பணிப் பதிவேடுகளை 2 மாதங்களுக்கு ஒரு முறை சரிபார்க்க தொடக்க கல்வித்துறை அதிரடி உத்தரவு
ஆசிரியர்களின் பணிப் பதிவேடுகளை 2 மாதங்களுக்கு ஒரு முறைசரிபார்த்து உறுதி செய்ய தொடக்க கல்வித் துறை அதிரடிஉத்தரவிட்டுள்ளது. தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ளஊராட்சி, நகராட்சி, அரசு துவக்க, நடுநிலைப் பள்ளிகளில்பணிபுரியும் அனைத்து
வகை ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் அந்தந்த ஒன்றியத்தின்உதவி, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில்பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த பணி பதிவேடுகளில் ஆசிரியர்களின் விடுப்பு தொடர்பானபதிவுகள் உரிய காலத்தில் மேற்கொள்ளப்படாமல் இருப்பதாகதொடக்க கல்வி இயக்குநருக்கு புகார்கள் சென்றன. அதன்அடிப்படையில் தமிழக தொடக்க கல்வித் துறை இயக்குநர் பிறப்பித்தஉத்தரவில் கூறியிருப்பதாவது:
உதவி, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் தங்களுக்குகீழ் பணிபுரியும் ஆசிரியர்களின் பணிப் பதிவேடு களை உரியகாலத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துகொள்ள வேண் டும்.
2 மாதங்களுக்கு ஒரு முறைஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள்சரிபார்ப்பு
உதவி, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் தங்களுக்குகீழ் பணிபுரியும் ஆசிரியர்களின் பணிப் பதிவேடு களை உரியகாலத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துகொள்ள வேண் டும்.
ஆசிரியர்களின் பணி பதிவேட்டில் அவர்கள் பயின்ற உயர்கல்விவிவரங்களை பதிவு செய்யும் முன்பு உயர்கல்வி பய�ல்வதற்குஅனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதையும், சான்றிதழ்கள்தற்காலிகமா? நிரந்தரமானதா என்பதையும் உறுதி செய்து கொள்ளவேண்டும். ஒவ்வொரு ஆண்டி லும் டிச.31ம் தேதி ஒவ்வொருஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல்,பதவி உயர்விற்கான தேர்ந்தோர் பட்டியல் ஆகியவை பணிபதிவேட்டில் உள்ள பதிவேடுகளின் அடிப்படையில் தான்தயாரிக்கப்படுகிறது.
எனவே, சரியான சான்றிதழ்கள் அடிப்படையில் மட்டுமே பதிவுசெய்ய வேண்டும். ஏதேனும் தவறுகள் நடந்தது தெரியவந்தால்சம்பந்தப்பட்ட அலு வலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.ஆசிரியர்களின் வளர் ஊதியம், பதவி உயர்வு, ஊதியம் நிர்ணயம்மற்றும் ஓய்வூதியம் ஆகிய அனைத் தும் பணி பதிவேட்டில் உள்ளபதிவுகளின் அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறது.
எனவே ஒவ் வொரு உதவி, கூடுதல் உதவி தொடக்கக் கல்விஅலுவலர்கள் தங்கள் கீழ் பணிபுரியும் அனைத்து வகைஆசிரியர்களின் பணி பதிவேடுகளில் விவரங்கள் விடுபட்டிருந்தால்15 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். 2 மாதங்களுக்கு ஒருமுறை அனைத்து பணி பதிவேடுகளும் அலுவலகத்தில் உள்ளதுஎன்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
உதவி, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் பணி மாறுதல்மூலம் வேறு ஒன்றியங்களுக்கு மாறுதல் பெற்று செல் லும் போதுஅனைத்து ஆசிரியர்களின் பணி பதிவேட்டில் ஆசிரியர் எடுத்தவிடுப்புகள் மற்றும் பணி சரிபார்ப்புகள் அனைத்தையும் பதிவு செய்துவிட்டுத் தான் செல்ல வேண் டும்.
உதவி தொடக்க கல்வி அலுவலகங்களை மாவட்ட தொடக்க கல்விஅலுவலர்கள் ஆய்வு செய் யும் போது இந்த விவரங்களை சரிபார்த்துஉறுதி செய்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment