2014 ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்வு 10% முதல் 11% வரை உயரக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது
நவம்பர் 2013 மாதத்திற்கான விலைவாசி உயர்வு குறியீட்டு எண் நேற்று (31.12.2013) வெளியிடப்பட்டது. இதன்படி அகவிலைப்படி உயர்வு 99.12 சதவீதமாக உள்ளது. அதேபோல் வருகிற டிசம்பர் மாதத்திற்கான விலைவாசி குறியீட்டு எண் 100 சதவீதத்திற்கு மேல் உயரக்கூடும்.
எனவே 2014 ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்வு 100% முதல் 101% வரை உயரக்கூடும். டிசம்பர் 2013 மாத விலைவாசி உயர்வு குறியீட்டு எண் 31.01.2014 அன்று வெளியிடப்படும். அதன் பிறகே அகவிலைப்படி எத்தனை சதவீதம் உயரும் என்பது உறுதியாக தெரிய வரும். எப்படிப்பார்த்தாலும் 01.01.2014 முதல் அகவிலைப்படி 100%க்கு குறையாது என உறுதியாக நம்பலாம்.