PAGEVIEWERS


****இடைநிலை ஆசிரியர்களே சிந்தியுங்கள் சில நிமிடம்*****
சில நிமிட சிந்தனையில் உதிக்கும் உத்தியால் உயரும் நம் மதிப்பு பலரது மத்தியில். மத்திய அரசுக்கு இணையான ஊதியம் நம் கல்வித்துறையில் நம்மைத்தவிர அனைவருக்கும்( 150000 பேர்) தரப்பட்டுள்ளது. நம் பெயர் மட்டும் தனித்து விடப்பட்டுள்ளது. அது ஏன் என்று கேட்டோமா?
கேட்டால் நாம் 10+ சான்றிதழ் படிப்பு எனச் சொல்கிறார்கள் ஊதியக்குழு அறிக்கையில். அதை யாராவது அறிந்தோமா?
என்னவென்றால் உங்களுக்கு கிராமத்தில் அனைத்துப் பொருட்களும் மலிவாகக் கிடைக்கிறது. வீடு விலையில்லாமல் கிடைக்கிறது என்கிறார்களே! நாம் எதிர்த்து குரல் கொடுத்தோமா? ஒரே கேள்வி கேட்கிறேன். பல கிராமங்கள் தோறும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. அதில் பணிபுரியும் பட்டதாரி, முதுகலை மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு (150000 பேர்) மட்டும் மத்திய அரசுக்கு இணையாகக் கொடுதுள்ளீர்களே என வினவினோமா?
ஏன் ஒரே கல்வித்தகுதி, ஒரே பணியிலிருக்கும் இடைநிலை ஆசிரியர்களிலேயே ஊதிய வேறுபாடு உள்ளதை அறிவோமா? இல்லை, அறிநுதும் கேட்டோமா? 31.05.2009 வரை பணியில் சேர்ந்த நம்மில் ஒருவரான இ.ஆ க்கு pay×1.86+2800+750+ இதற்கு D.A எனவும், 01.06.2009 ல் சேர்ந்த அதே இ.ஆ ருக்கு pay +2800+750 + இதற்கு மட்டும் டி.ஏ என மாபெரும் வேறுபாடு உள்ளதே, அதையாவது ஏன் எனக் கேட்டோமா?
ஏன், இந்த விசயம் எல்லாம் மாபெரும் இயக்கங்கள் என மார்தட்டிக் கொள்ளும், நமக்காகவே உழைக்கிறோம் என்று சொல்லிக் கொள்ளும் சங்களுக்குத் ( சங்கம் என்பது உறுப்பினர்களின் உரிமையைக் காக்கவே) தெரியாதா? இல்லை தெரிந்தும் தெரியாதவர் போல் உள்ளனரா? இடைநிலை ஆசிரியர்கள் ரொம்ப நல்லவங்க. கேள்வியே கேட்க மாட்டாங்க. நீட்டற எடத்துல கேட்காம கையெழுத்துப் போடுவாங்க . இ.ஆ கள் இளிச்சவாய ஆசிரியர்களா? ஆனால் அந்த சங்கஙங்கள் நம் ஊதியக் குறைபாட்டைக்களைய அரசிடம் உறுதியாக நிற்க வில்லை. அவர்களுக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்த உடன் விலகிக் கொண்டார்கள் சிலர். பலருக்கு நம்மை எந்தக் கல்வித்திகுதியில் வைத்துள்ளனர் என்பதே தெரியாது?
சமீபமாகப் பணியில் வந்த நான் இவ்வளவு விசயங்கள் அறிந்து கேள்வி கேட்கிறேன் என்றால், அதற்கு காரணம் பேரியக்கங்கள் அல்ல. தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கப்( TAMILNADU ALL TEACHERS ASSOCIATION-TATA) பொதுச்செயலாளர் ஒருவரின் தனிமனிதப் போராட்டமே. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற பல ஆவணங்களைப் பார்த்தே இத்தனை கேள்விகள் உதிக்கின்றன. கேள்வி கேட்டால்தான் விடை கிடைக்கும் தோழர்களே! இடைநிலை ஆசிரியர்கள் (2800 GP) அனைவரும் ஓரணியில் திரள்வோம்! நம் உரிமையைப் பெற்றிடுவோம்!!

No comments:

Post a Comment