PAGEVIEWERS


வழக்கறிஞர்களுக்கு 9ம் தேதி தகுதித் தேர்வு

வழக்கறிஞர்களுக்கான தகுதி தேர்வு, இம்மாதம், 9ம் தேதி, சென்னை, திருச்சி, கோவை, மையங்களில் நடக்கிறது. இந்த தேர்வை எழுத 3,500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
சட்டப்படிப்பு முடித்தவர்கள், வழக்கறிஞராக பிராக்டீஸ் செய்ய வேண்டும் என்றால், பார் கவுன்சில் நடத்தும், தகுதி தேர்வில் வெற்றி பெற வேண்டும். இந்த தகுதி தேர்வுக்கு, தமிழகத்தில் படிக்கும் சட்ட மாணவர்கள் மத்தியில், எதிர்ப்பு கிளம்பியது; ஆனாலும், தகுதி தேர்வை கண்டிப்பாக எழுதியாக வேண்டும் என, பார் கவுன்சில் கூறியது.

கடந்த, ஜனவரியில் நடந்த, தகுதி தேர்வில், 3,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தற்போது, இம்மாதம், 9ம் தேதியன்று, தகுதி தேர்வு நடக்க உள்ளது. சென்னையில், நான்கு, திருச்சியில், இரண்டு, கோவையில், இரண்டு, மையங்களில் தேர்வு நடக்கிறது. 

இதுகுறித்து, தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர், டி.செல்வம் கூறியதாவது: தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, நுழைவுச் சீட்டு அனுப்பி வைக்கப்படும். தேவையான தகவலை பார் கவுன்சிலின் இணைய தளத்தில் பெறலாம். 

நுழைவுச் சீட்டு கிடைக்கவில்லை என்றால், தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள், தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள, தேர்வு மையத்துக்கு, ஒரு மணி நேரம் முன்பாக சென்று, அங்குள்ள மேற்பார்வையாளரை அணுக வேண்டும்.

வழக்கறிஞர் அடையாள அட்டையை காண்பித்து, தேர்வு எழுதலாம். தகுதி தேர்வை, நல்ல முறையிலும், பார் கவுன்சில் நிர்வாகிகளின் மேற்பார்வையில், இந்த தேர்வு நடக்கிறது. தேர்வை அமைதியாக நடத்த, போலீசாரின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது. தேர்வை தடுத்து நிறுத்த முயற்சிப்பவர்கள் மீது, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு, டி.செல்வம் கூறியுள்ளார்

No comments:

Post a Comment