PAGEVIEWERS

தூத்துக்குடி மாவட்ட DEEO அலுவலகத்தில் டாட்டா சங்கம் 07.03.2016 அன்று உள்ளிருப்பு போராட்டம் .

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் ஒன்றியத்தில் கடந்த 2015 மார்ச் மாதம் ஒரு தனியார் பள்ளி அரசு பள்ளியாக ஏற்று அரசு ஆணை வெளியிடப்பட்டு உள்ளது.அப்பள்ளிக்கான அரசு ஆணை வெளியிட்ட நாளில் ஒரு ஊராட்சி ஒன்றிய பள்ளி தா.ஆ. அவர்களில் ஒருவர் நிர்வாக காரணமாக் பணியிறக்கம் செய்யப்பட்டார் .ஆனால் DEEO அவர்கள் விதிகளுக்கு புறம்பாக ஏற்பு செய்யப்பட்ட தனியார் பள்ளி பெயருக்கு கீழ் ஊராட்சி ஒன்றிய பள்ளி தா.ஆ பெயர் வைத்து உள்ளார்கள் .இது முதல் தவறு ஆகும் .

2.  தனியார் பள்ளி அரசு பள்ளியாக ஏற்று அரசு ஆணை வெளியிடப்பட்டு உள்ளத்தில் ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியரின் பதவி உயர்வு பட்டியலுடன் இணைக்க ஆணை எதுவும் பள்ளி கல்வி செயலாளரிடம் முறைப்படி அனுமதி பெறாமல் DEEO அவர்கள் விதிகளுக்கு புறம்பாக தன்னிச்சையாக  ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியரின் பதவி உயர்வு பட்டியலுடன் இணைத்து உள்ளார்கள் .

3.அரசு பள்ளிக்கு மாவட்ட அளவில்தான் தனி பேணல் ( பதவி உயர்வு ) தயாரிக்க வேண்டும்.
4.ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியரின் பதவி உயர்வு பட்டியல் ஒன்றிய அளவில் தயாரிக்க வேண்டும் .

இந்த விதி மீறல்களை கண்டித்தும் பேனலை மாற்றிட கோரி 50 ஆசிரியர்கள் மனு கொடுத்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்காததால் டாட்டா சங்கம் சார்பாக தூத்துக்குடி மாவட்ட DEEO அலுவலகத்தில் டாட்டா சங்கம் 07.03.2016 அன்று உள்ளிருப்பு போராட்டம்  நடைபெற உள்ளது .வாரீர் !!!!வாரீர் !!!!வாரீர் !!!!....

இவன்  
 ...தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர்கள் ..
தலைமை ;- பொதுசெயலாளர் .கிப்சன் .அவர்கள் .
முன்னிலை ;- திரு.பால முருகன் 9443159485 மற்றும் திரு,செல்வகுமார் .9750057741.
மற்றும் விளாத்திகுளம் ஒன்றிய ஆசிரியர் பெருமக்கள் ...
 

No comments:

Post a Comment