PAGEVIEWERS

நீலகிரி மாவட்ட கிளை மற்றும் கூடலூர் வட்டார கிளை ஆகியவற்றை அன்புடன் வரவேற்று மாவட்ட தலைவர் பிரசாந்த் . மாவட்ட செயலாளர்  அருண்குமார் .மாத.பொது.மணிகண்டன் .வட்டார தலைவர் ரவிக்குமார் .வ செ.சிலம்பரசன் வ.பொ. முருகன். புதிய பொறுப்பாளர்களை நியமித்து அனைவருக்கும் மனம் மகிழ வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன் இவன் .டாட்டா மாநில அமைப்பு- கிப்சன் .
விரும்பலாம். சரி, அதற்குரிய வழிமுறைகள் என்ன?

பெயர் மாற்றம் செய்வதற்கான தகுதிகள்:

தமிழ்நாட்டில் வசிக்கும் எவரும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர் 60 வயதுக்கு மேல் உள்ளவரானால் பதிவுபெற்ற மருத்துவரிடமிருந்து Life Certificate அசலாகப் பெற்று இணைக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்:
பிறப்பு / கல்விச் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும். பிறப்பு / கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் வயதை நிரூபிக்க அரசு மருத்துவரிடம் உரிய சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
சமீபத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் புகைப்படத்தை, அதற்கென அளிக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டி, தமிழக / மத்திய அரசின் மற்றும் பிரிவு அலுவலர்கள் / சான்று உறுதி அலுவலரிடமிருந்து சான்றொப்பம் பெறப்பட வேண்டும்.
மாநில முன்னாள் பொருளாளர் திரு .முனியசாமி அவர்களுக்கு  சேலம் மாவட்டம் இயக்க பணிகள் மற்றும் ஆசிரியர் நலன் சார்ந்த பணியை செய்ய முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது .இவன் டாட்டா கிப்சன்
சேலம் மாவட்டம் ஏற்காடு ஒன்றியம் கீரகூடு ஊ.ஓ
து.பள்ளி இடைநிலை ஆசிரியரும் டாட்டா சங்கத்தின் ஏற்காடு ஒன்றிய செயலாளர் .திரு .ரமேஷ் பாபு அவர்கள் இன்று ( 21-06-2015 ) இயற்கை ஏய்தினார் .அவரது நல்லடக்கம் நாளை அவரது சொந்த ஊரான திருகோவிலுரில் நடைபெற உள்ளது

அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை. டாட்டா மாநில அமைப்பு சார் பாக வேண்டுகிறேன் . கிப்சன் .

தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்புதல் சார்பாக தேர்ந்தோர் பட்டியல் தயாரிக்க 31.05.2009 வரை அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் விவரங்கள் கோரி இயக்குனர் உத்தரவு

2015-2016 ஆண்டுக்கான பள்ளி வேலை நாள் மற்றும் வரையறை விடுமுறை



மெட்ரிக்., பள்ளிகளுக்கு புதிய சட்டம் கொண்டு வருவோம் : நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு விளக்கம்

அனைத்து தனியார் பள்ளிகளுக்கும், ஒருங்கிணைந்த சட்டத்தை வகுக்க, உயர் மட்டக் குழுவை அமைப்பதற்கு, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ம.க., பிரமுகருமான, ஆர்.வேலு, தாக்கல் செய்த மனு:மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கான விதிமுறைகள், செல்லாது என, அறிவிக்க வேண்டும்.
சென்னை மற்றும் மதுரைபல்கலைகழகங்களால், 1976 ஜூன், 1ம் தேதி அன்று அங்கீகரிக்கப்பட்ட மெட்ரிக்குலேஷன் பள்ளிகளை தவிர, மற்ற மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.இம்மனு, 2011ல், தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு, கல்வி துறை சார்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 
தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று, விசாரணைக்கு
வந்தது.

