பொதுமாறுதலில் காலிப்பணியிடங்கள் மறைக்கப்படுவதை தடுக்க இயக்குனர் அலுவலகம் முற்றுகை ...
நாள் ; 20.05.2014 . நேரம் ; காலை 11 மணி முதல் ..
இடம் ; DPI . நுங்கம் பாக்கம் ,சென்னை -6.
அன்பார்ந்த ஆசிரியர்களே கடந்த 2005 முதல் கலந்தாய்வு முறைக்கு வேட்டு வைக்கும் விதமாக தொடர்ந்து காலிப்பணியிடங்கள் மறைக்கப்பட்டு கையூட்டு கொடுக்கும் ஆசிரியர்களுக்கு ரூ . 8 லட்சம் வரை தொடர்ந்து விற்கப்பட்டு வருகிறது .
இதை தடுக்க வேண்டி தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் பல தகவல்களை சேகரித்து கடந்த 2010 முதல் TATA சங்கம் மூலம் போராடி வருகிறோம். மேலும் மதுரை உயர் நீதி மன்ற கிளையில் வழக்கும் தொடர்ந்து உள்ளோம் .மேலும் பல புகார் காரணமாக கடந்த 2013 செப்டம்பரில் ஊழல் தடுப்பு காவல் துறையில் அமைச்சர் மற்றும் 194 அலுவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது . மேற்படி வழக்கு தற்போது முறையான விசாரணையின்றி ஊழல் வாதிகளுக்கு சாதகமாக உறங்கும் நிலையில் உள்ளது .
ஊழலுக்கு எதிராக நான் போராடி வருவதால் திருநெல்வேலி DEEO அலுவலகமும் எனது மனைவி பணி செய்த தனியார் பள்ளி நிர்வாகமும் சேர்ந்து 2011 முதல் எனது மனைவியை நிரந்தர பணி நீக்கம் செய்து என்னை பழிவாங்கியது .மேற்படி பணி நீக்கம் ரத்து செய்திட திருநெல்வேலி DEEO அலுவலகத்திற்கு மனு செய்தேன். மேற்படி அலுவலகம் நிர்வாகத்திடம் பணம் பெற்றுக்கொண்டு பணி நீக்கத்தில் தலையிட கல்வித்துறைக்கு உரிமை இல்லை என அறிவித்து விட்டது .தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்பு உள்ளது என்பதால் தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களிடம் சுமார் 80 மனுக்கள் கொடுத்தும் நீதி வழங்காமல் என்னை கல்வி துறை பழிவாங்கி வருகிறது .
எனக்கு நீதி கிடைக்க வேண்டியும் நிர்வாகம் என்றப்பெயரில் காலிப்பணியிடங்கள் விற்பனை செய்யப்படுவது நிறுத்தப்பட்டு ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு நடத்திட வேண்டியும் மேற்படி போராட்டம் நடைபெற உள்ளது .
கல்வித்துறையில் ஊழல் ஒழிக்கப்பட ஆசிரியர்களே மே 20 ல் திரண்டு வாருங்கள் .
தொடர்புக்கு ; கிப்சன் . TATA.பொதுசெயலாளர் 9443464081//9840876481.

No comments:
Post a Comment