அரசு ஆணை 200 மற்றும் அரசு ஆணை 232 க்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்
இடம் ;- அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பாக .
நாள் ;- 24-07-2015. (வெள்ளி கிழமை ) மாலை 5.00மணி .
தற்போது அரசு வெளியிட்டுள்ள அரசு ஆணைகள் 200 மற்றும் 232 ஆல் ஆசிரியர்கள் பெறிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர் .மேலும் விரைவாக பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளதால் அவசர நிலை கருதி மாவட்ட தலைநகரில் மேற்கண்ட தேதி யில் நமது சங்கம் சார்பாக எதிர்பை.பதிவு செய்திட ஆர்ப்பாட்டம் நடத்திட உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட பொறுப்பாளர்கள் களை கேட்டு கொள்ளப்படுகிறது .
கோரிக்கைகள்
1'' . ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள 3 ஆண்டுகள்.ஒரே இடத்தில் பணி செய்து இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் ஏற்கனவே இருந்தது போல ஒராண்டு என குறைக்க வேண்டும் .
ஒளிவுமறைவின்றி கலந்தாய்வு நடைபெற அரசு உத்திரவாதம் வழங்க வேண்டும் .
மறைக்கப்பட்ட காலிபணியிடங்கள் நிர்வாக பணி மாறுதல் என நிரப்புவதற்கு தடைகள் விதிக்க வேண்டும் .
2.ஆறாவது ஊதிய குழு நடைமுறை படுத்தியதில் இடைநிலை ஆசிரியர் களுக்கு ஐந்தாம் ஊதிய குழுவில் பெற்று வந்ததை விட குறைவான ஊதிய வழங்கி வரும் அரசு ஊதிய முரண்பாடு தீர்க்க முன் வராமல் அரசு ஆணை 200 மூலம் விதித்துள்ள தடையை வாபஸ் பெற்று ஊதிய பிரச்சினையை தீர்க்க வேண்டும் .
டாட்டா கிப்சன் .9443464081.
பொது செயலாளர்
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்
No comments:
Post a Comment