PAGEVIEWERS

வாட்ஸ் ஆப்ல் சுட்டது.
எங்கே போனது..?
எங்கே போனது..?
2002-ல் DA மற்றும் 7 நாட்கள் EL-ஐ மீட்டெடுக்க அரசு ஊழியர்களுடன் கைகோர்த்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் குதித்த வீரம் எங்கே போனது..?
தெரியவில்லையா...?
தெரியவில்லையா...?
அதைவிட பாதிப்பு அதிகம் உள்ளது உனக்குத் தெரியவில்லையா...?
அமைந்திடுமா..?
அமைந்திடுமா..?

முதுமை என்ற நோயிற்கு
ஆதரவாய் CPS திட்டம் அமைந்திடுமா...?

அலட்சியமா...?
அலட்சியமா..?

முதுமை கண்ட தலைமைகளே
நீங்கள் கரையில் நிற்பதால் (பழைய ஓய்வூதியம்) இந்த அலட்சியமா...?

கூறிடுக ...?
கூறிடுக...?

3000 ரூபாய் இழப்பிற்கே அன்று (2002) தொடர் வேலைநிறுத்தத்தில் குதித்த நம் பேரமைப்பு ...
மாதம் 12,000 இழக்கின்றோம் இருந்தும் தொடர்வேலைநிறுத்தத்தை
அறிவிக்காதது ஏன் கூறிடுக..?

சுயநலமோ...?
சுயநலமோ...?

8 ஆண்டுகள் உருண்டோடியும் டிக்டோஜாக்கால் தொடர்வேலைநிறுத்தத்தை நோக்கி நகர முடியாதது முதுமை தலைமைகளின் சுயநலமோ...?
வேகமெடு..வேகமெடு..
இழப்பினை மீட்க வேகமெடு..

குதிக்கின்றோம்..
குதிக்கின்றோம்...

எங்களின் அடியே நெருப்பினைத் தான்..
பற்ற வைத்தது நம் அரசு..

அதனால் கொதித்து குதிக்கின்றோம்..
உணர்ந்தாயோ..?
உணர்ந்தாயோ..?
அனலின் கொடுமையை உணர்ந்தாயோ..

மறுக்கிறதோ...?
மறுக்கிறதோ..?

அன்று கொதித்த உன் குருதி இன்று கொதிக்க மறுக்கிறதோ..?
அழிக்காதே அழிக்காதே..
போட்ட கோட்டை மீண்டும் அழிக்காதே..

ஆரம்பிக்காதே ஆரம்பிக்காதே..
மீண்டும் முதலிருந்து ஆரம்பிக்காதே..

குறைக்காதே குறைக்காதே..
போராட்டத்தின் வீரியத்தைக் குறைக்காதே..

நடவடிக்கை எடு
நடவடிக்கை எடு...

அரசு ஊழியர்களுடன் கைகோர்க்க நடவடிக்கை எடு..
யோசிக்காதே யோசிக்காதே..
அரசு ஊழியர்களுடன் இணைய யோசிக்காதே...

இணைந்திடுக இணைந்திடுக...
விருப்பு வெறுப்பினை கலைந்து இணைந்திடுக..

முரண்படாதே முரண்படாதே...
தொடர் வேலைநிறுத்தத்தை அறிவிப்பதில் முரண்படாதே..

உருவெடு உருவெடு...
ஜாக்டீயாய் உருவெடு...

அலட்சியம் வேண்டாம்...
அலட்சியம் வேண்டாம்..

போராட்டத்தை அறிவிப்பதில் அலட்சியம் வேண்டாம்..
சோகம் தான்..
சோகம்தான்..
உங்கள் வேகம் எங்கள் சோகம் தான்..

தாண்டினாயே...?
தாண்டினாயே...?

எங்கள் கையைப் பிடித்துத் தாண்டினாயே..?
முழு கிணரும் தாண்டினாயா...?

காத்திருக்காதே..
காத்திருக்காதே...

அரசின் அறிப்பை எதிர்பார்த்து காத்திருக்காதே...
வகுத்திடுக வகுத்திடுக..
அனல் பறக்கும் போராட்ட வியூகம் வகுத்திடுக..

கையில் எடு..
கையில் எடு...

கடைசி ஆயுதத்தை (தொடர் வேலைநிறுத்தம்) கையில் எடு...
புரிகிறதா புரிகிறதா...?
பாதிக்கப்பட்டவர்களின் கொந்தளிப்பு உனக்குப் புரிகிறதா..?

நெருக்கடி கொடுப்போம்...
நெருக்கடி கொடுப்போம்...

தொடர் வேலைநிறுத்தத்தை அறிவிக்கும்வரை நெருக்கடி கொடுப்போம்...
காப்பாயோ..காப்பாயோ...
இனியும் அமைதி காப்பாயோ..

இனியும் தாமதம் செய்திட்டால்..
வெளுத்திடுமே...
வெளுத்திடுமே..
சாயம் இருப்பின் வெளுத்திடுமே..

-இவண்
பாதிக்கப்பட்ட ஆசிரியர்

வாக்குறுதிகள் நமக்கு வாய்க்கரிசிகளே....
டிட்டோஜாக் தலைமைகளே..
நாளையாவது பின்வாங்காமல் தெளிவாக கோரிக்கையில் ஒரே நிலைபாட்டுடன் இருங்கள்....
புதிய பென்சன் திட்டம் எங்களுக்கு வாய்கரிசி போட மட்டுமே உதவும் என்பதை மறந்துவிட வேண்டாம்...
தீயாய் பற்றி எரியக் கூடிய இந்த இரண்டு
(CPS ரத்து & மத்திய அரசுக்கு இணையான இடைநிலை ஆசிரியர் ஊதியம்)
கோரிக்கைகளும் நிறைவேறாமல் போராட்டத்திலிருந்து பின்வாங்கமாட்டோம் என்ற உறுதியான நிலைப்பாட்டை அரசுக்கு உணர்த்துங்கள்..

தற்பொழுது நிதிநிலை சரியில்லை 15 அம்சக் கோரிக்கையில் நிதி சாராத கோரிக்கைகளை தற்பொழுது நிறைவேற்றித் தருகிறோம் ...
750-ஐ போல் ஒரு 250 தருகிறோம் போராட்டத்தை கைவிடுங்கள் என்று கூறினால் பச்சை துண்டு வாங்க வெளியே வந்துவிடாதீர்....
கோரிக்கைகள் நிறைவேறாவிடில் அரசுக்கு எச்சரிக்கை விடுத்து வாரீர்..
அடுத்த கட்டமாக காலவரையற்ற வேலைநிறுத்தத்தை
ஜாக்டீயாக உருவெடுத்து அரசு இயந்திரத்தை ஸ்தம்பிக்கச் செய்வோம் என்று..

உங்களின் உறுதியான நிலைப்பாடு மட்டுமே எங்களின் கோரிக்கைகளை வென்றெடுக்கும்..
-இவண்
பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுடன்,

29 மாவட்டங்களுக்கு புதிய டிஇஓ நியமனம்

கல்வி மாவட்ட வாரியாக காலியாக இருந்த 29 பணியிடங்களில் பதவி உயர்வு மூலம் மாவட்ட கல்வி அதிகாரிகள் (டிஇஓ) நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு உயர் நிலை, மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றி வந்த தலைமை ஆசிரியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதற்கு நிகரான பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, விழுப்புரம் மாவட்ட சித்தாமல்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சிங்கராஜ், சென்னை பள்ளிக் கல்வி இயக்கக உதவி இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், மாங்காடு அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா, சென்னையிலும், மணலி மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் திருப்பூரிலும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, காஞ்சிபுரம் மாவட்ட செங்காடு தலைமை ஆசிரியர் சாந்தகுமார் கோயமுத்தூர் மாநகராட்சி கல்வி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் மொத்தம் 29 பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டுள்ளன.

அரசின் அனுமதி பெற்ற பிறகே அரசு ஊழியர்களிடம் விசாரணை!

அரசு ஊழியர்கள் மீது லஞ்சம் மற்றும் ஊழல் புகார் வந்தால், அரசு அனுமதி பெற்ற பிறகே, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீது, லஞ்சம் மற்றும் ஊழல் புகார் வந்தால், அரசு அனுமதி பெற்ற பிறகே, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.

.
ஆனால், பிற அரசு ஊழியர்கள் மீது, புகார் வந்ததும், அரசு அனுமதியின்றி, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக, சிலர், உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில், பொது நல வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில், தமிழக அரசு, நேற்று முன்தினம், புதிய அரசாணை பிறப்பித்து உள்ளது.
அதில் கூறியுள்ளதாவது:
அரசு ஊழியர்கள் யார் மீதேனும், லஞ்சம் மற்றும் ஊழல் புகார் வந்தால், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்குனரகம், புகாரை லஞ்ச ஒழிப்பு கமிஷனுக்கு அனுப்ப வேண்டும்.
கமிஷன், புகார் பதிவு செய்ய, அரசிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி கிடைத்த பின், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்குனரகம், விசாரணை நடத்தலாம். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க மட்டுமே, அரசிடம் அனுமதி பெற வேண்டும் என இருந்தது. இப்போது, அரசு ஊழியர்கள் மீதும் வழக்கு தொடர அனுமதி பெற வேண்டும் என, புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போலி சான்றிதழ்கள் தடுக்க 'ஸ்மார்ட்' எண் : பள்ளி கல்வித்துறை அதிரடி
போலி சான்றிதழ்களை தடுக்க, இந்த ஆண்டு முதல், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு சான்றிதழ்களில், ஆதார் அடிப்படையிலான, 'ஸ்மார்ட்' எண் வழங்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ்களில் போலிகள் அதிகரித்துள்ளன. போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த, ஐந்து ஆசிரியர்கள் சமீபத்தில், 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டனர்; மற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து வருகிறது. போலி சான்றிதழ் பிரச்னையை தடுக்க, புதிய அடையாள எண் திட்டத்தை, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. இதன்படி, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு சான்றிதழ்களில் நிரந்தர, 'ஸ்மார்ட்' எண் தரப்படும்.
டாட்டா சங்கம் சார்பில் அடுத்த வாரம் தேர்தல் ஆணையத்தின் மீது பொது நல வழக்கு தாக்கல் ..

2016 ஆண்டில் தமிழ்நாட்டின் சட்ட மன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது .தேர்தல் பணிக்கு 3,50,000 ஆசிரியர்கள் பயன்படுத்த உள்ளனர்.தேர்தல் பணியின் போது ஆசிரியர்களின் நலன் சார்ந்து 10 கோரிக்கைகள் 28.12.2015 அன்று தலைமை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பபட்டு உள்ளது.இதன் மீது விரைவில் தேர்தல் ஆணையம் ஆணை பிறப்பிக்க பொது நல வழக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட உள்ளது .என்பதை மகிழ்சியுடன் தெரிவிக்கிறேன் .என்றும் ஆசிரியாரின் நலனுக்காய் உண்மையாய் உழைக்கும் சங்கம் டாட்டா மட்டுமே.!!!!!





போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான சம்பளம், புதிய சம்பள கொள்கை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் இன்று
(பிப்ரவரி 1ம் தேதி) மூன்றாவது நாளை எட்டியுள்ளது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் இன்றைய ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்து, அரசின் கருவூலத்தில் செலுத்தும்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
TATA-சங்கம் -மாநில செயற்குழு -கூட்டம் 

நாள் ;- 07-02-2016   /  ஞாயிற்று க்கிழமை 

இடம் ;- புத்தா ஹால் --பேருந்து நிலையம் எதிரில் .திருவண்ணா மலை .

நேரம் ;-  காலை 10.00 மணி /

அனைத்து மாநில பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் வட்டார பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும் ...
                       
  இவன் ...டாட்டா மாநில அமைப்பு

மக்கள் தொகை கணக்கு ஆசிரியர்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 6 வரை அனுமதி....

ஜாக்டோ’ - 3 நாள் மறியல் .டாட்டா சங்கத்தின் நிலைப்பாடு ....

டாட்டா    சங்கத்தின் சார்பாக   இந்திய  உச்ச நீதிமன்றத்தில் ஊதிய பிரச்சனைக்கு தீர்வு காண   வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 2015 டிசம்பர் மாதம் விசாரணை நடைபெற்றது .அதில் நமது ஊதிய பிரச்சனை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்கப்பட்டு உள்ளது .மேலும் 6 வது ஊதிய குலுக்கு எதிராக 159 வழக்குகள்  உச்ச நீதிமன்றத்தில்  நிலுவையில் உள்ளதாக நிதி துறை தெரிவித்து உள்ளது .இந்த நிலையில் டாட்டா மாவட்ட பொறுப்பாளர்களிடம்  \''ஜாக்டோ’''   அமைப்பில் இருந்து ஏவரும் போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு கொடுக்க வில்லை .மேலும் தற்போதைய நிலையில் காலம் கடந்த போராட்டம் வெற்றி தராது என்பதாலும்  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் ஊதிய மாற்றம் சாத்தியம் இல்லாதது ஆகும் .டாட்டா சங்கம் சட்ட போராட்டம் மிக வலுவாக நடத்தி வருவதாலும் நடைபெற உள்ள போராட்டத்தில் கலந்து கொள்ளாது....

