PAGEVIEWERS


இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் ஏன்?

 
சம்பளத்திலும்,நியமனத்திலும் பாகுபாடு காட்டுகிறது என்பது விளங்கவில்லை.அவ்வாறு, தகுதியற்ற படிப்பாக இருந்தால்,அதனை
படிக்க வேண்டாம் என அறிவித்து விடலாமே !!!

இடைநிலை ஆசிரியர்கள் என்றால் ஆட்சியாளர்களுக்கு என்ன மாதிரியான என்னமோ தெரியவில்லை.யார் ஆட்சி கட்டிலில் அமர்ந்தாலும்,ஏளனமாக தோன்றுகிறோம் போல!!! அரசாணை எண 153 நாள் :03.06.2010 இதில் கூறப்பட்டுள்ள பட்டதாரி பணியிடங்கள் பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் பெற்று,இரண்டு ஆண்டுகள் ஆகிறது.ஆனால்


.இதே அரசாணையில் உள்ள 1743 இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க கடந்த அரசு மறந்தது.மறுத்தது.ஒருவழியாக தற்போதைய அரசு பதிவி ஏற்றவுடன் கல்வித்துறையில் கடந்த அரசு விட்டுச்சென்ற பணி நியமனங்களை நிரப்ப எடுத்த நடவடிக்கைகளில் முதல் நடவடிக்கை இந்த அரசாணையின் படி உள்ள 1743 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் தான்.நவம்பர் 2011ஆம் ஆண்டில் துவங்கி ,டிசம்பர் 2011 இல் சான்றிதல் சரிபார்ப்பு நடத்தி முடித்து,அம்மாதமே பணி நியமனம் என அறிவித்து,பின்னர் வழக்கின் காரணமாக பணி நியமனம் செய்யாமல்,இழுத்து தற்போது இன்றுவரை 1743 மற்றும் அதற்கு பிறகு அறிவிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும் நியமனம் செய்யவில்லை.ஆனால்,இதே அரசாணையில் உள்ள பட்டதாரி பணியிடங்கள் நிரப்பப்பட்டு,அதன் பின் பல்வேறு நியமனங்கள் நிறைவேற்றப்பட்டு ,இப்போது 136 நிரப்பப்படாத பணியிடங்கள் முதற்கொண்டு நிறைவேறியாகிவிட்டது.ஆனால்,சென்ற அரசும் சரி,இந்த அரசும் சரி இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் ஏன்?சம்பளத்திலும்,நியமனத்திலும் பாகுபாடு காட்டுகிறது என்பது விளங்கவில்லை.அவ்வாறு, தகுதியற்ற படிப்பாக இருந்தால்,அதனை படிக்க வேண்டாம் என அறிவித்து விடலாமே !!!

No comments:

Post a Comment