மீண்டும் மாலை இயக்குனர் அலுவலகம் சென்றோம் .அங்கு நமது சங்கத்தின் கோரிக்கை மனுக்களை கொடுத்து விட்டு இரவு 7.30 மணிக்கு தான் இயக்குனர் அலுவகத்தில் இருந்து ரூம்புக்கு திரும்பி வீட்டிற்கு வந்து சேர்ந்தோம் .
             நிதித்துறை செயலாளர் அவர்கள் சட்ட சபை கூட்ட தொடர் முடியும் டிசம்பர் 8 வரை நமது கோப்புகளை  பார்க்க வாய்ப்பு இல்லை என்றார்கள் .
மேலும் பல்வேறு ரகசியங்களை வெளியிட முடியாத நிலையில் வெளியிட வில்லை .நமக்கு விரைவில் நல்லது நடக்க நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திட ஊள்ளோம் .உங்கள் ஆதரவை TATA சங்கத்திற்கு தொடர்ந்து தாருங்கள் .நமது சங்கத்தின் கிளைகளை துவங்கி .உங்கள் ஆதரவை TATA சங்கத்திற்கு தொடர்ந்து தாருங்கள்.




CPS ஒப்புகை சீட்டு வழங்க & சரிபார்க்க இன்னும் 10 நாட்கள் மட்டுமே CPS ஒப்புகை சீட்டு வழங்க & சரிபார்க்க இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளன.தங்கள் ஒன்றியத்தில் வழங்கப்பட்டுள்ளதா ?? தொடக்க கல்வி துறையில் இதுவரை வழங்கப்படாமல் இருந்த தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தில்( CPS ) 01.04.2003 பின் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கும் (தொடக்க கல்வி துறையில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஒப்புகைசீட்டு (A/C SLIP) வழங்கப்படாமல் இருந்தது.  தொடக்க கல்வி இயக்குனர்  அவர்கள் ஒப்புகை சீட்டு வழங்க 11.09.2014 உத்தரவிட்டார் .இதன் மூலம் அனைத்து கருவுலம் வழியாக உதவி தொடக்க கல்வி அலுலகங்களுக்கு ஒப்புகைசீட்டு குறுந்தகடு (CD) மூலம் அனுப்பப்பட்டது ,இது கிடைக்கப்பெற்று 3 மாதங்களுக்குள் விடுபட்ட பதிவுகள் ஏதேனும் இருப்பின் அல்லது சில நபர்கள் மொத்தமாக பதிவுகள் இல்லை என்றாலும் உடனே கருவூலம் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும்.அக்காலக்கெடு வரும் டிசம்பர் -10 ம் தேதி முடிவடைகிறது அதன் பின் இப்போது உள்ள பதிவுகள் சரியாக உள்ளது என்று அரசால் ஏற்றுக்கொள்ள படும் .தற்போது பெரும்பாலான ஒன்றியங்களில் ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டுள்ளது,,இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளது.