PAGEVIEWERS


ரயில் டிக்கெட் கேன்சல் செய்ய புதிய


விதிமுறைகள். ஜூலை 1 முதல் அமல்.


புதுடெல்லி: ரயில் டிக்கெட் கேன்சல் செய்ய    புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. 15 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய விதிமுறைகள் வரும் ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது. ரயில் டிக்கெட் கேன்சல் செய்வதற்கான விதிமுறைகள் 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மாற்றப்பட்டுள்ளன. இதன்படி ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்னர் டிக்கெட்டை கேன்சல் செய்தால் மட்டுமே முழு பணம் கிடைக்கும். இதற்கு முன்பு 24 மணி நேரத்துக்கு முன்னர் வரை கேன்சல் செய்து முழு பணம் பெற்றுக் கொள்ளலாம். 


மேலும் புதிய விதிமுறையின்படி உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை ரயில் புறப்பட்ட 2 மணி நேரத்துக்கு பின்னர் கேன்சல் செய்ய முடியாது. காத்திருப்போர் பட்டியல் மற்றும் ஆர்ஏசி டிக்கெட்டுகளை ரயில் புறப்பட்ட 3 மணி நேரத்துக்கு பின்னர் கேன்சல் செய்ய முடியாது. முன்பதிவு இல்லாத சாதாரண டிக்கெட்டுகளை கேன்சல் செய்வதிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளின்படி சாதாரண டிக்கெட்டுகளை டிக்கெட் வாங்கிய 3 மணி நேரத்துக்குள் மட்டுமே கேன்சல் செய்ய முடியும். 

இதற்கு முன்பு ரயில் புறப்படுவதற்கு 3 மணி நேரத்துக்கு முன்னர் வரை சாதாரண டிக்கெட்டுகளை கேன்சல் செய்யலாம். இந்த புதிய விதிமுறைகள் வரும் ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் கேன்சல் செய்வதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கவே இந்த புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டிருப்பதாக ரயில்வே செய்தி தொடர்பாளர் அனில் சக்சேனா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment