PAGEVIEWERS

ஐயோ பாவம் !1-1-2011க்கு முன் பதவி உயர்வு பெற்ற  நம் இடை நிலை ஆசிரியர் சமூதாயம்......

தமிழக அரசு இடை நிலை ஆசிரியருக்கு 1-1-2011 முதல் அ .ஆ .எண் ;23 ன் படி  ரூ 750 தனி ஊதியம் வழங்கியது.அதுவும் 1.1.2006 முதல் 31-12-2010 வரை கிடையாதாம் .ஏன் என்றால் நாம் எல்லாம் எவ்வளவு அடித்தாலும் தாங்கிக்கொள்ளும் நல்லவர்கள் . பாதிப்பை உரியவர்களிடம் எடுத்து சொல்ல தனி தகுதி அற்றவர்கள் .பணி ஒய்வு தலைவர்களையும் பலரையும் நம்பி நம்பி ஏமாந்தது தான் மிச்சம் .
        1-1-2006 க்கு பின் 1-1-2011 க்கு முன் இடை நிலை ஆசிரியர் பணியில் இருந்து பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ரூ 750 தனி ஊதியம் கிடையாது இதனால் 1-1-2006 க்கு பின் 1-1-2011 க்கு முன் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பாதிப்பு ரூ 750 + அதற்கான அகவிலை படியும் சேர்த்து வருடத்திற்கு ரூ 15,000 /= பாதிப்பு ஏற்பட்டு உள்ளது .ஒரு ஒன்றியத்தில் வருடத்திற்கு எப்படியும் 5 முதல் 10 பேர் வரை பதவி உயர்வு பெற்றிருப்பார்கள் ஆனால் இப்படி ஓர் பதிப்பு இருப்பது 60% ஆசிரியர்களுக்கு தெரியாது தெரிந்தவர்களும் பேசுகிறார்கள் ஆனால் பாதிப்பு நீங்க முயற்ச்சி எடுக்க வில்லை 
             தமிழ் நாட்டில் 365 ஒன்றியங்கள் உள்ளது அப்படி ஆனால் 
2006 ல் பாதிக்கப்பட்டவர்கள்  365 * 10 = 3650 பேர் 
 2007 ல் பாதிக்கப்பட்டவர்கள்  365 * 10 = 3650 பேர் 
2008 ல் பாதிக்கப்பட்டவர்கள்  365 * 10 = 3650 பேர்
2009ல் பாதிக்கப்பட்டவர்கள்  365 * 10 = 3650 பேர் 
2010 ல் பாதிக்கப்பட்டவர்கள்  365 * 10 = 3650 பேர்
மொத்தம்  பாதிக்கப்பட்டவர்கள் 3650*5 = 18,250 பேர் ஆனால் இவர்களில் ஒருவர் கூட இந்த பிரச்சனைக்காக இதுவரை  நீதிமன்றம் செல்ல வில்லை ஏன் என்றால் நமக்கு நம் பாதிப்பு தெரியாது .அடுத்து நமக்கு உரிய வழிகாட்டுதல் இல்லை நீதிமன்றத்திற்கு வழக்குக்கு செலவு அதிக பச்சம் ரூ 25000 தான் ஆகும் .
               இந்த பாதிப்புக்காக பாதிக்கப்பட்ட  நாம் நீதிமன்றத்திற்கு செல்லாவிட்டால் நம் ஆயுள் இறுதி வரை வருடத்திற்கு வருடம் பாதிப்பு தொகை அதிகமாகும் .இந்த பாதிப்பு நீங்கிட நமது  TATA சங்கம் சரியான வழிகாட்டுதல் செய்திட தயாராக உள்ளது .2013 அக்டோபர் மாதம் நிதித்துறை செயலாளர் வெளியிட்ட கடிதப்படி இளையோர் முதியோர் ,4 (3) விதி எல்லாம் 2006 ல் நடை முறைக்கு வந்த 6 வது ஊதிய குழு விதிகளில் இடம்மில்லை என ஆணையிட்டு உள்ளது .எனவே பாதிக்கப்பட்ட தோழர்கள் ஒருங்கிணைப்பு செய்யுங்கள் .வரும் மாதம் நாம் நிதிமன்றம் செல்ல தயார் ஆவோம் ..
              மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் 
                            S.C.KIPSON. TATA.பொது செயலாளர் 
                              CELL- 9443464081//9840876408..


No comments:

Post a Comment