                                                                                            இவன் ....

                                                                            டாட்டா மாநில அமைப்பு

            

     

பள்ளிக்கல்வி - அரசு/நிதிஉதவி பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாதோர் வெளிநாடு செல்ல பள்ளிக்கல்வி இயக்குனர் அனுமதி பெற்றபின்னரே விடுப்பு அளிக்க வேண்டும் - இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்..........

6 வது ஊதிய குழு ஊதிய பிரச்சனைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 159  வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல் ...


Treasury மூலம் பெறப்படும் தங்களது ஊதியத்தின் ANNUAL statement Details



TPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறியலாம்

TO GET ANNUAL PAY DRAWN DETAILS FOR IT PURPOSE CLICK HERE...

Enter your details :- 
* Employee code (TPF/CPS number)
* Suffix (EDN)
* Date of birth(DD/MM/YYYY)


Get your
* pay slip
* annual salary statement
* pay drawn particulars...

T.A.T.A .Sangam manu....



 

443 நீதிபதி பணியிடம் காலி

நாடு முழுவதும் ஐகோர்ட்டுகளில், 443 நீதிபதி பணியிடங்களும், சுப்ரீம் கோர்ட்டில், ஐந்து நீதிபதி பணியிடங்களும் காலியாக உள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த, தேசிய நீதித்துறை நியமன கமிஷன் நடைமுறைக்கு, சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது.
இதனால், கடந்தாண்டு, ஏப்ரல், 13 முதல், எந்த நியமனமும் நடக்கவில்லை. சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து, ஏற்கனவே அமலில் இருந்த, 'கொலீஜியம்' முறையே நடைமுறைக்கு வந்தது. இருந்தாலும், நீதிபதி நியமனம், பதவி உயர்வு உள்ளிட்ட நடைமுறை கள் முடங்கியுள்ளன. நாடு முழுவதும் உள்ள, 24 ஐகோர்ட்களில், அனுமதிக்கப்பட்ட, 1,044 நீதிபதி பணியிடங்களில், 443 பணியிடங்கள் காலியாக உள்ளன. சுப்ரீம் கோர்ட்டில், 31 பணியிடங்களில், ஐந்து இடங்கள் காலியாக உள்ளன. சென்னை ஐகோர்ட்டில்... நாட்டிலேயே மிகவும் அதிகபட்சமாக, அலகாபாத் ஐகோர்ட்டில், 86 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. அதற்கு அடுத்தபடியாக, சென்னை ஐகோர்ட்டில், 38 பணியிடங்கள் காலியாக உள்ளன.

INCOME TAX - 2015-16 IT CALCULATION STATEMENT WITH FORM 16

CORRECTED COPY - INCOME TAX - 2015-16 IT CALCULATION STATEMENT WITH FORM 16 CLICK HERE...

குறிப்பு;-....

1. INCOME TAX SHEET ல் மாற்றம்....
2. PONGAL BONUS இல்லாதவா்களுக்கும் பயன்படும்..

INCOME TAX - 2015-16 IT CALCULATION STATEMENT WITH FORM 16 CLICK HERE...

Prepared By Mr. V. Manimaran, Zamindar's HSS, Turaiyur, Trichy Dist

2015 ஆம் கல்வியாண்டிற்கான உதவிபெறும் பள்ளிகளுக்கான இறுதிக் கற்பிப்பு மற்றும் பராமரிப்பு மான்யம் விடுவித்தல் சார்பான தொடக்கக்ககல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 13. 01. 2016........

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4Fw3-K1yBgTt-44u9wxVmDjnIVCPt2IhmqvKxthwRR6op8OOfLUqtwpSD5KTvI4TKYX7HaMBXGITInGPzO0gPUMgwnQasyoq_GKx_kwCdozRuu-u4ooszc0OEMuhJDRDxdwsHuYHGOhI/s1600/ftg+2.JPG 

 

15-01-2016. இந்த இனிய பொங்கல் நாளில் வாழ்வில் எல்லா வளமும் நலமும் அதிர்ஷ்டமும் பெற்று வாழ என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!