PAGEVIEWERS

சந்தோஷ செய்தி மிக விரைவில் - 01.12.2014 அன்று சென்னை சந்திப்பு விபரம்

நமது சங்கத்தின் சார்பாக 1.12.14 திங்கள் அன்று பொது செயலாளர் கிப்சன் அவர்கள் தலைமையில் தருமபுரி மாவட்ட தலைவர் மூர்த்தி / கிருஷ்ணகிரி மாவட்டம் வெங்கடேஷ் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் செந்தமிழ் செல்வன் , மாநில துணை தலைவர் சபரிராஜ் ,மண்டல தலைவர்செங்கம் நந்தகுமார் , ,மண்டல  செயலாளர் சம்பத் மாநில செயலாளர் அரியலூர் செங்குட்டுவன் ,செந்துறை உதயகுமார் ஆகியோர் கலை 10.00 மணி அளவில் நிதித்துறை செயலாளர் அவர்களை சந்திக்க சென்றோம் .நிதித்துறை செயலாளர்அவர்கள் இன்றுதான் 45 நாள் பயிற்சிக்கு சென்றவர் மீண்டும்  பணி ஏற்று உள்ளார்கள் /தங்களது வழக்கு குறித்து ஊதிய பிரிவு துணை செயலாளர் அவர்களிடம்தான் கோப்புகள் உள்ளது .அவரை சந்தித்து விபரம் அறிந்து கொள்ளுங்கள் என தனது நேர்முக உதவியாளர் மூலம் தெரிவித்தார் .

                                   நாங்கள்  ஊதிய பிரிவு துணை செயலாளர் அவர்களை  சந்தித்தோம் . அவர்கள் உங்கள் கோப்புகள் ஆயத்த நிலையில் உள்ளது .நிதித்துறை செயலாளர் 45 நாள் பயிற்சிக்கு சென்றவர்  இன்றுதான் பணி ஏற்று உள்ளார்கள் .அவர்களும் மாண்பு மிகு முதலமைச்சர் அவர்களும் கோப்புகளை பார்த்து ஒப்புதல் வழங்கிய பின் ஆணை பிறப்பிக்கப்பட்டு அதன் நகல் தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்கள் .நல்ல செய்தி வரும்  என்றார்கள். மேலும் பல்வேறு ஆதரங்களை நீங்கள் RTI மூலம் பெற்று இணைத்து உள்ளீர்கள் என பாராட்டு தெரிவித்தார்கள்,

                               கல்வித்துறை செயலாளர் அவர்கள் தங்கள் ஊதிய வழக்கு சார்பாக துணை செயலாளர்திரு ,வேதரத்தினம் அவர்களிடம் பேசுங்கள் என்றார்கள் அவர்கள் சார்பு  செயலாளர் திரு ,சேகர் அவர்களை அழைத்து எங்களிடம் பேச செய்தார்கள் ,நமது  ஊதிய வழக்குமீது அரசின் நடவடிக்கை குறித்து கேட்டோம் .உங்களது மனு ஆய்வு செய்யப்பட்டு கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பாகவே நிதித்துறைக்கு அனுப்பப் பட்டு விட்டது என்று தெரிவித்தார்கள் .
                மீண்டும் மாலை இயக்குனர் அலுவலகம் சென்றோம் .அங்கு நமது சங்கத்தின் கோரிக்கை மனுக்களை கொடுத்து விட்டு இரவு 7.30 மணிக்கு தான் இயக்குனர் அலுவகத்தில் இருந்து ரூம்புக்கு திரும்பி வீட்டிற்கு வந்து சேர்ந்தோம் .
             நிதித்துறை செயலாளர் அவர்கள் சட்ட சபை கூட்ட தொடர் முடியும் டிசம்பர் 8 வரை நமது கோப்புகளை  பார்க்க வாய்ப்பு இல்லை என்றார்கள் .
மேலும் பல்வேறு ரகசியங்களை வெளியிட முடியாத நிலையில் வெளியிட வில்லை .நமக்கு விரைவில் நல்லது நடக்க நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திட ஊள்ளோம் .உங்கள் ஆதரவை TATA சங்கத்திற்கு தொடர்ந்து தாருங்கள் .நமது சங்கத்தின் கிளைகளை துவங்கி .உங்கள் ஆதரவை TATA சங்கத்திற்கு தொடர்ந்து தாருங்கள்.


No comments:

Post a Comment