PAGEVIEWERS

ஆசிரியர் தகுதித்தேர்வு விவகாரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம், ஆசிரியர்களை முற்றிலும் ஏமாற்றுகிறது - சிறப்பு கட்டுரை



மாயமாய் போன மறுசீராய்வு மனு வழக்கு:
கடந்த மாதம் பிப்ரவரி மாதம் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர்கள் சான்றிதழை பதிவிறக்கம் செ;யயதாதவர்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் மூலமாக சான்றிதழ்களை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது .. அப்போது ஆசிரியர் தேர்வு வாரிய செயலர் அவர்கள் பத்திரிக்கையாளருக்கு ஊடக நண்பர்களுக்கு கொடுத்த பேட்டி இணைக்கப்பட்டுள்ளது இதில் ' தற்போது மதுரை உயர்நீதிமன்றத்தில் அரசு 5சதவீதம் ரத்து செய்த உத்தரவை எதிர்த்து மறுசீராய்வு மனு வழக்கு நடைபெறுகிறது மேலும் இந்த வழக்கின் உத்தரவின் அடிப்படையில் 5சதவீதம் தளர்வு மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றோருக்கு பின்னர் சான்றிதழ் வழஙகப்படும் என அறிவித்தனர்

இன்னுமா வழக்கு முடியல :
இந்த மதுரை உயர்நீதிமன்ற மறுசீராய்வு மனு என்ன ஆனது என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் நேரிடையாக விளக்க வேண்டும்..இவ்வழக்கு இதுவரை விசாரிக்கப்பட்டதாகவும் எந்த ஒரு நாளிதளிலும் செய்தி வந்ததில்லை ... இந்த வெற்று அறிவிப்பு யாரை ஏமாற்ற?????
காற்றில் பறக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுகள் :
மதுரை உயர்நீதிமன்ற நீதியரசர் முன்தேதியிட்டு வழங்கிய 5சதவீதம் மதிப்பெண் தளர்வு செல்லாது என்ற உத்தரவு வழங்கிய பின்னரும் கூட.. அந்த உத்தரவின் மை காய்வதற்குள்ளாகவே
அவசரம் அவசரமாக இரவோடு இரவாக பணியானை கொடுத்து நேர்மையான முறையில் அதிக மதிப்பெண் பெற்ற ஆசிரியர்களை வெந்தழலில் தள்ளியதை மறக்க முடியுமா? அப்படியானால் நீதிமன்ற உத்தரவை அவமதிப்பது யார்?
சட்டம் எங்கள் சட்டப்பையில் என்று சொல்வது போலத்தான் இவர்களின் செயல்பாடு உள்ளது.. இதை தட்டிக்கேட்கவும் யாரும் தமிழகத்ததில் இல்லை அவ்வாறே கேட்டாலும் வழக்கு நிலுவையில் உள்ளத என்ற ஒற்றை வரி மட்டுமே பதிலாய் கிடைக்கிறது..
சிந்துபாத் கதையான டி.இ.டி வழக்கு :
ஆசிரியர் தகுதித்தேர்வின் வெய்ட்டேஜ் வழக்கில் இன்றோடு நல்ல முடிவு வரும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த தேர்வர்களுக்கும் வருங்கால பட்டதாரி ஆசிரியர்களுக்கும் வேதாளம் முருங்கை மரம் ஏறின கதை போல் ' விரைவில் மதுரை உயர்நீதிமன்ற ரத்து செய்த 5 சதவீதம் மதிப்பெண் தளர்வை எதிர்த்து அப்பீல் செய்ய வேண்டி உள்ளதால் மேலும் இரு வார காலத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்த சிந்துபாத் கதை முடியும் முன் எத்தனை ஆசிரியர்களின் கதை ( உயிர் ) முடியப்போகிறதோ!!
பாண்டிய நெடுஞ்செழியன் மனுநீதி சோழன் வாழ்ந்த மண்ணில் ஆசிரியர்களுக்கு நீதி இல்லை :
'யானோ அரசன் நானோ கள்வன் ' என்று தான் கூறிய நீதியில் தவறு உள்ளதே என்று தன் உயிரை பொருட்படுத்தாது இறந்தானே அந்த பாண்டிய நெடுஞ்செழியன் உன்மையான அரசன்.. பசுவின் கன்றை தன்மகன் தேர்காலிட்டு கொன்ற பின் ஐந்தறிவு ஜீவனுக்கும் உரிய நீதி வழங்கினானே அந்த மனுநீதிச் சோழன் அவன் அரசன் அவர்களது புகழ் உலகம உள்ளளவும் தமிழர்களால் மறைக்கப்படுவதில்லை யாராலும் மறைக்கப்படுவதில்லை... ஆனால் இவர்கள் வாழ்ந்த மண்ணில் ஆசிரியர்களுக்கு நேர்ந்த அநீதி இழைக்கப்படுகிறதே என்று சிந்திக்கும் வேளையில் இரத்த நாளங்களும் தெரிக்கின்றன.. தமிழ்பால் குடித்த இன்று கள்ளிப்பால் குடிக்க தோன்றுகிறது..
கண்ணீரை மையாக்கிய கடிதங்கள் :
கண்ணீரை மையாக்கிய பேனாக்களும் சதியால் உழன்று போன என் கைகழும் ஏனோ முடிவுரை எழுத மறுக்கிறது ' ஏனென்றால் முடிவே இல்லாத எங்களின் நரக வாழ்க்கைக்கு மீண்டும் ஓர் முடிவுரை '

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்
ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
சான்றிதழ்
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2012–2013–ல் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் பங்கு பெற்று தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, தேர்வர்கள் பதிவு இறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக பெரும்பாலான தேர்வர்கள் தங்கள் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொண்டனர்.

சரியான முறையில் பதிவிறக்கம் செய்யாதவர்களின் சான்றிதழ்கள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 14–ந்தேதி கடைசி
தேர்வர்கள் தேர்வு எழுதிய மாவட்டத்தின் அடிப்படையில், அந்த அந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நேற்றுமுதல் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம். சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள பிப்ரவரி 14–ந்தேதி கடைசி நாள்.

சென்னை மாவட்டத்தைச்சேர்ந்தவர்கள் சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.
இறுதி தீர்ப்பு
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் அரசால் தொடரப்பட்ட சீராய்வு மனுவின் மீது பெறப்படும் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் 82 முதல் 89 வரை மதிப்பெண்கள் பெற்று பதிவிறக்கம் செய்யாத தேர்வர்களுக்கு சான்றிதழ் வழங்குவது குறித்து தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment