PAGEVIEWERS
தமிழக அரசுத்துறைகளில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில், இந்த ஆண்டு மட்டும், 1.27 லட்சம் பேர் ஓய்வு பெறுகின்றனர். இதில், 52 ஆயிரம் ஆசிரியர்களும் அடங்குவர். இதனால் அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிரடியாக அதிகரிக்கிறது.
தமிழகத்தில் மொத்தம், 142 அரசுத் துறைகள் உள்ளன. கடந்த, 1996ம் ஆண்டு, ஜனவரி, 1ம் தேதி எடுக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கான கணக்கெடுப்பின்படி, 6 லட்சம் ஆசிரியர்கள், 3 லட்சம் அரசு ஊழியர்கள், 1 லட்சம் சீருடை பணியாளர்கள் மற்றும் 2 லட்சம் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளர்கள் என, மொத்தம் 12 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம், 142 அரசுத் துறைகள் உள்ளன. கடந்த, 1996ம் ஆண்டு, ஜனவரி, 1ம் தேதி எடுக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கான கணக்கெடுப்பின்படி, 6 லட்சம் ஆசிரியர்கள், 3 லட்சம் அரசு ஊழியர்கள், 1 லட்சம் சீருடை பணியாளர்கள் மற்றும் 2 லட்சம் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளர்கள் என, மொத்தம் 12 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
புதிய காப்பீடுத் திட்டத்தில் தமிழக அரசின் அரசாணைப் படி மாவட்ட வாரியாக நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய அலுவலர் மற்றும் தொலைபேசி எண்கள்
LIST OF THE NODAL OFFICERS OF THE UIIC LTD. SITUATED IN THE DISTRICT HEADQUARTERS AND TOLL FREE HELPLINE NUMBER
*Annexure-IV LIST OF THE NODAL OFFICERS OF THE UIIC LTD. SITUATED IN THE DISTRICT HEADQUARTERS AND TOLL FREE HELPLINE NUMBER
*Chief Nodal Officer
Dr.S.Valaguru
Regional Manager
94428 84340
Nodal Officer*Annexure-IV LIST OF THE NODAL OFFICERS OF THE UIIC LTD. SITUATED IN THE DISTRICT HEADQUARTERS AND TOLL FREE HELPLINE NUMBER
*Chief Nodal Officer
Dr.S.Valaguru
Regional Manager
94428 84340
K.Ramakrishnan
Assistant Manager
94444 18897
ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு: அரசு இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்கவும், ஆசிரியர் நியமனங்கள் இறுதி தீர்ப்பிற்கு உட்பட்டது எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு.
பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் தேர்வை, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் வழிமுறைப்படி நடத்தக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவுக்குப் பதிலளிக்கும் படி, அரசுக்கு, "முதல் பெஞ்ச்" உத்தரவிட்டது. "மனு மீதான, இறுதி உத்தரவைப் பொறுத்து, நியமனங்கள் அமையும்" எனவும் உத்தரவிட்டது.
சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் எம்.பழனிமுத்து என்பவர், தாக்கல் செய்த மனு: ஆசிரியர் தகுதி தேர்வில், மூன்று லட்சத்து, 73 ஆயிரத்து, 696 பேர், கலந்து கொண்டனர். பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில், 8,808 பேர், தேர்ச்சி பெற்றனர்.
தேர்வு முடிவை, ஜாதி வாரியாகவும், பாட வாரியாகவும், வெளியிட தவறி விட்டனர். இதில், உள்நோக்கம் உள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மாற்று திறனாளிகளுக்கு, உண்மையை மறைத்துள்ளனர்.
கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதம், ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில், ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், தகுதி மதிப்பெண்ணில், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்று திறனாளிகளுக்கு, ஐந்து சதவீதம் தளர்த்தப்பட்டது. அதன்படி, ஆந்திராவில், 10 சதவீதம், ராஜஸ்தானில், ஐந்து சதவீதம், தளர்த்தப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், தகுதி மதிப்பெண் தளர்வு பற்றி, எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலின் வழிமுறைகளை பின்பற்றாமல், தேர்வு நடத்துவது, முடிவை வெளியிடுவது, தவறானது.
தமிழகத்தை கல்வியில் சிறந்த மாநிலமாக்க நடவடிக்கை : முதல்வர் ஜெ. பேச்சு.......
தமிழகத்தை கல்வியில் சிற்ந்த மாநிலமாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். தமிழக அரசு சார்பில் நடைபெறும் ஆசிரியர் பணிநியமன ஆணை வழங்கும் விழாவில் ஜெயலலிதா இவ்வாறு கூறியுள்ளார். 2 முறை தகுதி தேர்வு நடத்தப்பட்டு 20,920 ஆசிரியர்கள் இன்று பணிஆணை பெறுகின்றனர். சத்துணவில் மாற்றம், இலவச சீருடை உள்ளிட்ட பல திட்டங்கள் இதற்காக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒன்றரை வருடத்தில் 26,220 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். ஆசிரியர்கள் மாணவர்களிடையே தன்னம்பிக்கை ஏற்படுத்த வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளார்.
18382 ஆசிரியராக நியமனம் பெற்றவர்கள் 14-12-2012 வெள்ளிக்கிழமையே பணியிடங்களில் பணியமர உத்தரவு.
புதிய இடைநிலை, பட்டதாரி ஆசிரியராக பணியிடங்களை பெற்ற 18000 ஆசிரியர்களும் தங்கள் பணிநியமன ஆணைகளை வரும் 13ஆம் தேதி சென்னை YMCA மைதானத்தில் நடைபெறும் விழாவில் பெற்றுக்கொண்டு 14ஆம் தேதி வெள்ளிக்கிழமையே தங்கள் பணியிடங்களில் பணிகளில் அமர உத்தரவிடப்பட்டுள்ளது
நந்தனத்தில் நாளை 21 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை: தமிழக முதல்வர் வழங்குகிறார்
கல்வித்துறை வரலாற்றில் ஒரே நேரத்தில் 21 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமனம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் 18,382 பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு
செய்யப்பட்டனர். அவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு விரும்பிய இடங்களை தேர்வு செய்தனர். ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 2308 பேருக்கும் பணி நியமன ஆணை ஒரே இடத்தில் வழங்கப்படுகிறது. மேலும் 92 லட்சம் பள்ளி மாணவ - மாணவிகள் பயன்பெறும் நலத்திட்ட உதவிகளும் தொடங்கி வைக்கப்படுகிறது.
கலர் பென்சில், அட்லஸ், புத்தகப்பை, செருப்பு, சீருடை, க்ரையான்ஸ் போன்ற பள்ளி மாணவர்களுக்கான திட்டங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார். இதற்காக சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிரமாண்ட விழா நடக்கிறது.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் பகல் 12 மணிக்கும் நடக்கும் இந்த விழாவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டு கல்வி திட்டங்களை தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுக்கு நல உதவிகளை வழங்குகிறார்.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட 21 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. விழாவில் 36 ஆசிரியர்களுக்கு மட்டும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பணி நியமன ஆணையை வழங்குகிறார். மீதமுள்ள ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த அமைச்சர்கள் பணி நியமன ஆணையை வழங்குகிறார்கள்.
விழாவிற்கு பள்ளிக் கல்வி அமைச்சர் என்.ஆர். சிவபதி முன்னிலை வகிக்கிறார். தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி வரவேற்புரை நிகழ்த்துகிறார். முதன்மை செயலாளர் சபிதா, பள்ளிக் கல்வி இயக்குனர் கு.தேவராஜன், தொடக்கக் கல்வி இயக்குனர் வி.சி. ராமேஸ்வர முருகன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
இதற்காக 30 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் பிரமாண்ட பந்தல் போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் ஆசிரியர்கள் பஸ்களில் சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்கள். 500-க்கும் மேற்பட்ட பஸ்களில் வரும் ஆசிரியர்கள் 38 பள்ளிகளில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு குளியல் அறை, கழிவறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில் இடை நிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி இன்று காலை 7 மணி வரை விடிய விடிய நடந்து முடிந்துள்ளது. ஒரே நாளில் 9000 ஆசிரியர்கள் கலந்தாய்வில் கலந்து கொண்டு இடங்களை தேர்வு செய்துள்ளது கவுன்சிலிங் வரலாற்றில் இதுவரை இல்லாதது ஆகும்.
ஒரே நாளில், 9,664 இடைநிலை ஆசிரியர்களுக்கு, மாநிலம் முழுவதும், நேற்று பணி நியமன கலந்தாய்வு நடந்தது. இதில் 6,532 பேருக்கு, அவரவர் சொந்த மாவட்டங்களிலேயே இடங்கள் கிடைத்தன.
1,743 பேரின் இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் கேள்விக்குறியா?
தமிழக அரசு 2010-11-ம் ஆண்டுக்கான 1743 ஆசிரியர்களின் பணியிடங்களைத் தோற்றுவித்து 3.6.2010-ம் தேதி அரசாணை (எண் 153) வெளியிட்டது. இதில் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்பட வேண்டியவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி 2011 டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
ஒரு மாத காலத்திலே இந்த பணியிடங்கள் நிரப்பப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பும் வெளியிட்டது. ஆனால் சான்றிதழ் சரிபார்ப்பில் தேர்வானவர்களின் பட்டியல் தயாராக இருந்தும் இது வரை அது வெளியிடப்படாமலே உள்ளது.
3.6.2010-ம் தேதி வெளியிடப்பட்ட அதே அரசாணை எண் 153-ல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடங்கள் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டு, கடந்த வாரத்தில் அவர்களுக்கு பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.
அதன்பின் மார்ச் 2012-ல் அறிவிக்கப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்று அதில் தேர்வானவர்களுக்கு அவசர அவசரமாக சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, ஒரே வாரத்தில் தேர்வானவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றது. 9664 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களைக் கொண்டு நிரப்ப உள்ளதாக கடந்த சில நாள்களுக்கு முன் பத்திரிகைகளில் செய்தியும் வெளியாகி உள்ளது. அப்படியானால் ஏற்கனவே காலியாக உள்ள 1743 பணியிடங்களும் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களைக் கொண்டே நிரப்பப்படும் சூழல் உருவாகி உள்ளது. அப்படியானால், 2011 டிசம்பரில் சான்றிதழ் சரிபார்ப்பில் தேர்வானவர்களின் கதி என்ன.