PAGEVIEWERS

டாட்டா சங்கத்தால் மட்டுமே ஊதியம் 9300 + 4200 என மாற்றிட முடியும்...W.P.NO.1612/2015.நீதிமன்ற ஆணை

இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சனைக்காக டாட்டா சங்கம் மட்டுமே உண்மையாக போராடி வருகிறது அது தாங்கள் அறிந்ததே ,
நமது ஊதிய மேல் முறையீட்டு வழக்கு பிப்ரவரி  மாதம் 2015 மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்டது .W.P.NO.1612/2015. அந்த வழக்கு நமது ஊதிய பிரச்சனைக்காக ஒய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அவர்கள் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்திட வேண்டும் ,அங்கு நமது ஊதிய பிரச்சனை விரிவாக விசாரிக்கப்பட்டு ஊதியத்தை 1.1.2006 முதல் அனைத்து இடைநிலை ஆசிரியருக்கும் 9300+4200 என மாற்றி அமைத்திட அரசுக்கு உத்தரவிட வழக்கு தாக்கல் செய்யப்பட்டது .மேற்படி வழக்கில் நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க மனு செய்து மிக குறுகிய காலம் தான் ஆகி உள்ளது .எனவே மேற்படிஊதிய வழக்கு சிறிது காலம் கழித்து தாக்கல் செய்திட நீதிபதி அவர்களால் 10.02.2015 ஆணை 
வழங்கப்பட்டது .மேலும்   ஊதிய பிரச்சினை சார்ந்த கடிதம் 8.3.2015 அன்று ஊதிய குறை தீர்வு ஆணையம் "தலைவர் .ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி .திரு .வெங்கடாசல மூர்த்தி அவர்களிடம் இருந்து வர பெற்று உள்ளன .இதன் அடிப்படையில் மேல் முறையீட்டு மனுவை ஒய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அவர்கள் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்திட வேண்டும் என மீண்டும் நமது ஊதிய வழக்கு வருகிற வாரம் விசாரணைக்கு வர உள்ளது .இதற்காக இன்று  
( 04.04.2015 ) பொது செயலாளர் கிப்சன் மற்றும் மாநில பொருளாளர் திரு.தமரைவேல் மற்றும் சிவகங்கை மாவட்ட பள்ளி கல்வி செயலாளர் எட்வின் மற்றும் பலர் நமது முத்த வழக்கறிஞர் திரு.அஜ்மல் கான் அவர்களை சந்தித்தோம் .அவர்கள் வருகிற வாரம் வழக்கு விசாரணையில் ஆஜர் ஆகி வழக்கை வென்று தருவதாக உறுதி வழங்கி உள்ளார்கள் .கண்டிப்பாக டாட்டா சங்கத்தால் மட்டுமே ஊதிய மாற்றம் கிடைக்கும் .டாட்டா வை நம்பி இணைத்திடுவீர் ஊதியத்தை வென்றிடுவோம் .மேலும் வழக்குமூலம் விரைந்து பல்வேறு வெற்றி தொடர்ந்திட நிதி வழங்கிட வேண்டுகிறோம் .
மறவாமல் வருகிற 12.04.2015 அன்று வள்ளுவர் கோட்டம் முன்பு நடைபெறும் உண்ணாவிரதத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம்,

.W.P.NO.1612/2015.நீதிமன்ற ஆணை ...
 

 


 

No comments:

Post a Comment