PAGEVIEWERS

பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு இல்லை: சென்னை உயர் நீதிமன்றம்

பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில்  மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கத் தலைவர் எஸ்.சண்முகம் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் பதவி உயர்வுகளில் இந்த ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது என்றும், ஆகவே பதவி உயர்விலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி கே.சந்துரு, வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சட்டம் உள்ளது எனவும், ஆனால் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சட்டம் எதுவும் இல்லை என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment