தமிழக சட்டமன்றத்தில் பேரவை விதி 110-ன் கீழ் இன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர்பள்ளிக்கல்வித்துறையின் வளர்ச்சிக்காக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் 2013-14ம்கல்வியாண்டில் புதியதாக 54 தொடக்கக் பள்ளிகள் துவக்கவும், அப்பள்ளிகளுக்கு
தேவைகேற்ப ஒரு தொடக்கப்பள்ளிக்கு ஒரு தலைமையாசிரியர் வீதம் 54 தொடக்கப்பள்ளி தலைமைஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 54 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தவும்.
50 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி, அப்பள்ளிக்களுக்கு தேவையான 50உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களும் மற்றும் ஒரு உயர்நிலைப் பள்ளிக்கு 5 பட்டதாரிஆசரியர் வீதம் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் 2013-2014ம் கல்வியாண்டில் 100 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம்உயர்த்தவும், மேல்நிலைப் பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 100தலைமையாசிரியர் பணியிடங்கள் மற்றும் ஒரு மேல்நிலைப் பள்ளிக்கு 9 முதுகலை ஆசிரியர் பணியிடம்வீதம் 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்து ஆக மொத்தம் 1408 ஆசிரிய பணியிடங்கள்தோற்றுவித்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்
No comments:
Post a Comment