PAGEVIEWERS

நிதிநிலை அறிக்கையில் மரபை பின்பற்றி புதிய அறிவிப்புகள் இல்லை

தமிழக சட்டப்பேரவையின் வழக்கமான மரபை பின்பற்றி புதிய அறிவிப்புகள் எதையும் அரசு மேற்கொள்ளவில்லை என்று நிதித் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார். தமிழக அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்த ஓ. பன்னீர்செல்வம், இடைக்கால நிதிநிலை அறிக்கையில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்படாது என்ற பேரவையின் வழக்கமான மரவை பின்பற்றி, அதிமுக தலைமையிலான அரசு புதிய அறிவிப்புகள் எதையும் மேற்கொள்ளவில்லை.


இடைக்கால நிதிநிலை அறிக்கைக்கு ரூ.60,610 கோடி  உத்தேசமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

பொது விநியோகத் திட்ட மானியத்துக்கு ரூ.5,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாற்றித்திறனாளி உள்ள குடும்பத்தினருக்கு வருமான வரம்பின்றி இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்.

பள்ளிக்கல்வி - பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு 2015-16ஆம் ஆண்டிற்கான நேரடி நியமனம் / இதர நியமன முறைக்கான காலிப் பணியிடம் நிர்ணயம் செய்தல் - ஆணை வெளியீடு....

எச்சரிக்கை... எச்சரிக்கை...
ஜாக்டோவிற்கு எச்சரிக்கை..!!!

திராணி இழந்துவிட்டதா நம் ஜாக்டோ பேரமைப்பு...
மாற்றுத்திறனாளிக்கு உள்ள திராணி கூடவா ஜாக்டோவிற்கு இல்லை...????
கடந்த மூன்று நாட்களாக மாற்றுத்திறனாளிகள் செய்த தொடர் மறியலால் அரசு நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில் பட்ஜெட்டில் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் என்றது..
கூட்டம் முடிந்து வெளியே வந்த மாற்றுத்திறனாளிகள்.. பட்ஜெட்டில் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் கோட்டையை நோக்கி தொடர் முற்றுகை செய்வோம் என்று ஆவேசமாக அந்த இடத்திலேயே பத்திரிக்கையாளர்களிடம் அரசுக்கு எச்சரிக்கை செய்துவிட்டு களைந்தனர்..
(இப்படியல்லவா அரசை எச்சரித்து விட்டு வந்திருக்கனும் நம் ஜாக்டோ பேரமைப்பு...ஆனால், பண்ணியதா அதை)
16-ம் தேதி பட்ஜெட்டில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் காலவறையற்ற வேலைநிறுத்தம் செய்வோம் என்று அரசுக்கு எச்சரித்துவிட்டு வர ஜாக்டோவிற்கு ஏன் இவ்வளவு தயக்கம்...????
தயக்கமா....
இல்லை, கூட்டமைப்பின் மீது உள்ள நம்பிக்கையின்மையா..????

2002-களில் இருந்த உங்களின் வேகம் தற்பொழுது எங்கேபோனது...????
நாங்கள் அகலபாதாளத்தின் விளிம்பில் தவிக்கும் போது கூட...,
நீங்கள் பொங்கி எழாததன் மர்மம் தான் என்ன......??????

பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பிறகு நமக்கு வெறும் 13 நாட்கள் மட்டுமே உள்ளன..
அதன்பின் தேர்தல் தேதி அறிவித்து விடுவார்கள்,
அதன் பிறகு வெறும் கண்துடைப்பு நாடகத்தை மட்டும் அரங்கேற்றலாம் என்ற எண்ணமோ...????

