PAGEVIEWERS

இளைஞர்களை ஏளனம் செய்யும் பிற சங்கங்களுக்கு பதிலடி கொடுப்போம்,,,,போராடத்தெரியாதவர்கள் அல்ல நாம் என காட்டுவோம்,,,
இனியும் ஏமாறாதேஇடைநிலை ஆசிரியர் பேரினமே,,,
,இன்னும் யார் உனக்காக போராடுவார்கள் ? என காத்திருக்கிறாய் உனக்காக நீதான் போராட வேண்டும்.நம் முன்னோர்களின் சங்கங்கள் நமக்காக ஒரு அடிமை (இடைநிலை ஆசிரியர்கள்) கூட்டம் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் எப்படி உன் ஊதிய பிரச்சனையை தீர்க்க முன் வருவார்கள்? 2006 ல் நமக்கான ஊதியம் இதுதான் எனத்தெரிந்தபோதில் இருந்து இதோ 8 ஆண்டுகள் ஆகியும் உன் துயரத்தை போக்காதவர்கள் இனியும் உன்னை யோசிப்பார்களா? ஒருவேளை அப்படி செய்தால் அதன் உள்நோக்கம் நாம் குரல் கொடுக்காமல் இருந்தால் இடைநிலை ஆசிரியர்கள் கூட்டம் டாடா வை நோக்கி சென்று விடுவார்களோ ? என்ற அச்சத்தினால்தானேயொழிய நிச்சயம் உன் மேல் உள்ள அக்கறையால் அல்ல.இன்று போராட்டங்களை அறிவிக்கும் இவர்கள் 8 ஆண்டுகளாய் எங்கிருந்தனர்.
இடைநிலை ஆசிரியர்கள் கூட்டம் இப்போது டாடாவை நோக்கி செல்வதாலேயாதான் இந்த அறிவிப்புகள்.
இதை நம்பி இன்னும் அவர்களின் கேடயமாக செயல்படாமல் போர்வீரனாக எழுந்து வா ,,ஒரு பக்கம் சட்ட போராட்டத்தை பார்த்துக்கொள்ள நம் அனுபவமிக்க மாநில தலைவர் கார்த்திகேயன் மற்றும் கிப்சன் இருக்கிறார்,,,களப் போராட்டத்தில் ஒரு கை பார்க்க இளைஞர் பட்டாளமே எழுந்து வா உண்ணாவிரத களத்திற்கு,,,நாளை நமதே,,, 4200 ம் நமதே,,,

No comments:

Post a Comment