PAGEVIEWERS

டாப் லஞ்ச அதிகாரிகள் பட்டியல் வெளியிட்ட 

தமிழ் மீட்சி இயக்கம்
‘டாப் 16′ லஞ்ச அதிகாரிகளின் பட்டியல்!
நேற்று காலை, ஈரோட்டில் தமிழ் மீட்சி இயக்கத்தின் கலந்துரையாடல் கருத்தரங்க கூட்டம், மாநில செயலரும் சமூக ஆர்வலருமான நந்தகோபால் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், தமிழகத்தின், ‘டாப் 16′ ஊழல் அரசுத்துறை அதிகாரிகள் பட்டியலை வெளியிட்டனர்.

மாநில தகவல் ஆணையர்கள் சீனிவாசன், தமிழ்செல்வன், சென்னை பால் கூட்டுறவுத்துறை தணிக்கை இணைப்பதிவாளர் ஜவகர் பிரசாத்ராஜ், சென்னை மகளிர் மேம்பாட்டு திட்ட இணை இயக்குனர் ராதா, பெரம்பலுார் டாஸ்மாக் உதவி மேலாளர் கல்யாணி, கரூர், ஊரக வளர்ச்சித்துறை ஒன்றிய பொறியாளர் குமரேசன், தமிழக முதல்வர் தொகுதியை உள்ளடக்கிய திருச்சி மாவட்ட கலெக்டர் ஜெய ஸ்ரீ முரளிதரன், முதல்வர் தொகுதியான ஸ்ரீரங்கம் முன்னாள் தாசில்தார் பவானி, உட்பட ஊழல் மற்றும் பணி நேர்மையற்ற அதிகாரிகள் 16 பேர் பட்டியலில் உள்ளனர்.

திருச்சி மாவட்டம், மணச்சநல்லுாரை சேர்ந்த தகவல் பெறும் சட்ட ஆர்வலர் சீனிவாசன் இத்தகவலை ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளார்

via @Anbalagan Veerappan

No comments:

Post a Comment