16-ம் தேதி ஏமாற்றப்பட்டோம் என்றால் அடுத்தகட்ட போராட்டத்தை 17-ம் தேதி அறிவிப்போம் என்று கூறியுள்ளீர்களே...????
தொடர்வேலைநிறுத்தின் தேதியை 17-ம் தேதி அறிவிப்போம் என்று கூற கூடவா திராணியை இழந்தது ஜாக்டோ பேரமைப்பு...????
17-ம் தேதி கோட்டையை நோக்கி தொடர் முற்றுகையிடுவோம் என்று அறிவித்து எங்களின் கோரிக்கைகளை கேளிக்கை ஆக்கிவிடாதீர்கள்..
(உங்க பொங்கச் சோறும் வேண்டாம் .. பூசாரித் தனமும் வேண்டாம்)

நேற்று அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை முடிந்து...
ஆனால் , அதற்கு மற்ற சங்க நிர்வாகிகளோ... உயர்திரு.பன்னீர்செல்வம் அவர்கள் கூறியதால் பட்ஜெட் வரை காத்திருக்கலாம் என்றார்களாமே......????
அவர்கள் என்ன 2800 ஊதியக்கட்டில் உள்ளவரா...?????
இல்லை, CPS-ஆல் பாதிக்கப்பட்டவரா...????)
நாங்கள் போராட வேண்டியது அரசுடன் இல்லை...
நாங்கள் சார்ந்துள்ள இயக்கத் தலைமைகளிடம் தான் என்று மீண்டும் மீண்டும் உணர்த்திவிட்டீர்கள்..

ஜாக்டோஜியோ-வாக விஸ்வரூபம் எடுத்திருக்க வேண்டிய நமது போராட்டத்தை பிசுபிசுக்கச் செய்துவிட்டீர்களே....????
(இதில் என்ன சூழ்ச்சியோ..!!! )

தொடர்வேலை நிறுத்தத்தை நீங்கள் விரைவில் அறிவிக்க தவறினால்....!!!
எச்சரிக்கை... எச்சரிக்கை...
ஜாக்டோவிற்கு எச்சரிக்கை..

ஜாக்டோவில் உள்ள பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை அனைத்து சங்கங்களும் இழக்க நேரிடும் என்பதை பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக எச்சரிக்கின்றேன்.....
அதற்கு அச்சாரம் தீட்டுவதைப் போல் உள்ளது ஜாக்டோவின் தொடர் அலட்சியப் போக்கு....
-இவண்
பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுடன்,
தேவராஜன்
தற்சமயம் பேச்சு வார்த்தை தோல்வி.
தமிழக அரசு நிதி நெருக்கடியில் உள்ளதால் கோரிக்கைகளை தற்போது ஏற்க இயலாது என நிதித்துறை செயலாளர் அறிவிப்பு.





வாட்ஸ் ஆப்ல் சுட்டது.
எங்கே போனது..?
எங்கே போனது..?
2002-ல் DA மற்றும் 7 நாட்கள் EL-ஐ மீட்டெடுக்க அரசு ஊழியர்களுடன் கைகோர்த்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் குதித்த வீரம் எங்கே போனது..?
தெரியவில்லையா...?
தெரியவில்லையா...?
அதைவிட பாதிப்பு அதிகம் உள்ளது உனக்குத் தெரியவில்லையா...?
அமைந்திடுமா..?
அமைந்திடுமா..?

முதுமை என்ற நோயிற்கு
ஆதரவாய் CPS திட்டம் அமைந்திடுமா...?

அலட்சியமா...?
அலட்சியமா..?

முதுமை கண்ட தலைமைகளே
நீங்கள் கரையில் நிற்பதால் (பழைய ஓய்வூதியம்) இந்த அலட்சியமா...?

கூறிடுக ...?
கூறிடுக...?

3000 ரூபாய் இழப்பிற்கே அன்று (2002) தொடர் வேலைநிறுத்தத்தில் குதித்த நம் பேரமைப்பு ...
மாதம் 12,000 இழக்கின்றோம் இருந்தும் தொடர்வேலைநிறுத்தத்தை
அறிவிக்காதது ஏன் கூறிடுக..?

சுயநலமோ...?
சுயநலமோ...?

8 ஆண்டுகள் உருண்டோடியும் டிக்டோஜாக்கால் தொடர்வேலைநிறுத்தத்தை நோக்கி நகர முடியாதது முதுமை தலைமைகளின் சுயநலமோ...?
வேகமெடு..வேகமெடு..
இழப்பினை மீட்க வேகமெடு..

குதிக்கின்றோம்..
குதிக்கின்றோம்...

எங்களின் அடியே நெருப்பினைத் தான்..
பற்ற வைத்தது நம் அரசு..

அதனால் கொதித்து குதிக்கின்றோம்..
உணர்ந்தாயோ..?
உணர்ந்தாயோ..?
அனலின் கொடுமையை உணர்ந்தாயோ..

மறுக்கிறதோ...?
மறுக்கிறதோ..?

அன்று கொதித்த உன் குருதி இன்று கொதிக்க மறுக்கிறதோ..?
அழிக்காதே அழிக்காதே..
போட்ட கோட்டை மீண்டும் அழிக்காதே..

ஆரம்பிக்காதே ஆரம்பிக்காதே..
மீண்டும் முதலிருந்து ஆரம்பிக்காதே..

குறைக்காதே குறைக்காதே..
போராட்டத்தின் வீரியத்தைக் குறைக்காதே..

நடவடிக்கை எடு
நடவடிக்கை எடு...

அரசு ஊழியர்களுடன் கைகோர்க்க நடவடிக்கை எடு..
யோசிக்காதே யோசிக்காதே..
அரசு ஊழியர்களுடன் இணைய யோசிக்காதே...

இணைந்திடுக இணைந்திடுக...
விருப்பு வெறுப்பினை கலைந்து இணைந்திடுக..

முரண்படாதே முரண்படாதே...
தொடர் வேலைநிறுத்தத்தை அறிவிப்பதில் முரண்படாதே..

உருவெடு உருவெடு...
ஜாக்டீயாய் உருவெடு...

அலட்சியம் வேண்டாம்...
அலட்சியம் வேண்டாம்..

போராட்டத்தை அறிவிப்பதில் அலட்சியம் வேண்டாம்..
சோகம் தான்..
சோகம்தான்..
உங்கள் வேகம் எங்கள் சோகம் தான்..

தாண்டினாயே...?
தாண்டினாயே...?

எங்கள் கையைப் பிடித்துத் தாண்டினாயே..?
முழு கிணரும் தாண்டினாயா...?

காத்திருக்காதே..
காத்திருக்காதே...

அரசின் அறிப்பை எதிர்பார்த்து காத்திருக்காதே...
வகுத்திடுக வகுத்திடுக..
அனல் பறக்கும் போராட்ட வியூகம் வகுத்திடுக..

கையில் எடு..
கையில் எடு...

கடைசி ஆயுதத்தை (தொடர் வேலைநிறுத்தம்) கையில் எடு...
புரிகிறதா புரிகிறதா...?
பாதிக்கப்பட்டவர்களின் கொந்தளிப்பு உனக்குப் புரிகிறதா..?

நெருக்கடி கொடுப்போம்...
நெருக்கடி கொடுப்போம்...

தொடர் வேலைநிறுத்தத்தை அறிவிக்கும்வரை நெருக்கடி கொடுப்போம்...
காப்பாயோ..காப்பாயோ...
இனியும் அமைதி காப்பாயோ..

இனியும் தாமதம் செய்திட்டால்..
வெளுத்திடுமே...
வெளுத்திடுமே..
சாயம் இருப்பின் வெளுத்திடுமே..

-இவண்
பாதிக்கப்பட்ட ஆசிரியர்

வாக்குறுதிகள் நமக்கு வாய்க்கரிசிகளே....
டிட்டோஜாக் தலைமைகளே..
நாளையாவது பின்வாங்காமல் தெளிவாக கோரிக்கையில் ஒரே நிலைபாட்டுடன் இருங்கள்....
புதிய பென்சன் திட்டம் எங்களுக்கு வாய்கரிசி போட மட்டுமே உதவும் என்பதை மறந்துவிட வேண்டாம்...
தீயாய் பற்றி எரியக் கூடிய இந்த இரண்டு
(CPS ரத்து & மத்திய அரசுக்கு இணையான இடைநிலை ஆசிரியர் ஊதியம்)
கோரிக்கைகளும் நிறைவேறாமல் போராட்டத்திலிருந்து பின்வாங்கமாட்டோம் என்ற உறுதியான நிலைப்பாட்டை அரசுக்கு உணர்த்துங்கள்..

தற்பொழுது நிதிநிலை சரியில்லை 15 அம்சக் கோரிக்கையில் நிதி சாராத கோரிக்கைகளை தற்பொழுது நிறைவேற்றித் தருகிறோம் ...
750-ஐ போல் ஒரு 250 தருகிறோம் போராட்டத்தை கைவிடுங்கள் என்று கூறினால் பச்சை துண்டு வாங்க வெளியே வந்துவிடாதீர்....
கோரிக்கைகள் நிறைவேறாவிடில் அரசுக்கு எச்சரிக்கை விடுத்து வாரீர்..
அடுத்த கட்டமாக காலவரையற்ற வேலைநிறுத்தத்தை
ஜாக்டீயாக உருவெடுத்து அரசு இயந்திரத்தை ஸ்தம்பிக்கச் செய்வோம் என்று..

உங்களின் உறுதியான நிலைப்பாடு மட்டுமே எங்களின் கோரிக்கைகளை வென்றெடுக்கும்..
-இவண்
பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுடன்,

29 மாவட்டங்களுக்கு புதிய டிஇஓ நியமனம்

கல்வி மாவட்ட வாரியாக காலியாக இருந்த 29 பணியிடங்களில் பதவி உயர்வு மூலம் மாவட்ட கல்வி அதிகாரிகள் (டிஇஓ) நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு உயர் நிலை, மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றி வந்த தலைமை ஆசிரியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதற்கு நிகரான பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, விழுப்புரம் மாவட்ட சித்தாமல்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சிங்கராஜ், சென்னை பள்ளிக் கல்வி இயக்கக உதவி இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், மாங்காடு அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா, சென்னையிலும், மணலி மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் திருப்பூரிலும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, காஞ்சிபுரம் மாவட்ட செங்காடு தலைமை ஆசிரியர் சாந்தகுமார் கோயமுத்தூர் மாநகராட்சி கல்வி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் மொத்தம் 29 பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டுள்ளன.

அரசின் அனுமதி பெற்ற பிறகே அரசு ஊழியர்களிடம் விசாரணை!

அரசு ஊழியர்கள் மீது லஞ்சம் மற்றும் ஊழல் புகார் வந்தால், அரசு அனுமதி பெற்ற பிறகே, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீது, லஞ்சம் மற்றும் ஊழல் புகார் வந்தால், அரசு அனுமதி பெற்ற பிறகே, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.

.
ஆனால், பிற அரசு ஊழியர்கள் மீது, புகார் வந்ததும், அரசு அனுமதியின்றி, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக, சிலர், உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில், பொது நல வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில், தமிழக அரசு, நேற்று முன்தினம், புதிய அரசாணை பிறப்பித்து உள்ளது.
அதில் கூறியுள்ளதாவது:
அரசு ஊழியர்கள் யார் மீதேனும், லஞ்சம் மற்றும் ஊழல் புகார் வந்தால், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்குனரகம், புகாரை லஞ்ச ஒழிப்பு கமிஷனுக்கு அனுப்ப வேண்டும்.
கமிஷன், புகார் பதிவு செய்ய, அரசிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி கிடைத்த பின், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்குனரகம், விசாரணை நடத்தலாம். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க மட்டுமே, அரசிடம் அனுமதி பெற வேண்டும் என இருந்தது. இப்போது, அரசு ஊழியர்கள் மீதும் வழக்கு தொடர அனுமதி பெற வேண்டும் என, புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போலி சான்றிதழ்கள் தடுக்க 'ஸ்மார்ட்' எண் : பள்ளி கல்வித்துறை அதிரடி
போலி சான்றிதழ்களை தடுக்க, இந்த ஆண்டு முதல், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு சான்றிதழ்களில், ஆதார் அடிப்படையிலான, 'ஸ்மார்ட்' எண் வழங்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ்களில் போலிகள் அதிகரித்துள்ளன. போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த, ஐந்து ஆசிரியர்கள் சமீபத்தில், 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டனர்; மற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து வருகிறது. போலி சான்றிதழ் பிரச்னையை தடுக்க, புதிய அடையாள எண் திட்டத்தை, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. இதன்படி, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு சான்றிதழ்களில் நிரந்தர, 'ஸ்மார்ட்' எண் தரப்படும்.
டாட்டா சங்கம் சார்பில் அடுத்த வாரம் தேர்தல் ஆணையத்தின் மீது பொது நல வழக்கு தாக்கல் ..

2016 ஆண்டில் தமிழ்நாட்டின் சட்ட மன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது .தேர்தல் பணிக்கு 3,50,000 ஆசிரியர்கள் பயன்படுத்த உள்ளனர்.தேர்தல் பணியின் போது ஆசிரியர்களின் நலன் சார்ந்து 10 கோரிக்கைகள் 28.12.2015 அன்று தலைமை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பபட்டு உள்ளது.இதன் மீது விரைவில் தேர்தல் ஆணையம் ஆணை பிறப்பிக்க பொது நல வழக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட உள்ளது .என்பதை மகிழ்சியுடன் தெரிவிக்கிறேன் .என்றும் ஆசிரியாரின் நலனுக்காய் உண்மையாய் உழைக்கும் சங்கம் டாட்டா மட்டுமே.!!!!!





போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான சம்பளம், புதிய சம்பள கொள்கை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் இன்று
(பிப்ரவரி 1ம் தேதி) மூன்றாவது நாளை எட்டியுள்ளது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் இன்றைய ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்து, அரசின் கருவூலத்தில் செலுத்தும்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
TATA-சங்கம் -மாநில செயற்குழு -கூட்டம் 

நாள் ;- 07-02-2016   /  ஞாயிற்று க்கிழமை 

இடம் ;- புத்தா ஹால் --பேருந்து நிலையம் எதிரில் .திருவண்ணா மலை .

நேரம் ;-  காலை 10.00 மணி /

அனைத்து மாநில பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் வட்டார பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும் ...
                       
  இவன் ...டாட்டா மாநில அமைப்பு

மக்கள் தொகை கணக்கு ஆசிரியர்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 6 வரை அனுமதி....

ஜாக்டோ’ - 3 நாள் மறியல் .டாட்டா சங்கத்தின் நிலைப்பாடு ....

டாட்டா    சங்கத்தின் சார்பாக   இந்திய  உச்ச நீதிமன்றத்தில் ஊதிய பிரச்சனைக்கு தீர்வு காண   வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 2015 டிசம்பர் மாதம் விசாரணை நடைபெற்றது .அதில் நமது ஊதிய பிரச்சனை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்கப்பட்டு உள்ளது .மேலும் 6 வது ஊதிய குலுக்கு எதிராக 159 வழக்குகள்  உச்ச நீதிமன்றத்தில்  நிலுவையில் உள்ளதாக நிதி துறை தெரிவித்து உள்ளது .இந்த நிலையில் டாட்டா மாவட்ட பொறுப்பாளர்களிடம்  \''ஜாக்டோ’''   அமைப்பில் இருந்து ஏவரும் போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு கொடுக்க வில்லை .மேலும் தற்போதைய நிலையில் காலம் கடந்த போராட்டம் வெற்றி தராது என்பதாலும்  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் ஊதிய மாற்றம் சாத்தியம் இல்லாதது ஆகும் .டாட்டா சங்கம் சட்ட போராட்டம் மிக வலுவாக நடத்தி வருவதாலும் நடைபெற உள்ள போராட்டத்தில் கலந்து கொள்ளாது....

                                                                                            இவன் ....

                                                                            டாட்டா மாநில அமைப்பு

            

     

பள்ளிக்கல்வி - அரசு/நிதிஉதவி பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாதோர் வெளிநாடு செல்ல பள்ளிக்கல்வி இயக்குனர் அனுமதி பெற்றபின்னரே விடுப்பு அளிக்க வேண்டும் - இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்..........

6 வது ஊதிய குழு ஊதிய பிரச்சனைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 159  வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல் ...


Treasury மூலம் பெறப்படும் தங்களது ஊதியத்தின் ANNUAL statement Details



TPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறியலாம்

TO GET ANNUAL PAY DRAWN DETAILS FOR IT PURPOSE CLICK HERE...

Enter your details :- 
* Employee code (TPF/CPS number)
* Suffix (EDN)
* Date of birth(DD/MM/YYYY)


Get your
* pay slip
* annual salary statement
* pay drawn particulars...

T.A.T.A .Sangam manu....