PAGEVIEWERS

தேவையை விட அதிகம் உள்ள பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியருக்கு பணியிட மாறுதல் மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு


     தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையில், பள்ளிகளின் தேவையை விட கூடுதலாக பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை, தேவை உள்ள பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்யும் கலந்தாய்வு, 13ம் தேதி முதல் நடக்கிறது.

        இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, 30 மாணவருக்கு, ஒரு ஆசிரியர் என்ற வீதத்திலும்; 6, 7, 8 ஆகிய வகுப்புகளில், 35 மாணவருக்கு, ஒரு ஆசிரியர் என்ற வீதத்திலும் இருக்க வேண்டும். ஆகையால், கூடுதலாக உள்ள பட்டதாரி ஆசிரியர் மற்றும் பற்றாக்குறை உள்ள பள்ளிகள் குறித்து, விவரம் சேகரிக்கப் பட்டது. 
        அதன் அடிப்படையில், தேவையுள்ள பள்ளிகளுக்கு ஆசிரியர்களை மாற்றுவதற்காக, கலந்தாய்வு நடத்தப்படுகிறது. பள்ளிக்கல்வி இயக்கத்தின்கீழ் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியருக்கு, 13ம் தேதி துவங்கி, 30ம் தேதி வரையும்; தொடக்கக் கல்வித் துறையின்கீழ் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியருக்கு, 21ம் தேதி துவங்கி, 31ம் தேதி வரையும், பணி நிரவல் (கூடுதல் ஆசிரியர் பணியிட மாற்றம்) மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடக்கிறது.
 

அனைத்து தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளின் காலிப் பணியிடம்/ கூடதல் தேவையுள்ள பணியிடம் / உபரி பணியிடம் ஆகியவற்றை 01.07.2012 நிலவரப்படி தொடக்கக்கல்வி அலுவலர் கோரியுள்ளார் மேலும் உபரி பணியிடம் உள்ள பள்ளியின் இளையவரையே (Junior Most) குறிப்பிட ஆணை

 

Elementary Dept General Transfer/ Deployment Counselling Schedule

No comments:

Post a Comment