PAGEVIEWERS


ரசு கல்லூரிகளில் புதிதாக நியமிக்கப்பட உள்ள 1,060 உதவி பேராசிரியர் நியமனத்தை கண்காணிக்க கல்லூரி கல்வி இயக்குனர் தேவதாஸ் தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் 1,060 உதவி பேராசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். உதவி பேராசிரியர் பதவிக்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுநிலை பட்டப்படிப்புடன் ஸ்லெட் அல்லது நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.எச்டி. பட்டதாரிகளாக இருந்தால் ஸ்லெக்ட, நெட் தேர்ச்சி அவசியம் இல்லை.

ஸ்லெட், நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி, பி.எச்டி. பட்டம், பணி அனுபவம், நேர்முகத்தேர்வு என ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட மதிப்பெண் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு உதவி பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆசிரியர் நியமனத்திற்கு போட்டித்தேர்வு நடத்தப்படுவதால் உதவி பேராசிரியர் நியமனத்திற்கும் போட்டித்தேர்வு நடத்துவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், முந்தைய ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட பழைய நடைமுறையின்படியே நியமனம் நடைபெற உள்ளது.

உதவி பேராசிரியர் நியமன பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம்தான் மேற்கொள்ள உள்ளது. இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் (பிப்ரவரி) வெளியிடப்பட இருக்கிறது. இந்த நிலையில், உதவி பேராசிரியர் நியமன பணிகள் அனைத்தும் தனி அதிகாரி தலைமையில் நடைபெற உள்ளது. இதற்காக கல்லூரி கல்வி இணை இயக்குனர் தேவதாஸ் தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டு
பொறுப்பேற்றுள்ளார்.

No comments:

Post a Comment