PAGEVIEWERS





 

 


தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ( டாடா ) மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 09.07.2016 சனிக்கிழமை மதியம் 2.00 மணிக்கு மாநில தலைவர் அவர்கள் தலைமையில் திருச்சி ...ஹோட்டல் அருணில் நடைபெற்றது.             


 மேற்படி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மாணங்கள்.    வருமாறு.......         
                
  1)மத்திய அரசு உழியர்களுக்கு ஏழாவது ஊதியகுழு நடைமுறைபடுத்தப்பட உள்ள நிலையில் தமிழக இடைநிலை ஆசிரியர்களின் 6 வது ஊதிய குழு முறன்பாடு இதுநாள் வரை தீர்க்கப்பட வில்லை.மேலும் தமிழக 6 வது ஊதியகுழுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 158 வழக்குகள் நிலுவையில் உள்ளது.மேற்படி வழக்குகளுக்கு தமிழக அரசு வரைவாக பதில் மனு தாக்கல் செய்து வழக்கை முடித்து ஊதிய முறன்பாட்டை தீர்த்த பின்னர்தான்    தமிழ்நாட்டில் 7 வது ஊதிய குழு அமைக்க வேண்டும்...                
 2)பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்திட அமைக்கப்பட்ட குழு அறிக்கை தயாரிக்கும் முன்னர் அனைத்து சங்கங்களையும் அழைத்து கருத்து கேட்பு கூட்டம் நடத்திட வேண்டும்.......              
3) தலைமை ஆசிசியர்கள் பல்வேறு பதிவேடுகள் பராமறிப்பு செய்திட வேண்டியது உள்ளதாள் "" அரசு உழியர்களுக்கு உள்ள பவாணிசாகர் பயிற்சி மையம்  "" போல் தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாக திறன் பயிற்சி வழங்கிட திருச்சியை மையமாக கொண்டு புதிய பயிற்சி மையம் துவங்கப்பட வேண்டும் ...               
 4) ஆண்கள், பெண்கள்,மாற்றுதிறனாழிகளுக்கு தனி தனி மேல்நிலை பள்ளிகள் இருப்பது  போல்  திருநங்கைகள்  கல்வி தடையின்றிபயில மாவட்ட தலைநகர்களில் சிறப்பு மேல்நிலைபள்ளிதுவங்கப்பட வேண்டும்........                 5)அரசின் விலையில்லா பொருள்கள் அனைத்தும் பள்ளிகளுக்கே கொண்டு வந்து வழங்கிட வேண்டும்....                 
 6)தமிழக அரசு உழியர்களுக்கான பணி விதிகள் மற்றும்  அடிப்படை விதிகள் ஊதிய விதிகள் இதுவரை தமிழில் இல்லை.ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது.எனவே முக்கிய விதிகளைதமிழில் மொழிபெயற்பு செய்து அரசிதழில் வெளியிட வேண்டும் ....             
  7).தொடக்க கல்வி துறையில்  கடந்த 10 வருடமாக நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு. பணிநிரவல் நடைபெற வில்லை.  எனவே விரைந்து பணிநிரவல் நடத்திட வேண்டும். 
8)ஆசிரியர்களின் உயர்கல்வி பின்னேற்ப ு2 வருடமாக அனுமதிக்கப்படாமல்நிலுவையில் உள்ளது இவற்றிற்கு கல்வித்துறை செயலாளர் விரைர்து அனுமதித்து ஆணை வழங்கிட வேண்டும்.                   9)வினாயகா மிஷன் பல்கலைகழகம் படிப்புகள். மற்றும் M.Com. B.Dd.  / M.A .  B.Ed.(பொருளாதாரம்) படிப்புகளுக்கு ஊக்க ஊதிய உயர்வும் பதவி உயர்வும் அனுமதிக்க வேண்டும்.                   
  10) ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் துவங்கப்பட்ட ஆங்கில வழி கல்வி பாட பிரிவுக்கு போர்கால அடிப்படையில் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்கள் விரைந்து நியமிக்க அரசை வேண்டுகிறோம்.      
  11.) 2003--2006 வருடங்களில் தொகுப்புதியத்தில் பணி நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணி காலத்தை ஊதிய உயர்வுக்கும்  பதவி உயர்வுக்கும் எடுத்துக்கொள்ளபணி நியமன நாள் பணிவரன்முறை செய்திட வேண்டுகிறோம்..    
   12 ) தமிழகத்தில் தொகுப்பூதியத்தில் பணிசெய்து வரும் சிறப்பு ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் . ..               
  13.) உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள TET வழக்குகளை விரைந்து முடித்து மத்திய அரசு போல் ஆண்டுக்கு இரு முறை தகுதிதேர்வு நடத்த வேண்டும்..                   
  14) தொடக்க கல்வி துறையில் அதே பள்ளியில் B.Ed கற்பித்தல் பயிற்சியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு முழு ஊதியம் வழங்கிட வேண்டும்..                   
  15) ஆசிரியர்கள் , அரசு உழியர்களின்  பணி சார்ந்த வழக்குகள் விரைந்து முடிக்கப்பட மதுரையிலும் சென்னையிலும் என இரண்டு  "டிரிபினல்" நீதிமன்றங்கள் உயர்நீதி மன்ற வளாகத்தில் அமைத்திட வேண்டுகிறோம்.           16)  ஆசிரியர்களுக்கு  விரைவாக பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல்உ  கலந்தாய்வு ஓளிவு மறைவு இல்லாமல் நேர்மையான முறையில் நடத்திட வேண்டும்..               
  17)    பள்ளி கல்வி துறை போல் தொடக்க கல்விதுறையிலும்  பணி நியமன தேதி அடிப்படையில் மாநில அளவில் பதவிஉயர்வு பட்டியல் தயார் செய்து நடைமுறை படுத்திட வேண்டும்  

No comments:

Post a Comment