நல்ல பயோடேட்டாவைத் தயாரிப்பது எப்படி? யோசனை கூறவும்.
இன்றைய போட்டிச் சூழலில் ஒரு பணிக்கு பலர் விண்ணப்பிக்கிறார்கள். அனைவரையும் அழைத்து அவர்களை நேர்காணல் செய்து வேலை தருவது என்பது சாத்தியமில்லை.இதனால் பல நிறுவனங்களும் முதற்கட்டத் தேர்வாக பயோடேட்டாவைத் தான் பரிசீலித்து விண்ணப்பித்தவர்களை சுருக்கி சிலரை மட்டும் நேர்முகத் தேர்வுக்கோ போட்டித் தேர்வுக்கோ அழைக்கிறார்கள். எனவே Resume எனப்படும் பயோடேட்டாவானது நமது பணிக்கான அடிப்படையாக அமைகிறது. எப்படி இதைத்தயாரிக்கலாம்?
* நீங்கள் நுழைய விரும்பும் துறை சார்ந்த உங்களது அறிவுத் திறன்களை முறைப்படி வரிசைப்படுத்துங்கள். உங்களது பயோடேட்டாவின் ஆரம்பத்திலேயே துறை சார்ந்த உங்களது திறன்கள் குறிப்பிடப்பட வேண்டும். உங்களது பயோடேட்டாவை பரிசீலிக்க இருப்பது அத்துறையைச் சேர்ந்த திறம்படைத்த ஒருவர் தான். எனினும் பொதுவாக இது போன்றவரை நமது பயோ டேட்டா சென்றடைவதற்கு முன்பு அவை பல்வேறு நபர்களாலும் "கீ வேர்ட் சர்ச்"மூலமாகவும் வகைப்படுத்தப் படுகின்றன. எனவே சரியான வரிசைப்படுத்தவது என்பது மிக முக்கியம்.
* கல்வித் தகுதியைக் குறிப்பிடும் போது நீங்கள் விண்ணப்பிக்கும் பதவிக்குத் தொடர்புடைய தகுதியை அதிகமாகவும் தொடர்பில்லாத தகுதிகளை குறைந்த அளவிலும் பயோ டேட்டாவில் குறிப்பிடுவது அவசியம். தற்போது விண்ணப்பிக்கும் பணி போன்ற அனுபவத்தை ஏற்கனவே நீங்கள் பெற்றிருந்தால் அதை மறக்காமல் இப்போது பயோ டேட்டாவில் குறிப்பிட வேண்டும். ஆண்டு வாரியாக அனுபவத்தைக் குறிப்பிடுவது அவசியல்ல என்பதை உணருங்கள்.
* அனுபவத்தை எண்ணிக்கையாகக் குறிப்பிடுவது தவறு. ஆனால் அந்த அனுபவத்தில் நீங்கள் செய்துள்ள சாதனைகள் அல்லது அடைந்த இலக்குகளை நீங்கள் எண்களாகக் குறிப்பிடலாம். நிதி நிலைமை, பட்ஜெட், நிதி சேமிப்பு, கால அவகாசம், செயல் திறன் முன்னேற்றம், பெரிய பிரச்னைகளை களைந்தது, இயந்திரங்களை நிர்வகித்தது, பணியோடு தொடர்புடைய சாதனைகள் ஆகியவற்றை எண்களின் அடிப்படையில் பட்டியிடலாம்.
* பயோடேட்டாவின் வரிகளை வினைச் சொல்லுடன் துவக்கலாம். செயற்தன்மை கொண்டவராகவும் அறிவுத் திறன் மிக்க, பணிகளை
வெற்றிகரமாக முடிக்கக்கூடியவராக வெளிப்படுத்த வேண்டும். தற்போது பணி எதிலும் இருந்தால் அதன் தன்மை பற்றியும் குறிப்பிடலாம்.
* பயோ டேட்டாவின் மூலமாக உங்களை நீங்களே மார்க்கெட்டிங் செய்து கொள்வது மிக முக்கியம். அதை குறைவாக செய்துவிடக் கூடாது. நம்மைப் பற்றி தேவையில்லாமல் உயர்த்திக் கூறுவது எப்படித் தவறோ அது போலவே நமது திறன்களை அடக்கி வாசிப்பதும் தவறுதான். உங்களது பயோடேட்டா தான் உங்களுக்கான ஒரே விளம்பரம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். தற்போது விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தமில்லாத திறனை நீங்கள் பலமாகப் பெற்றிருந்தால், அதையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
* பயோடேட்டா என்பது பொதுவாக சுருக்கமாக இருப்பதே நல்லது. 5 ஆண்டுகளுக்குக் குறைவாக பணி அனுபவம் உள்ளவரது பயோடேட்டாவானது ஒரு பக்கத்திற்குள்ளும் ஆழமான அனுபவம் உள்ளவரது பயோடேட்டாவானது 2 பக்கத்திலும் இருக்கலாம்.
15 ஆண்டு பணி அனுபவம் பெற்றவரது பயோடேட்டாவõனது 3 பக்கத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். நீங்கள் வெற்றிகரமாக செயல்படுத்திய புராஜக்ட் பற்றிக்கூட அதிகமாக எழுதுவதைத் தவிர்க்கவும். A, an, the ஆகிய 3 ஆங்கில ஆர்ட்டிகிள்களை பயன்படுத்த வேண்டாம். இதுபோலவே உங்களைப் பற்றிக் கூறும் போது ஐ என்னும் சொல்லைத் தவிர்க்க வேண்டும்.
* சமூகப் பாதுகாப்பு எண், திருமண விபரம், உடல்நலம், குடியுரிமை, பெற்ற ஸ்காலர்ஷிப்கள், விருதுகள், தொடர்பற்ற வெளியீடுகள், பொழுதுபோக்கு நடவடிக்கைகள், 2வது இமெயில் முகவரி, நிரந்தர முகவரி, பரிந்துரையாளர் விபரங்கள், முந்தைய சம்பளம் போன்றவற்றை தவிர்க்கலாம்.
* உங்களது பயோடேட்டாவை உண்மையிலேயே பரிசீலித்து விமர்சிக்கும் உங்களது நண்பர் ஒருவரைத் தேர்வு செய்து அவரது கருத்துக்களைக் கேளுங்கள்.
* பிழைகளின்றி பயோடேட்டா அமைவதை உறுதி செய்து கொள்ளுங்கள். திரும்ப திரும்ப அதைப் படித்து இதை உறுதிசெய்து கொள்ளலாம்.
* நல்ல வெள்ளைத் தாளில் லேசர் பிரிண்டரில் பயோடேட்டாவை தயார் செய்து கொள்ளுங்கள். கையெழுத்தில் அதை தயாரிக்க வேண்டாம். டைப் செய்வது, டாட்மேட்ரிக்ஸ் பிரின்டிங், இங்க்ஜெட் பிரின்டிங் போன்றவை பயோடேட்டா தயாரிப்பதில் தவிர்க்கப் பட வேண்டும். ஸ்பெஷல் பாண்ட் பேப்பர்களில் அதை தயாரிக்க வேண்டாம்.
வண்ணத்தாள்களில் எழுதுவதும் கூடாது. பொதுவாக நமது பயோடேட்டாக்கள் பல தடவை ஜெராக்ஸ் எடுக்கப்படலாம். பேக்ஸ் செய்யப்படலாம். ஸ்கேனிங் செய்யப் படலாம். எனவே தாளின் தரமும் வண்ணமும் (வெள்ளை மட்டுமே போதும்) மிக முக்கியம்.
No comments:
Post a Comment