மெட்ரிக் பள்ளிகளில் 5 பிரிவுகளுக்கு மேல் இருந்தால் நடவடிக்கை
"மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஒவ்வொரு வகுப்பிலும், அதிகபட்சமாக, ஐந்து பிரிவுகள் (செக்ஷன்கள்) வைத்துக் கொள்ளலாம். அதற்கும் அதிகமான பிரிவுகளுக்கு, விதிமுறையில் இடம் இல்லை. எனவே, ஐந்து பிரிவுகளுக்கும் அதிகமாக வகுப்புகளை நடத்தினால், சம்பந்தபட்ட பள்ளி மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர், பிச்சை எச்சரித்துள்ளார்.
அவரது அறிக்கை: மெட்ரிக் பள்ளிகள், மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில், தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் விதித் தொகுப்பின் படி, ஒரு வகுப்பிற்கு, அதிகபட்சமாக, நான்கு பிரிவுகள் மட்டுமே செயல்பட வேண்டும். கூடுதலாக, ஒரு பிரிவு துவங்க வேண்டும் எனில், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அனுமதி பெற வேண்டும்.