PAGEVIEWERS

பணி நிரவல் செய்யப்பட்ட ஆசிரியை - தொடக்க கல்வி அலுவலகத்தில் தற்கொலை முயற்சி
 


சேலம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில், ஆசிரியை, துாக்க மாத்திரை சாப்பிட்டு, மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் டவுனை சேர்ந்தவர் தனலட்சுமி, 42; சேலம், தேர்வீதி அரசு நடுநிலைப் பள்ளியில், இடைநிலை ஆசிரியையாக பணிபுரிந்தார்.
ஆக., 13ம் தேதி, பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில், உபரி ஆசிரியர் பணியிடங்கள் கணக்கெடுக்கப்பட்டு, பணி நிரவல் நடந்தது. இதில், காடையாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள பள்ளிக்கு, தனலட்சுமி பணி மாறுதல் செய்யப்பட்டார்.
மேலும்
சேலம் நகர்ப்புறம் ஒன்றியத்தில் ஆசிரியர்கள் பணிமூப்புப்பட்டியலில் குளறுபடியால் மூத்த ஆசிரியர்கள் பாதிப்பு, இதற்காக DEEO புகார் தெரிவிக்கச் சென்ற ஆசிரியைகளை அலுவலகப்பணியாளர் மற்றும் சம்பந்தப்பட்ட ஏஇஒ ஒருமையில் பேசியதாகவும் அதனால் மனமுடைந்து ஆசிரியை தற்கொலை முயற்சி. ஆசிரியர் பணிமுப்பு பட்டியலில் விதிமுறைக்கு மாறாக தயாரிக்கப்பட்டிருப்பது ஆதாரங்கள் அடிப்படையில் உண்மையான அறிய முடிகிறது. மேற்கண்ட விவகாரத்தில் TATA தகுந்த ஆதாரங்களுடன் உண்மையை வெளிக்கொணர்ந்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடும். மேலும் தற்கொலைக்கு முயன்றவரை விட தற்கொலைக்கு தூண்டியவர்களே தண்டிக்கப்படவேண்டியவர்கள்.பாதிக்கப்பட்ட ஆசிரியைகளுக்கு ஆதாரவாக TATA வரும் வெள்ளி மாலை போராட்டம் நடத்த உள்ளது. நீதி தோற்பது இல்லை, நிதி வென்றதும் இல்லை.
இவண்
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்,
சேலம்.

No comments:

Post a Comment