PAGEVIEWERS

இன்றைய01-08-2015 உண்ணாவிரதக் கூட்டத்தில் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் வெளிப்படையாக செய்தனர். ஆசிரியர்களின் ஊதிய பிரச்சினை அரசியலாக்கப்பட்டதற்கு யார் காரணம்...?
ஊடகங்கள், ஆசிரியர்கள் ஊதிய உயர்வுக்காக போராடுவதாக செய்திகள் பரப்புகின்றன.
நாங்கள் ஊதிய உயர்வுக்காக போராடவில்லை... மாதம் 10,000 த்துக்கும் மேல் இழந்து வருகிறோம். எங்கள் இழைப்பிற்காக தான் போராடுகிறோம்.
எங்கள் கல்வித்தகுதி 10th எனக் கூறி வழங்கிவரும் 2800 தர ஊதியத்தை, எங்கள் உண்மையான கல்வித்தகுதி +2 with Diploma, அதற்கு வழங்க வேண்டிய 4200 தர ஊதியம் பெற... எங்கள் தன்மானம் உயர்வுக்காவே போராடுகிறோம.

இந்த நிலைக்கு யார் காரணம்?
2009 ல் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியக்குழுவில் பெரும் இழைப்பு ஏற்பட்ட பிறகு, அன்று நடத்தப்பட்ட போராட்டங்களினால்...
மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்காமல், 1.86 மட்டும் வழங்கி தற்காலிகமாக சப்புகட்டு கட்டியது... அன்றைய அரசா...? இல்லை... 1.86 வாங்கினால் ஊதியம் மட்டும் உயரம், தர ஊதியம் மற்றும் Entry pay குறைவது சங்க நிர்வாகிக்களுக்கு தெரியாமல் போயிற்றா...?

அதைத்தொடர்ந்து நடந்த போராட்டங்களினால் SP 500 மட்டும் வழங்கியது அரசின் தவறா..? இல்லை... அதற்கும் சம்மதித்தது சங்கங்களின் தவறா...?
பிறகு இலகரங்களில் ஆசிரியர்களை சென்னையில் திரட்டி நடத்தப்பட்ட பேரணியின் பலனாக... SP 500வுடன், 250ஐ மட்டும் சேர்த்து, அதை 750 PP ஆக வழங்கியது அரசின் தவறா... அதை பெற்றுக்கொண்டு வெற்றி எனக் கொண்டாடியது சங்கங்களின் கையாளாகாதா தன்மையா...?
2009லிருந்து எத்தனை போராட்டங்கள்...
ஊர்வலங்கள்... உண்ணாவிரதங்கள்... போதும் இவையெல்லாம்...
அனைத்து சங்கங்களும் ஒன்றுபட்டு ஒரு வலுவான போராட்டம்... அது வேலைநிறுத்தப் போராட்டமாக இருந்தால் நலம்...

என்று மாறும் எங்கள் நிலை...???
சம்பத் இடைநிலை ஆசிரியர்
வேலூர். 7845964964

No comments:

Post a Comment