PAGEVIEWERS

நமது ஜனநாயக கடமையான வாக்குரிமையை கண்டிப்பாக தவராமல் பயன்படுத்தி வாக்களிக்க வேண்டும்....
போராட்டத்தில் பங்குபெற்று கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்ற மன வேதனையில் உள்ள ஆசிரியராக இருந்தாலும் சரி...
போராட்டத்தில் பங்குபெறாத ஆசிரியராக இருந்தாலும் சரி....
தங்களுடைய தபால் ஓட்டை கண்டிப்பாக உரிமையோடு பெற்று கீழ் காணும் வழிமுறைகளை பின்பற்றி வாக்களிக்கவும்....
நமது தபால் வாக்கு சதவீதத்தை வைத்துதான் அமையவிருக்கும் அரசு நமது தற்போதய கோரிக்கையானாலும் சரி அல்லது 7வது ஊதிய குழுவை ஊதிய நிர்ணயமானாலும் சரி அனைத்து முடிவையும் எடுக்கும்....
ஆகையால் இதில் தயவுசெய்து சோம்பலோ...
எந்த சமரசமோ வேண்டாம்....
தபால் ஓட்டில் செய்ய வேண்டியவை ,செய்ய கூடாதவை !!!
தபால் ஓட்டில் செய்ய வேண்டியவை,செய்ய கூடாதவை !!!

100% தபால் ஓட்டு பதிவிற்காக தபால் ஓட்டு பதிவு செய்யும் போது கவனிக்க... 👀👁👁👀
🔸 முதலில் கட்சிகளின் சின்னம் அடங்கிய துண்டு சீட்டில் தங்களுக்கு பிடித்த சின்னத்துக்கு அருகில் டிக் அடிக்க வேண்டும் .
🔸 நாம் அடிக்கின்ற டிக் பக்கத்தில் இருக்கும் சின்னத்தில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
🔸✍🏻 டிக் அடித்த துண்டு சீட்டை A என்ற rose color office cover ல் வைத்து ஒட்ட வேண்டும்.
staple பண்ணக்கூடாது.
🔸 13A என்று ஒரு form இருக்கும் . அதை சரியாக fill பண்ணி தங்களுக்கு தெரிந்தattested பண்ண தகுதி உடைய நண்பர்களிடம் அந்த form 13A ல் attested வாங்க வேண்டும்.
🔸 பின்னர் A என்ற ஒட்டிய rose color office coverயும் , form 13A யும் சேர்த்து B என்ற கவரில் போட்டு ஒட்டி விட வேண்டும் .
குறிப்பு :
செய்யக்கூடாதது.
🔹 form 13A ல் attested வாங்காமல் இருக்கக் கூடாது.
🔹 இரண்டு office cover யும் ஒட்டாமல் இருக்கக் கூடாது.
🔹 form 13A ஐ A என்ற கவருக்குள் தப்பபித்தவரி கூட வைத்து விடக்கூடாது.
🔹 மேலும் சந்தேகம் இருந்தால் உங்கள் நண்பர்களிடம் discuss பண்ணி தெளிவு படுத்தி கொள்ளுங்கள் .
🔹இந்த முறை ஒரு தபால் வாக்கு கூட செல்லாத வாக்காக இருக்கக்கூடாது.
** இதில் சமரசம் செய்தால் நமது எதிர்காலம் கேள்விக்குறிதான்...

No comments:

Post a Comment