PAGEVIEWERS

TATA-மாநில பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் 08.04.2014 அன்று தொடக்கக் கல்வி இயக்குனர் .மதிப்பு மிகு ,இளங்கோவன் அவர்களுடன் சந்திப்பு 

 கோரிக்கை விபரம் ;

1) இடை நிலை ஆசிரியருக்கு ஊதிய முரண்பாடு ஏற்பட காரணமான தொடக்கக் கல்வி சார் நிலை பனி விதிகள் அ .ஆ .எண் ;1383/கல்வி / நாள் ;23.08.1988 .ல் விதி 6 ன் படி கல்வி தகுதி SSLC ,சான்றிதழ் படிப்பு .எனவும் விதி 9 ன் படி நியமனம் ஒன்றிய அளவிலானது எனவும் உள்ளதை இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 ன் படியும் உச்ச நீதி மன்ற தீர்ப்பு படியும் மாற்றி அமைக்க வேண்டும் என்றோம் .அதற்கு அவர் இதை கூறி மறுக்க வில்லை அது வேறு காரணம் நானும் திரு.கிருஷ்ணன் .இ .ஆ .ப .அறிக்கை படித்தேன் என்றார் .நாம் RTI மூலம் பெற்றதை காட்டி விளக்கியும் முழு மனதாக ஏற்க வில்லை .

2 ) திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து உயர் கல்வி -13 பேரின் பின்னேர்ப்பு -ஊக்க ஊதிய பெற இயக்குனர் அலுவலகத்தில் 6 மதமாக நிலுவையில் உள்ள கோப்புகளை அனுமதி வழங்கி அனைத்து மாவட்டத்தில் உள்ள  ஆசிரியர்களும்   பயன் அடையும் வகையில் பொதுவான தெளிவுரை ஆணை வழங்கிட வேண்டும் .

3 ) கிருஷ்ணகிரி - ஊத்தங்கரை ஓன்றியத்தில் B. Lit தகுதியில் பதவி உயர்வு பெற்ற 9 ந .நி பள்ளி .தலைமை  .ஆசிரியர்களுக்கு   பின் B.Ed  படித்ததற்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் .இது போல் அனைத்து மாவட்டத்தின் ஆசிரியர்களும் பயன் அடையும் வகையில் பொதுவான தெளிவுரை ஆணை வழங்கிட வேண்டும் .

4 ) திருச்சி -முசிறி  ஒன்றிய AAEEO ஆசிரியர்களுக்கு உரிய காலத்தில் பண பலன் பெற்று வழங்கப்படாதது குறித்து தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களிடம் புகார் தெரிவிக்கப் பட்டது .உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்கள் .

5  )  திருநெல்வேலி மாவட்டம் -மானூர் -ஒன்றியம் -திருமதி .ராஜா மணி அமலி ராணி   அவர்களுக்கு வயது தளர்வு ஆணை பெற இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பப்ப பட்ட பணிப்பதிவேடு 4 வருடமாக ஆணை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது அதனால் 4 வருட ஊதிய உயர்வும் , சரண்டர் பணபலன் பெற முடியாமல் உள்ளது .விரைவில் ஆணை வழங்கி கோப்புகள் அனுப்பப்படும் என்றார்கள் .

6 )    திருநெல்வேலி மாவட்டம் -ஆலங்குளம்  -ஒன்றியதில்  T.D.T.A. பள்ளியில் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற திரு.டேனியல் அவர்கள் கையூட்டு  AEEO,DEEO க்கு கொடுக்காத காரணத்தால் 9 மாதம் ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது விரைவில் ஊதியம் பெறவும் த .ஆ . பணியிட ஒப்புதல் வழங்கிடவும் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம் .

7 ) தமிழ் நாட்டில் 80% பள்ளிகள் ஓட்டு கட்டடத்திலும் ,60 % பள்ளிகள் மின்சார வசதி இல்லாமலும்   மின்தடை காரணமாகவும் அதிகரிக்கும் வெயிலில் மாணவ குழந்க்தைகள் பாதிக்கப்படுவதால் RTE சட்ட படி வேலை நாள் 200 ஆக குறைத்திட வேண்டும் என கேட்டுக்கொண்டோம் ,

8 ) CRC பயிற்சி நாளை பணி நாளக ஏற்றது போல் தேர்தல்  பயிற்சி நாளையும் ,வாக்குபதிவு நாள் ,அதற்கு முந்தய  நாளையும் பணி நாளக அல்லது 4 நாள் ஈடு செய் விடுப்பு வழங்கிட இயக்குனர்,பள்ளி கல்வி செயலாளர் ,தேர்தல் ஆணையர் ஆகியேரிடம் மனு நேரில் கொடுக்கப்பட்டது .

9 )  திருநெல்வேலி மாவட்டம் -களக்காடு   -ஒன்றியதில் UASS துவக்கப்பள்ளி த .ஆ  பணிபுரிந்த திருமதி .யுனைசி கிரேனா அவர்களை முறைகேடாக நிரந்தர பணி நீக்கம் செய்து 4 வருடமாக நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் கல்வி துறை இயக்குனர் அலுவலகத்தில் பணி ஆணை வழங்கும் வரை 20.05.2014 அன்று முதல் காலவரை யற்ற போராட்டம் TATAசங்கத்துடன் பதிக்கப்பட்ட ஆசிரியரின் குடும்பம்,குழந்க்தைகளுடன் நடைபெறும் .

10 ) சேலம் -ஏற்காடு -நல்லூர் -பள்ளி ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட 17 எ  ஆணை ரத்து செய்திட மறு விசாரணை செய்திட வேண்டும் .மேலும் தாரமங்கலம் AEEO மீது துறை நடவடிக்கை எடுக்க மனு கோடுக்கப்பட்டது .

No comments:

Post a Comment