பள்ளிக்கல்வி - சிறுபான்மை மொழி மற்றும் ஆங்கில பாட பட்டதாரி ஆசிரியர்களாக நியமன ஆணை பெற்றவர்களை முறையான நியமனமாக முறைபடுத்தி ஆணை வெளியீடு

தொடக்க கல்வி - RTE - சட்டப்படி பள்ளி பணி நாள்கள் 200 ஆக குறைத்திட மனு





டாட்டா பொது செயலாளர் மற்றும் மாநில தலைவர் பயண திட்டம்...
13-6-2015 ---மாநில செயற்குழு --சென்னை.
14-6-2015 -- ஊதிய வழக்கு சார்பாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அவர்களுடன் பொள்ளாச்சி யில் சந்திப்பு
15-6-2015 -- நீலகிரி மாவட்ட கிளை மற்றும் கூடலூர் வட்டார கிளை துவக்க விழா

தொடக்க கல்வி-உதவி பெரும் பள்ளிகள் துணை குறியீட்டினை பயன்படுத்தி வலைத்தளம் மூலம் சம்பளப் பட்டியல் தயார் செய்தல்-சார்ந்து தொடக்க கல்வி இயக்குனரின் செயல் முறைகள்!

பணிப்பதிவேட்டினை பராமரித்தல் மற்றும் பதிவுகள் மேற்கொள்ளுதல் சார்பான அரசுக்கடிதம் நாள் : 21. 05. 2015



SSA - 20/06/2015 மற்றும் 27/06/2015 ஆகிய நாட்களில் ஜூன் மாத CRC குறுவள மைய பயிற்சி - பயிற்சி ஏடு (MODULE)

அகஇ - பகுதி நேர ஆசிரியர்களின் பணி சார்ந்த கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்த மாநில திட்ட இயக்குநரின் அறிவுரைகள்

மாநில செயற்குழு கூட்டம் வருகிற 13-06-2015 சனிக்கிழமை பிற்பகல் 1;30 மணி முதல் 5;30 மணி வரை நடைபெற உள்ளது . மேற்படி கூட்டம் சென்னை எழும்பூர்



பெறுநர்
திரு மிகு .டாட்டா மாநில மற்றும் மாவட்ட ,வட்டார பொறுப்பாளர் அவர்கள் .

அன்புடையீர்
வணக்கம் .நமது சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் வருகிற 13-06-2015 சனிக்கிழமை பிற்பகல் 1;30 மணி முதல் 5;30 மணி வரை நடைபெற உள்ளது .
மேற்படி கூட்டம் சென்னை எழும்பூர்
இக்சா மையத்தில் வைத்து நடைபெற உள்ளது .

இந்த கூட்டம் "ஊதிய பிரச்சினையில் தமிழக அரசு உச்ச நீதிமன்றம் மூலம் பெற்றுள்ள தடை "
மற்றும். அதை நீக்கம் செய்திட எடுக்கப்பட. வேண்டிய நடவடிக்கை. பற்றி விரிவான விவாதம் நடத்திட அனைவரும். தவறாமல் கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறேன் .

மிக்க நன்றி
இப்படிக்கு
டாட்டா .மாநில தலைவர் .கார்த்திகேயன் .
டாடா .பொது செயலாளர் .கிப்சன்
டாட்டா .மாநில பொருளாளர் .தாமரை. வேல்

இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சணை யில் உச்ச நீதிமன்றத்தில் அரசு பெற்று இருக்கும் தடை நீக்க படாமல் ஊதிய மாற்றம் ஏற்படுமா ?



இது குறித்து நமது மூத்த வழக்கறிஞர் திரு .அஜ்மல் கான் அவர்களை சந்தித்து தமிழக அரசு நமக்கு அனுப்பி உள்ள கடிதம் குறித்தும் அதில் அரசு தடை பெற்று உள்ளதாக கூரியுல்ல தகவல் பற்றியும் விவாதித்தோம்.

தற்போது அரசு தடை பெற்று இருப்பதால் நாம் உச்ச நீதிமன்றம் சென்று தடை நீக்க பட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வழக்கு எண் ;504/2012 .வழக்கு நடத்தியவர்களால் தான் திரு.கிருஷ்ணன் .இ .ஆ.ப. அவர்கள் தலைமையில் நீதிமன்ற உத்தரவு படிதான் ஊதிய குறை தீர்க்கும்  பிரிவு  அமைக்கப்பட்டது.(ஆதாரம் அ .ஆ.எண் ;123/நிதி /2012 .நாள் .10.04.2012.) 

 இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சணை யில் ஊதிய குறை தீர் பிரிவு தலைவர் .திரு.கிருஷ்ணன் .இ .ஆ.ப. அவர்கள் அறிக்கையில்தான் நம்மை மிகவும் இழிவு செய்து உள்ளார்கள் .அ .ஆ.எண் ;123/நிதி /2012 .நாள் .10.04.2012. இது  ரிட் அப்பில் எண் ;504,505,514,515 ,516 ./2012 வழக்குகளின் இடைகால ஆணை படி தான் அமைக்கப்பட்டது ஆகும் .இந்த உண்மை எத்தனை பேருக்கு தெரியும் என தெரியவில்லை . மேற்படி வழக்கிலும் நமது மூத்த வழக்கறிஞர் திரு .அஜ்மல் கான் அவர்கள் வாதாடி உள்ளார்கள் .மேற்படி வழக்கை 20 துறையை  சார்ந்த 72 பணி இடங்களில் பணி செய்யும் 252 வழக்குகள் கூட்டாக நடத்தப்பட்டு அதன் தீர்ப்பு 27.02.2014 அன்று 2 நீதிபதிகளால் வழங்கப்பட்டு உள்ளது .
மேற்படி தீர்ப்பில் திரு.ராஜீவ் ரஞ்சன் .இ .ஆ.ப. அவர்களின்  ஒரு நபர் குழு அறிக்கையும் திரு.கிருஷ்ணன் .இ .ஆ.ப. அவர்கள் தலைமையிலான  ஊதிய குறை தீர்க்கும்  பிரிவு  அறிக்கையும் சென்னை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்ய பட்டு உள்ளது. எனவே நாமும் மேற்படி அறிக்கையை ரத்து செய்து ஊதியம் 9300+4200 வேண்டும் என்றுதான் போராடுகிறோம்.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் செல்லாமல் ஊதியம் மாற்றம் பெற முடியாது.பள்ளிகள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடு பட்டாலும் ஊதிய மாற்றம் என்ற கோரிக்கையை மட்டும் வெல்ல முடியாது என்ற உண்மைய உணர்ந்து கொள்ளுங்கள் .உச்ச நீதிமன்றம் சென்றால் கண்டிப்பாக ஊதியம் 9300+4200 என்று 01.01.2006 முதல் மாற்றம் கிடைக்கும்.அது மட்டும் அல்லாது 2800 தர ஊதியத்தில் உள்ள அனைவருக்கும் கண்டிப்பாக ஊதிய உயர்வு 8000 முதல் 12,000 வரை கண்டிப்பாக கிடைக்கும்.

மனம் தளர வேண்டாம் இது நமது ஊதிய மாற்றத்திற்கான கடைசி போராட்டம்.இதில் வெல்வது நமது ஆசிரியர் சமுகம்மே .தமிழக அரசு அல்ல .
 இவன் 
டாட்டா கிப்சன் .பொது செயலாளர் ,தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்.

குமரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இடமாற்றத்துக்கு தடை ....

குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணனை சென்னை பெற்றோர் ஆசிரியர் கழக செயலராக இடமாற்றம் செய்ததற்கு மதுரை ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. குமரி மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் உட்பட 13 முதன்மை கல்வி அலுவலர்களை இடமாற்றம் செய்து பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தார். ராதாகிருஷ்ணன் சென்னையில் பெற்றோர் ஆசிரியர் கழக செயலராக மாற்றப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார், குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக மாற்றப்பட்டார். நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் புதிய முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது புதிய அதிகாரி, விடைபெற்று செல்லும் அதிகாரிக்கு ஆசிரியர் அமைப்பினர் சால்வை அணிவித்துக்கொண்டிருந்தனர். சிறிதுநேரத்தில் குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை இடமாற்றம் செய்த உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த விவகாரம் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக ஜெயக்குமார் நியமிக்கப்பட்டது செல்லுமா, அல்லது ராதாகிருஷ்ணனே முதன்மை கல்வி அலுவலராக தொடர்வாரா என்ற கேள்வி கல்வித்துறை வட்டாரத்தில் எழுந்துள்ளது

பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்.


1.ஆசிரியர் வருகைப் பதிவேடு
2.மாணவர் வருகைப் பதிவேடு
3.மாணவர் சேர்க்கை நீக்கல் பதிவேடு
4.சேர்க்கை விண்ணப்பங்கள் தொகுப்பு
5.பதிவுத்தாட்கள் உண்மை நகல்
6.அளவைப் பதிவேட
7.நிறுவனப்பதிவேடு
8.பள்ளி தளவாடச் சாமான்கள் பதிவேடு
9.தணிக்கைப் பதிவேடு
10.பார்வையாளர் பதிவேடு
11.பள்ளி விவரப் பதிவேடு (school profile
12.ஊதியப்பட்டியல் பதிவேடு
13.ஊதிய செல்லுப் பட்டியல் பதிவேடு
14.மதிப்பெண் பதிவேட
15.தேக்கப் பட்டியல்
16.வருகைப்பட்டியல்
17.மாதாந்தர அறிக்கை தொகுப்பு பதிவேடு
18.வரத்தவறியவர் பதிவேட
19.சிறுபான்மை மொழி பேசுவோர் பதிவேடு
20.மாணவர் தினசரி வருகைச் சுருக்கம்
21.மக்கள் தொகை கணக்குப் பதிவேடு
22.சுற்றறிக்கைப் பதிவேடு
23.பொறுப்பு ஏற்புப் பதிவேடு
24.தலைமையாசிரியர் கூட்ட விவரப் பதிவேடு
25.தற்செயல் விடுப்பு
26.மருத்துவ விடுப்பு மற்றும் ஈட்டிய விடுப்பு பதிவேடு
27.தலைமையாசிரியர் கண்காணிப்பு பதிவேடு
28.ஆதிதிராவிட மாணவியர் ஊக்கத்தொகை வழங்கும் பதிவேடு
29.வாசிப்புத்திறன் பதிவேடு
30.அஞ்சல் பதிவேடு
31.தொலைக்காட்சி,வானொலி வகுப்புப் பதிவேடு
32.அறிவியல் உபகரணங்கள் இருப்புப் பதிவேடு
33.கணினி ,மடிக்கணினி இருப்புப் பதிவேடு
34.Inspire விருது பதிவேடு
35.கிராமக்கல்வி க்குழு பதிவேடு
36.பெற்றார் ஆசிரியர் கழக்க் கூட்டப்பதிவேடு
37.அன்னையர் குழு பதிவேடு
38.பள்ளி மேலாண்மைக் குழு பதிவேடு
39.மன்றப் பதிவேடுகள்
a.தமிழ் இலக்கிய மன்றப் பதிவேடு
b.கணித மன்றம்
c.அறிவியல் மன்றம்
d.செஞ்சிலுவைச் சங்கம்
e.சுற்றுச்சூழல் மன்றம்
40.கால அட்டவணை
41.வகுப்பு வாரியான பாடவேளை பணிமுடிப்பு பதிவேடு (work done)
42.சாதிச்சான்றிதழ் வழங்கிய பதிவேடு
43.பாடத்திட்டம் ,கால அட்டவணையுடன்
44.பிறப்புச் சான்றிதழ் பதிவேடு
45.பள்ளி சுகாதாரக் குழு பதிவேடு (school health club )
46.S.S.A பொருட்கள் இருப்புப் பதிவேடு
47.S.S.A வரவு செலவுப் பதிவேடு
48.வங்கி கணக்குப் புத்தகம்
49.பள்ளி மான்யம் மற்றும் பராமரிப்பு மான்யம்
வரவு செலவு இரசீது பதிவேடு
50.E.E.R பதிவேடு
51.S.S.A பார்வையாளர் பதிவேடு
52.நலத்திட்டப் பதிவேடுகள்
1.விலையில்லா பாடநூல்கள் வழங்கிய பதிவேடு
2.விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்கிய பதிவேடு
3.விலையில்லா புத்தகப்பை வழங்கிய பதிவேடு
4.விலையில்லா சீருடை வழங்கிய பதிவேடு
5.மதிய உணவுத் திட்டம் பயனடைவோர் பதிவேடு
6.விலையில்லா காலனி வழங்கிய பதிவேடு
7.விலையில்லா பயணச்சீட்டு பயனடைவோர்
பதிவேடு
8.விலையில்லா வண்ணப் பென்சில்கள்
வழங்கிய பதிவேடு
9.விலையில்லா கணித உபகரணப் பெட்டி வழங்கிய பதிவேடு
10.விலையில்லா புவியியல் வரைபட நூல்
வழங்கிய பதிவேடு
11.வருவாய் ஈட்டும் தாய் தந்தையரை இழந்த
குழந்தைக்கு கல்விஉதவித்தொகை பதிவேடு