PAGEVIEWERS

அழைப்பு-வாருங்கள் பிச்சாவரத்திற்கு!...


பிச்சாவரத்தில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் பொருட்டு ஒவ்வொரு வருடமும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தால் 'விடியல் விழா' கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவின் போது நாம் இந்த பகுதியில் காலம் காலமாக வசித்து வரும் இருளர் பழங்குடிகள் நண்டு மற்றும் இறால் பிடிக்கும் நுட்பத்தை காணலாம். படகுகளில் மிதந்தபடியே நடக்கும் நாட்டுப்புற இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்கலாம்
இரவு பரிமாறப்படும் சுவையான கடல் உணவுகளை சாப்பிடலாம், அதிகாலையில் எழுந்து கண்கள் மகிழ சூரிய உதயத்தையும், பறவைகளையும் காணலாம்.
பிச்சாவரம் செல்ல உகந்த நேரம்:
செப்டம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலம் பிச்சாவரம் வர உகந்ததாக இருக்கிறது. அதிலும் நவம்பர் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் இங்கு பறவைகள் மிக அதிக அளவில் புலம்பெயர்ந்து வருவதால் அந்த மாதங்களில் இங்கே நிச்சயம் சென்று வாருங்கள்.
எப்படி அடைவது: தேசிய நெடுஞ்சாலை எண் 45A-ல் அமைந்துள்ளதால் கடலூரை சாலை வழியே எளிதில் அடைந்து விட முடியும். அருகிலுள்ள நகரங்களான சென்னை, சேலம், திருச்சி, கோவை மற்றும் திருவண்ணாமலை ஆகிய நகரங்களிலிருந்து பேருந்துகள் கடலூருக்கு எப்பொழுதும் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் பெங்களூரிலிருந்தும் சில பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. எங்கு தங்குவது: கடலூர் மாவட்டத்தில் குறைந்த விலையில் நல்ல வசதிகளுடன் கூடிய அறைகள் வாடகைக்கு கிடைக்கின்றன. கடலூரில் இருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.
cuddalore, nature, ecotourism, tamil nadu English summary Pichavaram Mangrove forest - A natural wonder in Tamil Nadu Pichavaram Mangrove forest is a natural wonder in Tamil Nadu.It is the Second largest mangrove forest in the world. Lets take a one day trip to Pichavaram.

No comments:

Post a Comment