PAGEVIEWERS

மொத்தம் 4 மாணவர்களே படிக்கும் நகராட்சி பள்ளியில் 5 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். அருப்புக்கோட்டையில் நகராட்சி நடுநிலை பள்ளியில் தான், இந்த அவலம் நிலவுகிறது அருப்புக்கோட்டை மேலரத வீதியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. 1927 முதல், செயல்பட்டு வரும் இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, கடந்த 4 ஆண்டுகளாக, படிப்படியாக குறைந்து வருகிறது. 
தற்போது, இப்பள்ளியில், முதல் வகுப்பில் 4 பேர் , 6 ம் வகுப்பில் 2 பேர் , 7 ம் வகுப்பில் ஒருவர், 
8 ம் வகுப்பில் 3 பேர்களுமாக, மொத்தம் 10 மாணவர்களே படிக்கின்றனர். இதிலும், 4 மாணவர்கள் மட்டுமே, தினமும் பள்ளிக்கு வருகின்றனர். மொத்த ஆசிரியர்கள் 5 பேர் உள்ளனர். மாணவர்கள் எண்ணிக்கையை விட, 
ஆசிரியர்கள் அதிகமாக உள்ளனர். இப்பள்ளியில், 10 க்கும் மேற்பட்ட வகுப்பறைகள் உள்ளன. பள்ளி முழுவதும் "டைல்ஸ்' ஒட்டப்பட்டு, குடிநீர், கழிப்பறைகள், சத்துணவு மையம் போன்ற தனியார் பள்ளிக்கு 
நிகரான, அனைத்து வசதிகள் இருந்தும், மாணவர்கள் இங்கு படிக்க வருவதில்லை. 

அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர் சாமிநாதன் கூறுகையில், "" இப்பள்ளியில் அனைத்து வசதிகளும் இருந்தும், மாணவர்கள் சேர்க்கை மிக குறைவாக உள்ளது. ஆசிரியர்கள், வீடு வீடாக சென்று, பள்ளியின் தரத்தை பற்றி, பெற்றோர்களுக்கு எடுத்துரைத்து, மாணவர்களை பள்ளியில் சேர்க்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். விழிப்புணர்வு ஊர்வலம் நடத்த வேண்டும். வரும் கல்வியாண்டில், மார்ச் துவக்கத்திலிருந்தே மாணவர்களை சேர்க்க, ஆசிரியர்கள் முனைப்பு காட்ட வேண்டும்,'' என்றார்.

No comments:

Post a Comment